Sunday, 20 December 2015

உதவிகரம் நீட்டியவர்கள்

              சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய திரை நட்சத்திரங்களை விட, சின்னத்திரை நட்சத்திரங்களை விட அதிகம் களத்தில் இறங்கி உதவி செய்தது "வானொலி அறிவிப்பாளர்கள் தான்" இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய வேண்டிய ஒன்று மழைக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் போனாலும் செய்திகள் மக்களிடையே கொண்டு செல்வது வானொலிதான். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வானொலி அறிவிப்பாளர்கள்தான் அனைத்து வானொலி அறிவிப்பாளர்களுக்கும் நன்றி சொல்வதோடு பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

              முகமறிந்தவர்கள் எல்லாம் வெளியே வராத போது முகமறியாதவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தது உண்மையில் பெருமைக்குரியது. எப்பவும் திரைக்கு பின்னுக்கு இருப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.

Friday, 18 December 2015

சிறுநீரக பிரச்சினைகள் தீர வேண்டுமா?

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? ஆப்ரேஷன் செய்தும் பயனில்லையா? இனி கவலைய விடுங்க. மருந்து இல்ல, மாத்திரை இல்ல, அறுவை சிகிச்சை இல்ல.

Wednesday, 16 December 2015

சென்னையில் உள்ள குப்பைகளை அகற்ற உடனடி தீர்வு

              அரசு நினைத்தால் சென்னையில் உள்ள குப்பைகளை உடனே அகற்றலாம். அதற்கு இரண்டே வழிகள் உள்ளன. 1. அனைத்து குப்பைகளையும் தீ வைத்து கொளுத்துவது. தீ வைத்தால் காற்று மாசுப்படும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடித் தூக்குவார்கள், இதை நாம் விட்டுவிடுவோம். 2 வது வழி சென்னைக்கு வெளியே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஒரு 4-5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இடத்தைப் பிடித்து அதில் ஏரிகள் போன்ற அமைப்பில் இரண்டு குழிகள் (அதாவது பள்ளங்கள்) வெட்டி அதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று இரண்டாக பிரித்து தனித்தனியாக கொட்ட வேண்டும். அதன் அருகிலே கழிவுகளை அகற்றும் ஒரு சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

பசலிக்கீரைக்க கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பசலிக் கீரை  - 1 கட்டு
பாசிப்பருப்பு - 50 கிராம்
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

Thursday, 3 December 2015

சென்னையில் வெள்ளம்

#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது

ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை சென்னையில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ஒரு பெரிய தொகை கொடுத்தால் அதை வைத்து அவர்கள் இழந்ததை மீட்டு கொள்வார்கள்... ஆனால் அரசு என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை. அரிசி கொடுத்தேன், பருப்பு கொடுத்தேன், போர்வை கொடுத்தேன், தலா 10 ஆயிரம் பணம் கொடுத்தேன்னு யாரும் கணக்கு காட்டாமல் இருந்தால் சரி... இதுவரை

Saturday, 28 November 2015

முத்தம்

செவ்விதழ்கள் இரண்டு
சேர்ந்தது இருப்பதைக்கண்டு
சிரிப்பைக் காட்டி
பிரித்து வைக்கிறது பற்கள்
துக்கத்தை தொலைத்துவிட்டு
அழகாய் சிரிக்கிறது
உதடுகள்...!

Wednesday, 25 November 2015

என்கதை எழுதிட மறுக்குது என்பேனா


                  நான் சோகமான கருத்துக்களையே அதிகம் பதிவு செய்கிறேனாம்...! என்ன காரணம் என்று என்னிடம் பலர் கேட்டு இருக்கிறார்கள் ... சிலர் அவர்களாகவே சில காரணங்களை நினைத்துக்கொண்டு இப்படிதான் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Tuesday, 24 November 2015

நம்பிக்கை

            ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அழகான நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி கடவுள் வந்து போவார். அப்படி வரும்போதெல்லாம் நந்தவனத்திற்கு சென்று அங்குள்ள மலர்களைக் கண்டு ரசித்து செல்வார். அப்படி வரும்போதெல்லாம் ஒரு செடியைப் பார்த்து "இது ரொம்ப அழகா இருக்கிறதே" என்று சொல்லிவிட்டு போவார். இதைக் கேட்ட அந்த செடிக்கு ரொம்ப சந்தோஷம். கடவுளின் மீது அதீத அன்பு ஏற்பட்டது அந்த சந்தோஷத்தில் அதிக மலர்களைத் தந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு கடவுள் வேற செடிகளைக் கண்டு ரசித்து அவைகளோடு பேசினார். இதைக் கண்ட அந்த செடி ரொம்ப வருத்தப்பட்டது. நாளுக்கு நாள் மனம் நொந்து வாடிபோனது.

Sunday, 22 November 2015

புதுநிலவு

இருண்ட வானத்தில்
ஒற்றை நிலா
மீண்டும் பிரகாசமாய்
ஜொலிக்கிறது...!

Saturday, 21 November 2015

காயம்

நம்மை வெறுத்தவர்களை விட
நமக்குப் பிடித்தவர்களே
நம்மை அதிகம் காயம் செய்கிறார்கள்..!

Thursday, 19 November 2015

சட்டங்கள் அறிவோம்

பாலியல் குற்றங்கள்:

வன்புணர்ச்சி (Rape) பிரிவு 375

1. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக
2. பெண்ணின் சம்மதம் இல்லாமல்
3. பெண்ணை அச்சுறுத்தி அவள் சம்மதத்துடன்
4. கணவன் என்று தவறாக நம்பி அளித்த சம்மதம் என்பதை அறிந்திருத்தல்
5. பித்து நிலையனரின் சம்மதம்
6. 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதம் (அ) சம்மதமின்றி
7. மனைவி 15 வயதிற்குட்பட்டவர் இல்லாதபோது கொள்ளும் உறவு வன்புணர்ச்சி ஆகாது.

சட்டங்கள் அறிவோம்

தமிழகத்தில் சட்டங்கள் ஆயிரம் இருக்கிறது. ஆனால் அதன்படி நாம் நடப்பதும் இல்லை அதை செயல்படுத்துவதும் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வார்கள் இந்த சட்டங்கள் ஏட்டில் எழுதப்பட்டதாகவே தான் இருக்கிறது. அந்த சட்டங்கள்தான் என்ன அது என்னதான் சொல்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

Friday, 13 November 2015

மழை

மேகத்தை யார் சீண்டியது
அழுகிறது வானம்
நட்புக்கு தொட்டாலே வலிக்கும்...!

Thursday, 12 November 2015

முத்தம்

முத்தத்தின் ஸ்பரிஷம் கூட
இனிமையாகதான் இருக்கிறது
அம்மாவிடம் இருந்து
பெரும் குழந்தைக்கு..!

நினைவு

இயல்பாக இருக்க
முயல்கிறேன் முடியவில்லை
நீ இருந்த இடம்
உனக்குப் பிடித்தவைகள்
எல்லாம் உன்னை
நினைவுப் படுத்திப் போகின்றன ...!


Wednesday, 11 November 2015

செல்ல பிராணி

          நாய்கள் வளர்க்க எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்? i am a dog lover... எனக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். சிறு பிள்ளையில் இருந்து இன்று வரை நாய்கள் என்றால் எனக்கு உயிர். எல்லா விலங்குகளையும் நான் நேசிக்கிறேன் ஆனால் நாய்களுக்குதான் முதலிடம். நாய்கள் போன்ற ஒரு நன்றி உள்ள ஜீவனை இந்த உலகத்தில் எங்கேயும் காண முடியாது. எஜமானின் மீது அக்கறைக் கொண்ட ஒரு உயிர் எதுவென்றால் அது நாய் மட்டும்தான். அதனால்தான் நம்வீட்டு செல்ல பிராணியாக அதை வளர்க்கிறோம்.

Tuesday, 10 November 2015

இதுவும் கடந்து போகும்

நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும் தெரிகிறது
எவ்வளவு தூரம் என்னை
விலக்கி வைத்திருக்கிறாய் என்று
இதுவும் ஒருநாள் கடந்து போகும்..!

Wednesday, 4 November 2015

மழை

வானம் மேக மூட்டத்துடன்
காணப்படுகிறது...
இடி மின்னலுடன் மழை
பெய்யக் கூடும்
அவள் கண்களில்..!

மாதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

ஒருவருடத்திற்கு 12 மாதங்கள் என்று நாம் எல்லோருக்குமே தெரியும். அதற்கான காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு காரணப் பெயர் இருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

Friday, 23 October 2015

அரத்தை, அல்லி / மூலிகை மருத்துவம்

ஓமம்:

ஓமத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக மூன்று வேளைகள் உணவுக்கு முன் உட்கொள்ளவும். குழந்தைகளுக்கு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவிட்டுக் கொடுக்கலாம். கழிச்சல், பால் கக்குதல், அசீரணம் குணமாகும்.

Thursday, 22 October 2015

தமிழகத்திற்கு தண்ணில கண்டமா?

            "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவ பெருந்தகை நமக்கு உணர்த்திருக்கிறார். நமது வாழ்க்கையின் ஆதாரமே நீர் தான். முதன் முதலில் உயிர்கள் தோன்றியது நீரில் இருந்துதான். அப்படிப்பட்ட நீரால் எப்போதும் தமிழகம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் தண்ணீர் விடாமல் கர்நாடகம் பிரச்சனை செய்கிறது இன்னொரு பக்கம் இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து பிரச்சனை செய்கிறது. அன்றாடம் தொலைக்காட்சி செய்திகள் இதைதான் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்னதான் முடிவு?

நிறம் மாறாத பூக்கள் / சிறுகதை

              நிவேதா... அவசர அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒருவித சோகம் குடிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் தன் அன்பான கணவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்ற கவலைதான் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது. அருண்மொழி  நல்ல அழகானவன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான். திடீரென்று ஒருநாள் நெஞ்சுவலி என்று மயங்கி விழுந்தவனை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்று பார்த்தபோது. டாக்டர் சொன்ன விஷயம் இவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இவன் இன்னும் ஆறுமாதத்திற்குதான் உயிரோடு இருப்பார் என்று சொன்னவுடன் இவளுக்கு அந்த நொடியே பாதி உயிர் போய்விட்டது போல் உணர்ந்தாள். தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வலம் வந்தாள். அந்த கவலைதான் இவளுக்கு ஏதோ சுயநினைவு வந்தவளாய் மணியை பார்த்தாள். மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது.

Monday, 19 October 2015

ஆயுத பூஜை

ஆடம்பரத்திற்காக வாங்கப்பட்ட பொருள்கள்
அனைத்தும் தூசித்தட்டி கழுவி காயவைத்து
கொழு பொம்மையாக அடுக்கி வைக்கப்பட்டு
ஆயுத்தமாகிறது ஆயுதபூஜைக்கு..!

Sunday, 18 October 2015

கைரேகை

என் உள்ளங்கை ரேகையாக
உனது நினைவுகள் என்றும் அழியாது
அதனால்தானோ என்னவோ
என் எதிர்காலத்தில்
நீ இருப்பாய் என்று
கணித்து சொன்னது
கைரேகை ஜோசியம்..!

-துவரங்குறிச்சி வீ.சந்திரா


Saturday, 17 October 2015

மின்மினி பூச்சி

ஒரு மின்மினி பூச்சி
கண்சிமிட்டிக் கொண்டே
எனதருகே வருகிறது
நான் உன்னை நினைத்து
ரசித்தபடியே உறங்க செல்கிறேன்..!


Friday, 16 October 2015

வெந்தயம் / மூலிகை மருத்துவம்

வெந்தயம்

இது எந்த நோயை குணமாக்கும்?

விதை:
சிறுநீர்பெருக்கும், வறட்சியகற்றும், காமம் பெருக்கும்.

நிலவும் மலரும் / தொடர்கதை

               காவியா... பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள். வேறொன்றுமில்லை கடிதம்தான் அவளின் அபிமான எழுத்தாளருக்கு இது 25 வது கடிதம் இதுவரை எதற்கும் பதில் வரவில்லை ஆனால் இவளுக்கு சலிப்பதே இல்லை ஏனெனில் இவள் மனது முழுவதும்  பிரபல எழுத்தாளர் கௌரிமனோகரிதான் நிறைந்திருக்கிறார். 24 மணி நேரமும் அவரை பற்றிதான் சிந்தனை, கற்பனையில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கிறாள் அந்தளவிற்கு அவரின் எழுத்து இவளை ஈர்த்திருக்கிறது.

             "ம்ம்ம்... என்ன எழுதலாம்... சரி வழக்கம்போலவே ஆரம்பிப்போம்.  அன்புள்ள அக்காவிற்கு, நான் நலம். நீங்கள் நலம்தானே? அப்புறம் அக்கா... உங்களை அக்கா என்று அழைக்கலாம்தானே. உங்களுடை நாவல் படித்தேன் படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன் இடையிடையே கண்ணீர் சிந்த வைத்துவிட்டீர்கள். கதை மிக அருமை எப்படி இப்படி உங்களால் எழுத முடிகிறது.

அப்புறம், என்னுடைய கடிதங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா அல்லது கிடைத்தும் நீங்கள் படிக்கின்றீர்களா என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை நீங்கள் படிக்கின்றீர்களா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? உங்களுக்கு எத்தனையோ ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள் பத்தோடு பதினொன்றாக என் கடிதத்தையும் சேர்த்து குப்பையில் போட்டுவிடாதீர்கள். எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் உங்கள் போட்டோவும், போன் நம்பரும் வேண்டும் எனக்கு அனுப்பி வையுங்கள் இல்லையெனின் கன்னிதீவு மாதிரி என் கடிதம் தொடரும். தொல்லைகள் அதிகரிக்கும் எப்படி வசதி? சரி இப்ப நான் போறேன்  ஆனால் மீண்டும் வருவேன்...

என்றும் ப்ரியமுடன்,
காவியா.

Wednesday, 14 October 2015

முருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்

            சாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்தே தனித்தனியாக சொல்லப்படுகிறது. இப்போ நாம செய்யப்போறது முருங்கை கீரை சாம்பார்.

            இதை சிலர் பருப்பு மட்டும் சேர்த்து வைப்பார்கள் நான் இப்போது பருப்போடு தேங்காய் சேர்த்து வைக்கப் போகிறேன். பருப்பு இல்லாமலே தேங்காய் அரைத்து ஊற்றியும் வைக்கலாம். இதை சிலர் கீரைச்சாறு என்று கூட சொல்வார்கள் இதன் சுவையும் அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள்:-

துவரப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
முருங்கை கீரை - 1 கப்
கத்தரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு

Sunday, 4 October 2015

நட்பு

நட்பில் எதும்
பொய்யில்லை
என்றாய்..!
ஆனால் உன் நட்பை
மட்டும் ஏன்
பொய்யாக்கி போனாய்..?

வலி

நீ...
மின்னலைப் போல்
படம் காட்டி அடிக்கடி
ஓடி மறைந்து கொள்கிறாய்
நானோ உன்னைத் தேடித் தேடி
தொலைந்து போகிறேன்..!

மவுனம்

உன்னைப்போல்
இருக்கக் கூடாதென்று
நினைத்தேன்
நீ பேசாத நேரங்களில்
இப்போது

Thursday, 1 October 2015

முட்டைத் தொக்கு /சமையல்

தேவையான பொருட்கள்:
முட்டை - 1
இஞ்சி - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
சோம்பு - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 அல்லது 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது

Wednesday, 30 September 2015

மாதுளை / மூலிகை மருத்துவம்

மாதுளம் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு உட்கொண்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். வயிறு தொடர்பான பல நோய்கள் குணமாகும். உணவுக்குப் பின் ஒரு மணி நேரங்கழித்து உண்பது நல்லது.

Thursday, 24 September 2015

நினைவு பெட்டகம்

தெருவில் தற்செயலாய்
கிடைத்த வைரத்தை
வெல்வெட் பெட்டியில்
வைத்து பாதுகாப்பதுபோல்
உன் நினைவுகளை
என் உள்ள பெட்டகத்தில்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
யாருமில்லாத போது
அந்தப்பெட்டியை திறந்து
பார்த்து உனது நினைவில்
மூழ்கிபோகிறேன்...
நீயோ ஏதும் அறியாததுபோல்
விலகிபோகிறாய்!  



Tuesday, 22 September 2015

இலவங்கம் / மூலிகை மருத்துவம்

இந்த பக்கத்தில் பதிவிடும் அனைத்து மருத்துவக் குறிப்புகளும் எனக்கு நன்கறிந்த பயன்படுத்திப் பார்த்த மூலிகைகளை மட்டுமே இங்கு நான் பதிவிடுகிறேன். அவை எந்தளவிற்கு குணமாகிறது என்பதை அறிந்த பிறகே உங்களுக்கு பயன்பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதில் எந்தவித பயமும் உங்களுக்கு வேண்டாம். எனது இல்லத்தில் சில மூலிகைகள் உள்ளன .


இலவங்கம்

இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

எந்த நோயை குணப்படுத்தும்?

மயக்கம், பேதி, வாந்தி, குருதிக் கழிச்சல், எருவாய்க் கடுப்பு, செவிநோய், கண்ணில் பூ, படைகள் ஆகியவற்றை நீக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Monday, 21 September 2015

அன்பும் அறனும் உடைத்தாயின்

நாம் தேவைப்படும் போதுமட்டும்
அம்மா அப்பாவாகிறோம்
அக்கா தங்கையாகிறோம் - ஆனால்
தேவை முடிந்தவுடன் அவர்களுக்கு
நாம் யாரோவாகிறோம்..!


பொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்

தங்கம் போன்ற மேனி உங்களுக்கு வேண்டுமா? அப்ப இதை படிங்க.

பொன்னாங்கண்ணி:

இந்த கீரையில் தங்கசத்து உண்டென்றும், இதை முறைப்படி உண்டு வருபவர்களது உடல், தங்கம் போன்ற மேனியைத் தரும் என்றும் பெரியோர் கூறியுள்ளனர். பொன்னாங்கண்ணி என்பது பொன்+காண்+நீ இதை உண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் என்பது பொருள்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Sunday, 13 September 2015

நில வேம்பு / மூலிகை மருத்துவம்

நில வேம்பு:

இது எந்த நோயை குணமாக்கும்?
வலிசுரம், நீர்க்கோவை, மயக்கம் ஆகியவற்றை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Wednesday, 9 September 2015

இந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்

           நம்ம இந்தியா வல்லரசு ஆகும் வல்லரசு ஆகும்னு எல்லோரும் ஒரு பக்கம் கனவு காணுறாங்க. இன்னொரு பக்கம் இந்தியா ஏழை நாடு என்று ஒரு பக்கம் விமர்சனம் பண்றாங்க. இதற்கு என்ன செய்யலாம்? ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அரசு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்தால் இந்தியா ஏழை என்று யார் சொல்ல முடியும். அந்த குடும்பங்கள் அதை வைத்து தனது வளத்தை பெருக்கிக் கொள்ளும் புதிய தொழில்த்துறைகள் முளைக்கும் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வார்.

சிறு குறிஞ்சான் / மூலிகை மருத்துவம்

சிறுகுறிஞ்சான்

இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பொடி நீரிழிவு நோயைத் தணிக்க வல்லது. வயிறு தொடர்பான சிறு நோய்களைத் தணிக்க வல்லது.

இலையைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி பொடித்து காலை உணவுக்குப் பின்னும் இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடை அளவாக உண்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். குணமடையும்.

Monday, 7 September 2015

தனியா / மூலிகை மருத்துவம்

தனியா:

இது எந்த நோயை குணப்படுத்தும்?

பசியைத்தூண்டும், அகட்டுவாய் அகற்றும், சிறுநீர் பெருக்கும்.

Saturday, 5 September 2015

பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை



பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை



பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


குப்பை மேனி / மூலிகை மருத்துவம்

குப்பைமேனி:

சுவை: கைப்பு, கார்ப்பு,

இது எந்த நோயை குணப்படுத்தும்?

இதன் இலையால் பல்லடி நோய், தீச்சுட்ட புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய் மூலம், நமைச்சல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல் கோழை ஆகியவற்றை குணமாக்கும்.

Wednesday, 2 September 2015

கீழாநெல்லி/மூலிகை மருத்துவம்

கீழாநெல்லி:

;
இதன் சுவை : துவர்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு தன்மையுடையது.

இது எந்த வகை நோயை  குணப்படுத்தக் கூடியது?

இம்மூலிகையினால் வயிற்று மந்தம், தீக்குற்றத்தால் விளைந்த கேடு, கண்ணில் தோன்றும் நோய்க் கூட்டங்கள் குருதிக் கழிச்சல், நீரிழிவு, காமாலை, சுரம் வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவற்றை இவை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்தலாம்?

Tuesday, 1 September 2015

பருப்பு ரசம் செய்வது எப்படி

                நமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும்போது கிடைக்கிற திருப்தி எதிலும் இல்லை. பொதுவா நாம் செய்கின்ற சாம்பார் நல்லா இல்லை என்றால் அதை சரி செய்வது இந்த ரசம் தாங்க. சும்மா பூண்டை தட்டி போட்டு வைக்கிற ரசம் இல்லைங்க இது பருப்பு ரசம். பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் வைப்பது இல்லை, கல்யாணவீட்டிலோ அல்லது ஹோட்டல்களில் மட்டும்தான் இதை வைப்பார்கள். இவர்கள் மட்டும் எப்படி வைக்கிறார்கள் நாம எப்படி வைத்தாலும் நல்ல வருதில்லையேன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

            இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அட என்னங்க அப்படி பார்க்கிறீங்க .....  இப்பவே கிச்சனுக்கு வாங்க சூப்பரா ரசத்தை வைக்கிறோம் அசத்துறோம்.


Sunday, 30 August 2015

நேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ?

அதிகாலை குளிரில்
இழுத்துப் பிடித்து
போர்த்தும் போர்வையானேன்..!

மனமே ஓ... மனமே நீ மாறிவிடு

           

மதிப்பீடு



             ஒருவர் செய்கின்ற காரியங்களை வைத்து, செயல்பாடுகளை வைத்து அவரின் குணாதியங்களை கணிக்க முடியுமா? எல்லோராலும் முடியாது சிலரால் மட்டுமே முடியும். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இப்ப ஒருத்தர் நிறைய எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோமே அவர் என்ன செய்வார் எல்லாவித கருத்துக்களையும் தன் எழுத்தில் புகுத்த நினைப்பார். ஒருவர் ஒன்றை பற்றியே குறிப்பிட்டால் கூட ஒரளவுக்கு கணிக்கலாம் எல்லாவற்றையும் எழுதினால் எப்படி கணிக்க முடியும்?

Saturday, 29 August 2015

நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

நார்த்தங்காய் - 4
வெந்தையம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பூண்டு - 5, 6 பல்
பெருங்காயம் - ஒரு கட்டி
இஞ்சி - சிறு துண்டு
கடுகு -சிறிது
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அச்சு வெல்லம் - 1

Thursday, 27 August 2015

மனமே ஓ....மனமே நீ மாறிவிடு

              'ரசிப்பு என்பது தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு, அருகே சென்றால் ஆபத்து' உதாரணத்திற்கு சூரியன் பார்ப்பதற்கு பிரகாசமாய் எழுந்து வரும்போது பார்க்க அத்தனை அழகு, ஆனால் கிட்ட நெருங்கினால் சாம்பலாக்கிவிடும். மன ரீதியில் பார்த்தால் எது ஒன்று நம்மை அதிகம் ஈர்க்கிறதோ அது நம்மை அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அது எதுவாக இருந்தாலும், சரி அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் எதையும் நாம் அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். அது அன்பாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி.

Wednesday, 26 August 2015

வேற்று கிரகவாசி

காற்று...
வானம்...
நிலா...
என் இதயம்...
உன்னைப் பற்றியே
என்னிடம் ஓயாது சொல்லிவிட்டு
போகிறது..!

Tuesday, 25 August 2015

புரியாத புதிர் குட்டிக் கதை

ஒரு குட்டி கதை உங்களுகாக:

                 ஒரு காட்டுல குயிலும், மைனாவும் நீண்ட காலமாக நண்பர்களா இருந்தாங்க. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிற நல்ல நட்பு அவர்களிடம் இருந்து. மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு. ஒரு நாள் அதற்கும் சோதனை வந்தது அன்றாடம் வழக்கமாக பேசிக்கொள்ளும் இவர்களுக்குள் ஏனோ சிறு இடைவெளி விழுந்தது. குயிலின் பேச்சு குறைந்தது.

Sunday, 23 August 2015

உன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்

                  அப்துல் கலாம் கடைசியாக சொன்ன வார்த்தை டிவி பார்க்காதீர்கள் வீட்டுக்கொரு நூலகம் அமையுங்கள் என்றார். அவரின் கனவை நினைவாக்குவோம் என்று பலர் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் அவர் சொன்னதை கொஞ்சமாவது கடைப்பிடித்தீர்கள்?

Saturday, 22 August 2015

பாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி

                   பாலியல் வன்முறைகள் ஆங்காங்கே நடக்கிறதே என்று ஆதங்கப்படும் பெண்களா நீங்கள்? நமது தங்கையோ? அக்காவோ? குழந்தைகளோ? எப்படி பயமில்லாமல் அனுப்புவது என்று கவலைப்படும் பெண்களா நீங்கள்? காம கொடூரங்களைக் கண்டு கொந்தளிக்கும் சமூக அக்கறையுள்ள பெண்களா நீங்கள்? வாருங்கள் ஒன்றாக இணைந்து ஆபாச ஆசாமிகளை வளைத்துப் பிடித்து வேறோடு அழிப்போம்.

Friday, 21 August 2015

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை முதல் முறையாக அதை தொடுகிறேன். இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று புரட்டி பார்க்கிறேன். எடுத்த உடனே முன்னுரையை படிக்கிறேன். அதில் அந்த கதையின் ஓட்டத்தை ஜெயகாந்தன் விவரிக்கிறார். இந்த கதை சிலருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை போல் சிலர் இருக்கலாம், அல்லது இனிமேல் இருக்க கூடும் என்கிறார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று பக்கத்தைப் புரட்டுகிறேன். படிக்க... படிக்க.. ஏதோ ஒரு கணம் சுமை மனதில் ஏறுகிறது. அதில் வருகிற கதாபாத்திரம் போல் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் எனக்குத் தெரிந்த ஒரு கதாபாத்திரம் அந்த கதையை ஒட்டியே வந்து போகிறது.

Saturday, 15 August 2015

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...

எப்பொழுதும் உனது படங்களை
ரசித்த நான்!
முப்பொழுதும் உன்
நினைவுகளை சுமந்த நான்
முதல் முறையாக எனது
படங்களை ரசிக்க தொடங்கிவிட்டேன்..!

Wednesday, 5 August 2015

அன்பு என்றால் என்ன?

அன்பு  என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? என்று எல்லோருக்குமே ஒரு கேள்வி எழும். நாம் காட்டும் அன்பு நிராகரிக்கப்படும்போது அல்லது நம்மை ஒதுக்கி வைக்கும்போதும்.  அன்பு காசு கொடுத்து வாங்கும் ஒரு பொருளா? இல்லை, அது ஒரு உணர்வு. காசோ, பணமோ, பொன்னோ, பதவியோ எதையாலும் வாங்க முடியாத ஒரு அற்புதமான உணர்வு. இது ஜாதி, மதம் பார்த்து வருவதில்லை. காசு, பணம் பார்த்து வருவதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்து வருவதில்லை.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற வள்ளுவனின் கூற்றுபடி எங்கும் நிறைந்த ஒன்றுதான் அன்பு. அது எதையும் எதிர்பார்த்தோ அல்லது எந்த பயன்கருதியோ வருவதில்லை.

Tuesday, 4 August 2015

குழந்தை மனசு

அன்று...
நீ எல்லையை கடந்து
மேகத்தில் நுழைந்து
காற்றை கிழித்து
என் இதயத்தில் குடிபுகுந்தாய்..!

Sunday, 2 August 2015

பயணம்

ஒரு
நீண்ட பயணத்தில்
நீயும் நானும் சந்தித்தோம்..!

பல கதைகள் பேசினோம்
யார் கண் பட்டதோ
உனதிடம் வந்ததும்
உடனே இறங்கி சென்று விட்டாய்..!

இலங்கை வானொலியும் நானும்

                 இலங்கை வானொலி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.  நடிகர் சத்தியராஜ் அவர்கள் பேசுவதை கேட்டுயிருக்கிறீர்களா? அவர் பேட்டிகளில் உண்மையை பட்டு பட்டென்று போட்டு உடைப்பார் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி பேசுவது சிலருக்கு பிடிக்காது. அவர் போல நானும் பேசப்போறேன். ஹா.. ஹா... அவர் ஒரு பேட்டியில் சொல்வார் " நடிகன் படத்தில் நடிக்கிறதை விட நிஜத்தில்தான் அதிகம் நடிக்கிறாங்கன்னு சொல்வார். ஏன்னா மேடையா இருந்தாலும் சரி, நேரில் இருந்தாலும்  சக நடிகரை பார்க்கும்போதும், ரசிகர்களை பார்க்கும்போதும் வாய்கூசாமல் சில வார்த்தைகளை அள்ளிவிடுவாங்களாம். இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா? "உண்மையயை மட்டும் பேசுற மைக்கை எவனாவது கண்டுப்பிடிச்சா உலகத்துல ஒருத்தன் கூட உயிரோடு இருக்கமாட்டான் பேசுறவன் அத்தனைப் பேரும் செத்துபோயிடுவான்" ஏன்னா பேசுறது அத்தனையும் பொய்னு சத்தியராஜ்  சொல்வார். அது உண்மைதானே? அது சினிமாவில் மட்டுமல்ல எல்லாத்துறைகளும் அப்படித்தான்.

Friday, 31 July 2015

தஞ்சாவூர் சமையல் / இட்லி பொடி செய்வது எப்படி

சமையல் என்றாலே எல்லோரும் காரைக்குடி என்றுதான் சொல்வார்கள். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவர்களும் சரி, தஞ்சாவூர் சாப்பாட்டை ருசித்தவர்களும் சரி வேற ஊர் எந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் தஞ்சாவூர் சமையலில் ஒரு தனி ருசி இருக்கிறது.

தமிழ்நாடு என்றாலே இட்லி, சாம்பார் தான் பெஸ்ட் ஆனால், தஞ்சை மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இட்லிபொடி இல்லாத வீடுகளே நீங்கள் பார்க்க முடியாது.  அப்படியென்ன அந்த இட்லிபொடியில் இருக்கிறது என்கிறீர்களா? சரி வாருங்கள் அதை செய்து பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் - 25 நம்பர்
பூண்டு - 1
பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - தேவையான அளவு

Thursday, 30 July 2015

உலகம் போற்றும் உத்தமர்

                    
                    அப்துல்  கலாம் போல் இனி ஒருவரை நாம் காணமுடியுமா? என்ன ஒரு அற்புதமான மனிதர், எத்தனை எளிமையானவர். கடைக்கோடி மனிதர் வரை தன் சிந்தையில் வைத்த உயர்ந்த மனிதர்.  இன்றைய அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். இவர் பதவியில் இருக்கும்போது பணம், காசை சம்பாதிக்கவில்லை மனிதர்களை சம்பாதித்து இருக்கிறார். இவரின் உறவினர் கூட தான் பதவியில் இருக்கும் எந்த சலுகையும் காட்டாத உன்னத மனிதர். பதவி வந்தாலே  உலகமே தன் கையில் இருப்பதுபோல் ஆடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் சொந்த பணத்தில் உறவினருக்கு செலவு செய்த உத்தமர். பரிசு பொருளைக்கூட யாரிடமும் பெறக்கூடாதென்று நினைத்தவர். இவர் ஏழ்மையில் வாழ்ந்தாலும் பதவி வந்ததும் தன்னிலையை மறக்காதவர்.

இளஞையர்களின் கனவு நாயகன் டாக்டர் அப்துல் கலாம்

கடலலையக்கண்டு இசை கலைஞனானீர்
பறவையயைக் கண்டு விஞ்ஞானியானீர்
நற்சிந்தனைக்கொண்டு கவிஞரானீர்
மக்கள் மனதில் குடியரசு தலைவரானீர்
குழந்தைகள் மத்தியில் விதையானீர்
இளைஞர்கள் கண்களில் கனவானீர்
கடைசியில் உதிர்ந்து போனீர்
நாங்கள் அதிர்ந்து போனோம்
 கடலலையா திரண்ட
மக்கள் வெள்ளத்தில் கரைந்து சென்றீர்
கண்ணீரோடு நாங்கள் கலைந்து செல்கிறோம்
உங்கள் கனவை நினைவாக்குவோம் என்ற
உறுதி மொழியோடு..!

Friday, 24 July 2015

சதுரகிரி ஆகாயம் மேலே பாதாளம் கீழே

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

நான்கு பக்கமும் மலைகளால்  சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணியபூமி பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில், உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனதில் குடிகொண்டு விடுகிறார்.

Wednesday, 22 July 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

எப்போதும் அழகா இருக்க வேண்டுமென்று நினைக்கறீங்களா? வயசானாலும் இளமையா இருக்க ஆசையா? அப்ப முதல்ல இதை படிங்க...

1. காலை, மாலை, இரவு சாப்பாட்டின் அளவை குறையுங்கள்.

Tuesday, 21 July 2015

நியாய தராசு

பிள்ளைகள் நல்லவர் ஆவதும், கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே... 

          எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகதான் பிறக்கிறார்கள் ஆனால் நாம் வளர்க்கும் முறைகள் மாறும்போது அவர்கள் கெட்டவர்களாக மாறுகிறார்கள் இதற்கு முழு காரணம் சுற்றுப்புறச் சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், அன்னைதான் முதல் காரணமாகிறாள். ஒரு வீட்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண் குழந்தைக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவன் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உடுத்தும் உடை வரை நிறைய வித்திசாயங்கள். அவனுக்கு பிடிக்காத உணவை அந்த வீட்டில் சமைக்க மாட்டார்கள், அவன் வெளி
யில் இருந்து வீட்டுக்கு வந்த அவனுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சி தான் பார்க்க வேண்டும். இப்படி எல்லாமே அவனுக்கு பிடித்ததில் தொடங்கி கடைசியில் வாழ்க்கை துணையை அவனே தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் மனவேதனை அடைகிறார்கள். நான்

Saturday, 18 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி- 200 கிராம்
பாசிப்பருப்பு- 75 கிராம்
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிது

Friday, 17 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
தேங்காய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிது
கருவேப்பிலை- சிறிது
எண்ணெய் -தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய்- 3
உப்பு - தேவைக்கேற்ப

Sunday, 5 July 2015

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 4
தக்காளி -3
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் மூடி -1
சோம்பு -1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
மல்லித்தூள் - 1 கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
எண்ணை - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
வெந்தையம் - சிறிது

Tuesday, 23 June 2015

மீட்டாத வீணை (சிறுகதை)

                   பட்டுக்கோட்டை நீதிமன்றம் உயரமான நெட்டிலிங்க மரங்கள் நடுவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெள்ளை வேஷ்டிகளும், கறுப்பு அங்கிகளுமாக தெரிந்தன. வாரத்தின் முதல்நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. அங்கே ஸ்கூட்டியில் வந்த இறங்கிய சுவாதி வண்டியை ஒரமாக பார்க் செய்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தை ஒட்டிய தனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். மாநிற தேகம், எடுப்பான தோற்றம், கம்பீரமான நடை கையில் கறுப்பு கோட்டு அவள் ஒரு அட்வகேட் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லியது.

                 "சரவணன்.. சரவணன்... வண்டியில என் பைல் இருக்கு எடுத்துட்டு வாங்க..."
                "வந்துட்டேன் மேடம்..." என்றபடி ஓடிபோய் பெட்டியை திறந்து பைலை எடுத்துக்கொண்டு "குட்மார்னிங் மேடம்..." என்றான் குமஸ்தா சரவணன்.
பதிலுக்கு வணக்கத்தை வைத்தவள் "நேற்று ஒரு பேமிலி வந்தாங்களே அபிராமி சுந்தர் அவங்க வந்திருக்காங்களா..?"

Wednesday, 3 June 2015

என் உயிர்

நீ
பவுர்ணமி நிலவா
மாதத்திற்கு ஒருமுறை
வந்து போவதற்கு..!

நீ
வாரத்தின் முதல் நாளா?
வாரம் ஒருமுறை
வந்துபோவதற்கு..!

நீ
இரவா? பகலா?
தினமும் வந்துபோவதற்கு..!

நீ
என் உயிர்
ஒரு நொடி வராமல்
போனாலும் மறு நொடி
என் இதயம் துடிப்பது
நின்றுவிடும்..!

Friday, 29 May 2015

தமிழ்மொழி

எல்லா நாட்டிலும் தாய்மொழி என்று இருக்கிறது. அதற்கு வழக்கச்சொல் என்ற ஒன்று இருக்கிறது. மொழிகள் பல இருக்கிறது அதில் ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு,கனடம், என இருந்தாலும் அவரவர் அவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பாஷைகள். தமிழ்மொழிதான் அதில் பலதரப்பட்ட வழக்கச் சொற்கள்.

             மதுரை தமிழ் எல்லோரும் அறிந்ததே ஏனெனில் சினிமாவில் அதிகம் பேசப்படுகிறது. கோயமுத்தூர் தமிழ், திருநெல்வேலி, சென்னை தமிழ் இந்த நான்கு மாவட்டங்களில் பேசுகின்ற தமிழ் அனைவருக்கும் தெரியும். அதேபோல் பிற மாவட்டங்களில் பல பாஷைகள் பேசப்படுகிறது. மேலும் ஆராய்ந்தால் ஒரு மாவட்டத்திலே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாஷை இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்தது இன்னொரு மாவட்டத்திற்கு சென்றால் அவர்கள் சொல்கின்ற பெயர்கள் வித்தியாசமாக இருக்கும்.

          அதாவது புத்தக முறைகளைத் தாண்டி நடைமுறை சொற்கள் வழுப்பெற்று பேசப்படுகிறது. சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று புரியாது. சிலர் பேசுவதைப் பார்த்தால் சிரிப்பு அள்ளும், சில இடங்களில் ரசிக்கத் தூண்டும் . அப்படி ரசித்தது என்று சொன்னால் திருச்செந்தூர் சென்ற போது அவர்கள் பேசிக்கொண்ட தமிழ் காற்றுவாக்கில் காதை தீண்டிய வார்த்தைகள் என்னை திரும்பி பார்க்க வைத்தது சில இடங்களில் நின்று கூட கேட்டு ரசித்தேன். அப்ப நினைத்தேன் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தால் என்னவென்று ஆனால் நினைத்ததோடு சரி.

          தமிழை ஆராய்ந்தாலும், தமிழைப்பற்றி பேசினாலும் ஏதோ ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் வேறொன்று இல்லை என்று சொன்னாரோ என்னவோ..?

என்ன சொல்ல போகிறாய்

என் மனசு முழுவதும்
நீயாக இருப்பதால் தானோ
என்னவோு நான் நானாக
இல்லை என்று பலர் சொல்கிறார்கள்
நீ என்ன சொல்கிறாய்..?

Sunday, 3 May 2015

அன்னைப் பத்து

சிறு பெண்ணொருத்தி தனது தாயிடம் இறைவனின் தன்மைகளை எடுத்துக் கூறுவது.

 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
 உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
 உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
 கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

           உள்ளத்தே நீங்காது நின்று என்னை உருக்குபவர். அப்படி உருக்கிப் பேரின்பம் தருபவர். எனது வற்றாத கண்ணீர் ஆனந்தம் பெறுதற்கானது.

Saturday, 2 May 2015

திருச்சாழல்

              மகளீர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. தடையும் தடைக்கேற்ற விடையும் பாடுவது. இருவருக்கிடையில் நிகழும் வாதம் போன்றது.

 பூசுவதும் வெள்நீறு பூண்பதுவும் பொங்குஅரவம்
 பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
 பூசுவதும் பேசுவதும் கொண்டு என்னை
 ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

           பூசுவது வெண்ணீறு, அணிவதோ சீறும் பாம்பு. பேசுவது நற்றமிழ் நான் மறை. இவற்றிடையே பொருத்தம் ஏதும் உண்டா? உண்டு. இயற்கையாகவும், உயிர்களனைத்துமாகவும் இறைவன் விளங்குவதுதான் அது. இறைவன் உண்மையில் இயற்கையின் வடிவம். மனிதனன்றோ தனது கற்பனையில் தோன்றியவாறெல்லாம் இறைவனை அலங்கரித்து அழகு பார்த்தான். நீறு பூசி, பாம்பு அணிவித்து, வேதம் ஒதப்பண்ணினான்.

Friday, 1 May 2015

மரம்

விறகை சுமந்து
 போகின்ற பெண்ணே...
 உன் சுமைகளை
 இறக்கி வைத்துவிட்டு
 கொஞ்சம் இளைப்பாறு
 யார் கண்டார்கள்?
 நாளை நீ என்னை
 விறகாக சுமக்கக் கூடும்..!

Tuesday, 28 April 2015

பசி


மீன்கள்


கொம்புத் தேன்

அன்னை தெரசாவைப் பார்த்து
 சமூக சேவகியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!

 சுவாமி விவேகானந்தரைப் பார்த்து
 நல்ல ஆன்மீகவாதியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!

10. திருக்கோத்தும்பி

          வண்டு தேனை நாடிப் பூவிடம் செல்வது போல நாமும் ஈசனை நாடிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்,

 பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
 நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
 மா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
 சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

         செந்தாமரையில் இருக்கும் பிரம்மாவும், இந்திரனும், அழகு பொருந்திய சரஸ்வதியும், நாரணனும், சந்திரசூரிய அக்கினியாகிய பெருமை மிக்க சோதிகளும், தேவர்களும் சிவபெருமானை முழுதாய் அறிந்து கொண்டவர்களல்ல. அத்தகைய ரிடப வாகனனைப் போற்றி அரசவண்டே நீ ரீங்காரம் செய்வாயாக.

Sunday, 26 April 2015

திருப்பொற்சுண்ணம்

          நறுமணப் பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். பொன்னிறமானது, பொன்னும் சேர்க்கப்படுவது. காதலன் நீராடத் தேவைப்படும் மணப்பொடிகளைக் காதலியும், தோழிகளும் இடிப்பது. அவனது புகழ்பாடிக் கொண்டே இடிப்பார்கள்.

 முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
            முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
 சத்தியும் சோமியும் பார்மகளும்
           நாமகளோடு பல்லாண்டிசைமின்
 சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
           கங்கையும் வந்து கவரிகொண்மின்
 அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
         ஆடற் பொற்சுண்ணம் இடித்தும்நாமே

விண்மீன்கள்


Saturday, 25 April 2015

திருவம்மானை

கேட்டாயோ தோழிகிறிசெய்த வாறொருவன்
 தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
 காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
 தாட்டாமரைக் காட்டித் தன் கருணைத் தேன்காட்டி
 நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
 ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதுங்காண்.

          தோழியே ஒருவன் எனக்குச் செய்த மாயத்தைக் கேட்டாயோ? சித்திரங்கள் தீட்டிய மதிள் சூழ்ந்த திருப்பெருந்துறைப் பெருமான் எனக்குக் காட்டுவதற்கு அரியன காட்டினான். தன் திருவடிகளையும் காட்டினான். அருளாகிய தேன் காட்டினான், சிவபரம் பொருளைக் காண்பித்துத் தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டதை நாம் பாடுவோம்.

Thursday, 23 April 2015

தனுஷ் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பவர் ஸ்டாரா?

         
               தனுஷ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர். இப்போது எங்கு பார்த்தாலும் இவரின் முகம்தான் தென்படுகிறது. இவர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனும், செல்வராகவனின் சகோதரரும் ஆவார். இவர் 18 வயதிலே சினிமாவுக்கு நடிக்க வந்தவர். 2002 ல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படம் பெரிய சர்சைக்கு உள்ளானது. அதன்பிறகு 'காதல் கோண்டேன்' படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பலரின் பாராட்டையும் பெற்றார். 'திருடா திருடி' படத்தில் மன்மத ராசா பாட்டின் மூலம் இளசுகளின் மனதில் இடத்தைப் பிடித்தார்.

Sunday, 19 April 2015

7.திருவெம்பாவை

            நான் இந்த திருவாசகத்தை வாசிக்கும் போது என்னைக் ரொம்ப கவர்ந்ததும், ஒரு தொடராக பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்க வைத்ததும் 'திருவெம்பாவை' பகுதிதான் ஏனோ என்னை வெகுவாக ஈர்த்தது. நீங்களும் வாசித்து பாருங்கள் பிடிக்கும். அதாவது இலக்கியத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி நண்பர்கள் பேசிக்கொள்வது என்பது சுவாரஸ்யமானவை.

        இங்கேயும் தோழிகள் பேசிக்கொள்வது போல்தான் அமைந்திருக்கிறது அதவும் ரசிக்கும்படி இருக்கிறது. சரி வாருங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சற்று காதுக்கொடுத்து கேட்போம்.

           மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் பகவான். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து கொள்வதற்குப் பாடப்பட்டது திருவெம்பாவை.

Saturday, 18 April 2015

நீத்தல் விண்ணப்பம்

         பெண்ணையும், பொன்னையும் நாடுகிறவர்கள், காமத்தை விரும்பி ஏற்கிறவர்களுக்கு நோய்வாய்பட்டு இந்த உடல் அழிந்துவிடும் என்கிறார் மாணிக்கவாசகர்.

 காருறு கண்ணியரைம்புல
         னாற்றங் கரைமரமாய்
 வேருறுவேனை விடுதிகண்
         டாய் விளங்குந்திருவா
 ரூருறை வாய்மன்னு முத்தர
        கோசமங்கைக் கரசே
 வாருறு பூண்முலையாள் பங்க
        வென்னை வளர்ப்பவனே

        ஆற்றங்கரையில் வளர்கின்ற மரம் வெள்ளத்தால் அழிந்து போகும் ஐம்புலன்களும் காமம் என்கிற பிணிவாய்பட்டு அழிந்துவிடும்(கரைபுரளும் வெள்ளம் அரிப்புண்டு பண்ணுவதுபோல் காமமும் அழிவை உண்டு பண்ணும்) அதனால் என்னை நல்வழிப்படுத்து இறைவா என்கிறார். அழிவு என்பது போகிக்கு மட்டுமல்ல அவனுடைய போகத்தில் பங்குபெற்ற புலன்களுக்குமுண்டு.

தஞ்சாவூர் சமையல்/கத்தரிக்காய் குருமா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
 பொட்டுக்கடலை - தேவையான அளவு
 சோம்பு - சிறிது
 பட்டை - சிறிது
 கசகசா - சிறிது
 சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 4
 பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
 இஞ்சி - சிறுதுண்டு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
 உப்பு - சிறிது

5.திருச்சதகம்

         இறைவனை பக்தியோடு வணங்கினால் என்ன நிகழும் உடல் சிலிர்க்கும், கண்ணீர் பெருகும், தன்னையும் மீறி கையெடுத்து வணங்கும். இதைதான் மாணிக்கவாசகர் மெய்யுணர்தல் என்கிறார். 

மெய்தானரும்பி விதிர் விதிர்த்
         துன் விரையார் கழற்கென்
 கைதான் றலைவைத்துக் கண்ணீர்
         ததும்பி வெதும்பியுள்ளம்
 பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
         சயசய போற்றியென்னுங்
 கைதான் நெகிழ விடேனுடை
         யாயெனைக் கண்டுகொள்ளே

          உனது திருவடியை நாடுகின்ற எனது உடல் புளகித்து நடுநடுங்குகிறது. தலைமேல் கைகுவித்து உன்னை வணங்குகிறேன். என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. உள்ளம் பக்திக் கனலால் வெதும்பும். பொய்மை தவிர்த்து மெய்ம்மை நிற்கும். என் நாவும் உன்னை வாழ்த்தும். தலைமேல் குவிக்கப்பட்ட கைகளோ தம்மை மறந்து குவித்த வண்ணமே இருக்கும்.

4. போற்றித் திருவகல்

            கடவுள் இல்லை என்பர்கள் நாத்திகம் வாதம் செய்வார்கள் அவர்களுக்கு என்ன சொல்கிறார் பாருங்கள் மாணிக்கவாசகர்.

           'ஆத்த மானா ரயலவர் கூடி
           நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்'

            உற்றாரும், பக்கமுள்ளாரும் தங்கள் நாவில் தழும்பேறும் அளவுக்கு கடவுள் இல்லையென்கிற நாத்திக வாதம் பேசுகின்றனர். இதுவும் மாயை செய்கிற லீலைகளில் ஒன்று. மாயை என்றாலே மயக்குதான். அது கண்ணை மறைக்கும், அறிவை மயக்கும்.

3. திருவண்டப் பகுதி

       'நீற்றோன் காண்க நினைதொறு
        நினைதொறு மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்'

            திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைக்குந்தோறும் அவனிடத்துப் பக்தி பெருகுகிறது. இன்ப உணர்வு மிகுகிறது. அவனை மறந்திருக்க என் மனம் சகியாது. ஒருவேளை அவனை மறந்தால் நான் கெட்டொழிவேன்,

Wednesday, 15 April 2015

பிறந்த நாள் ... இன்று பிறந்த நாள்..!

       
              வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த வலைப்பூ ஆரம்பித்து இன்றோடு  ஒரு வருடமாகிறது. இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கம் இந்த சமுதாயத்தின் மீதான மனக்குமறல்களை கொட்டுவதற்கும், நல்ல விஷயங்களை நாலு பேரோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த விஷயங்கள் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆரம்பித்தேன்.

            சில தகவல்களை இணையதளத்தில் தேடும் போது நாமும் இது போல் ஒன்று தொடங்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால் எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. (முதலில் ப்ளாக்கர் என்றாலே என்னவென்று தெரியாது எனக்கு மட்டுமல்ல பலருக்கு தெரியாது.) ஒரு நண்பர் வலைப்பூ ஆரம்பித்திருந்தார் அதன் பிறகு நான் ஆரம்பித்தேன் முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அப்புறம் போக போக புரிந்தது 140 பதிவுகளை இட்ட பிறகுதான் தமிழ்மணம் என்ற ஒரு வலைதிரட்டி இருக்கிறது என்று தெரிந்தது அதில் இணைந்த பிறகுதான் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதன்பிறகுதான் ஹிட்ஸ் என்றால் என்னவென்று தெரியவந்தது.

பெண்ணே... பெண்ணே...

பெண்ணே... 
உன்னை கடவுள் என்றார்கள்
 ஏன் தெரியுமா? உன்னை
கையெடுத்து கும்பிட அல்ல
 உன் கற்பை சூரையாடும் போது நீ
 கற்சிலையாக இருக்க வேண்டும்
 என்பதற்காக..!

 பெண்ணே...
 உன்னை நதி என்றார்கள்
 ஏன் தெரியுமா? நீ
 சுயநலமில்லாமல் உழைக்கிறாய்
 என்பதற்காக அல்ல,
 உன்னை 'மது' பானமாய்
 அருந்துவதற்கு..!

Monday, 13 April 2015

கீர்த்தித் திருவகவல்

         பழமை வாய்ந்த புண்ணியத் தலமான சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜன் உயிர்கள் அனைத்திலும் இனிதே இடம் பெற்றிருக்கிறான்.

          எங்கே பக்தியிருக்கிறதோ அங்கே இறைவன் விரும்பிக் குடிகொள்கிறான். பாவங்களைப் போக்கி யருள பூவலம் என்னும் ஊரில் நீ காட்சியளித்த பெருமை உண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

         பாட்டுக்கு கோட்டையாக விளங்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று 13.4.1930 எங்க ஊர் கவிஞர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம். எங்க ஊரிலிருந்து 3 கிமீ தொலைவிலே உள்ளது செங்கப்படுத்தான்காடு கிராமம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 15 வது வயதில் 

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே
 கரை ஓரத்தில் மேயாதே கெண்டை குஞ்சே
 தூண்டில்காரன் வரும் நேரமாச்சு
 ரொம்ப துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

Friday, 10 April 2015

தஞ்சாவூர் சமையல்/புடலங்காய் பொறியல்

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கடுகு உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துறுவல்- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

Wednesday, 8 April 2015

தஞ்சாவூர் சமையல்/ மணத்தக்காளி வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வத்தல் - 1 கையளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 பூண்டு - 100 கிராம் 
தக்காளி - 2
 மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
 மல்லித்தூள் - 1 கரண்டி
 பெருங்காயம் - சிறதளவு
சக்கரை - 1/2 ஸ்பூன்
 வெந்தயம் - சிறிதளவு
 கறிவேப்பிலை- சிறிதளவு
 எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

Tuesday, 7 April 2015

திருவாசகம்

          'பரந்து கிடக்கின்ற அண்டமானதால் பரம்பொருள் என்றும், கடந்து நிற்பதால் கடவுள் என்றும் குறிக்கப்பெற்றவன். அவனை அருவமானவன் என்பார்கள். ஆனால் லட்சோப லட்சத் தாரகைகள் மூலம் தன்னுடைய இருப்பை அவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். கோடான கோடி உயிரனங்கள் பொருந்திக் கிடக்கிற உலகில் ஒரு சீர்த்தன்மை காணப்படுகிறது. வினையின் விளைவாய் உடலெடுத்து ஐம்பொறிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கிடக்கிற நான் அகிலத்து நாயகனை எப்படி அறிந்து போற்றுவது?

விஜய் படத்தின் கத்தி பாடல்கள்

             விஜய் படம் என்றால் பாடலுக்கும், நடனத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். இது எல்லோரும் அறிந்ததே ஆனால் சமீபத்தில் வந்த கத்தி படத்தில் எந்த பாடலும் நன்றாக இல்லை என்பதே உண்மை. எனக்கு விஜய் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். கத்தி படத்தில் நிறைய சொதப்பல்கள். ஒரு சில பாடல்களை கேட்டேன் என்ன பாடல்கள் இப்படி இருக்கிறது என நினைக்க வைத்தது. "ஷெல்பிக்குள்ள" பாடல் மட்டும் சிலர் முணுமுணுத்தார்கள் மற்ற பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

Monday, 6 April 2015

திருவாசகம்/ ஆன்மீகம்

          எனக்கு திருவாசகம் படிக்க இப்போதுதான் வாய்த்திருக்கிறது. ஒரு பிரதோஷ நாளில் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. எடுத்துப் படிக்கத் தொடங்கினேன் ஒரு 5,6 பக்கங்களை கடந்திருப்பேன் என் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து உருகியது "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கு உருகார்" என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் அதை இப்போது உணர்ந்தேன். இதைப் படிக்கும்போது ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன் படிக்க படிக்க சிறு கட்டுரையாக போட முடியாது அப்படி எழதினால் முழுமையாகாது திருப்தி கிடைக்காது என்று தோன்றியது அதனால் ஒரு தொடராக எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

          ஒருவர் கடவுளின் மீது இத்தனை காதல் வைத்திருக்க முடியுமா? இத்தனைப் பக்தி வைத்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறது அதனால்தான் தெய்வ மாந்தராக திகழ்கிறார் மாணிக்கவாசகர்.

Thursday, 2 April 2015

தஞ்சாவூர் சமையல்/வாழைக்காய் வறுவல் (பிரைய்)

தேவையான பொருட்கள்: 

வாழைக்காய் - 2
 சோம்பு - 1 ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 3
 பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு 
கலர்பொடி - சிறிது 
உப்பு - சிறிது
 மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

நான் கடவுள் / ஒருபக்க கதை

              காரைக்குடி பேருந்து நிலையம் அரியக்குடி பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பஸ்க்கு காத்திருந்தேன். அருகில் என் தோழியின் மகள் கடைகளைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தோழி தனக்குத் தெரிந்த ஒருவருடன் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

              அப்போது என்னருகில் ஒரு குரல் திரும்பிப் பார்த்தேன் அழுக்கு சேலையும், பரட்டை தலையும், முகத்தில் அதிக சுருங்கங்களோடு வயது முதிர்ந்த பாட்டி "அம்மா... தர்மம் பண்ணுங்கம்மா... மயக்கமா வருதும்மா... காபித்தண்ணி குடிக்க காசுயிருந்தா குடுங்கம்மா..." என்றார். என் தோழியின் மகள் முகத்தை சுழித்து வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

Tuesday, 31 March 2015

இன்றைய கல்வி முறை

         இன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதில்லை இது ஒரு காரணம். அதோடு, மாணவர்களைக் தண்டிக்கூடாது கண்டிக்கக் கூடாது என்று கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தது அரசு. அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

              ஏனெனில் அது படிக்காத மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியரைக் கண்டால் மரியாதையும், பயமும் இல்லாமலே போய்விட்டது அப்படி இருக்கும் போது படிக்க வேண்டும் என்ற அக்கறை மாணவர்களுக்கு எப்படி வரும்? முன்பு ஆசிரியரைக் கண்டால் மதிப்பும், மரியாதையும் தானாக வரும் அதனால் படிப்பும் இயல்பாக வந்தது. முன்பு எத்தனைக் கஷ்டப்பட்டு படித்தாலும் மார்க் என்பது எட்டாக் கனியாக இருந்தது 10 வகுப்பில் பள்ளியில் 300 மார்க் எடுத்தால் பொதுத்தேர்வில் 250 அல்லது 200 தான் வரும் ஆனால் இன்று அரையாண்டு தேர்வில் இரண்டு மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவன் 400 மார்க் வாங்குகிறான் எப்படி?

Sunday, 29 March 2015

தஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி

             நாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதிரி வரலையே கல்யாண வீட்டு சாம்பார் மாதிரி வரலையேன்னு இதை செய்துப் பாருங்கள் அந்த டேஸ்ட் கிடைக்கும்.


தேவையான பொருட்கள்: 

 துவரம்பருப்பு - 100 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம் 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகு - 1ஸ்பூன்
 உருளைக்கிழங்கு - 1
 கத்தரிக்காய் - 1
 கேரட் - 1 
கொத்தமல்லி தழை - சிறிது
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பெருங்காயம் - சிறிதளவு
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்

வறுத்து அரைக்க

மல்லி - 1 ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 ஸ்பூன்
 சீரகம் - 1 ஸ்பூன்

Thursday, 26 March 2015

கல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..?


                பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட்டுகின்றனர். இது மதிப்பிற்குரிய பெண் மணிகளுக்கு பெருமை சேர்ப்பது வரவேற்க தக்க விடயம். ஆனால்,

                 இப்போது பரவலாக பத்திரிக்கைகளில் காணக்கூடிய செய்தி கல்லூரி பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான். செய்திகளை படிக்கும் போதே சுள்ளென்று தலைக்கு ஏறுகிறது கோபம். பெண்களை கிண்டல், கேலி செய்பவர்களையும், பாலியல் வன்முறைகளை செய்பவர்களையும் வன்மையாக கண்டித்து சமூக நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் போராட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெண்களே தானாக முன்வந்து விபச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்க தக்கது.

Wednesday, 25 March 2015

சிவனே உனைத் தேடி வந்தேன்

சிவனே உனைத் தேடிவந்தேன்
சிங்கார நாயகனே உனைக் காணவந்தேன்
அன்பான தெய்வமே ஆதி சிவனே
 மனமிறங்கி வா.. வா.. என் ஈசனே
பாவம் போக்க உன் பாதம் தொடவந்தேன்
பாவி எனை ஆட்கொள்வாய் சிவனே

தஞ்சாவூர் சமையல் / பால் பாயசம்

           பால்பாயசம் எல்லோரும் ஒரு மாதிரி செய்வார்கள் நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன் ரொம்ப ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:  

பசும் பால் - 1/2 லிட்டர்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 சேமியா - ஒடித்தது ஒரு கையளவு
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 5 
சர்க்கரை - 1 டம்ளர் (அ) 11/2
குங்குமப்பூ - சிறிது
 பாதாம் - 4-5

Friday, 20 March 2015

தஞ்சாவூர் சமையல்/ பொரிச்சக் குழம்பு

தேவையான பொருட்கள்:

 உருளைக்கிழங்கு - 2 
முருங்கைக்காய் - 1
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தேங்காய் - 1 மூடி
 மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
 மல்லித்தூள் - 1 கரண்டி 
சோம்பு - 1 ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப 
உப்பு - சிறிது

Thursday, 19 March 2015

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

           
              இணைய தளங்களிலும், காகிதங்களிலும் காணக்கூடிய செய்தி. செல்போன் டவரால் சிட்டுக்குருவி இனமே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அறிவியல் சார்ந்தவர்கள் ஆராய்ந்து சொல்கிறார்கள் கவிஞர்கள் காகிதத்தில் சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் சிட்டுக்குருவி அழிந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.

Wednesday, 18 March 2015

இந்த வார (மார்ச் 20-26) பாக்யாவில் என் கவிதை

இந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை...! பாக்யா இதழ் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்..!

Sunday, 15 March 2015

மனமும் தெய்வ ஞானமும்

         மனம் என்பது தனி மனிதனின் மனமாகப் பலகாலம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. "இது என் உடல், இது அவன் உடல் " என்று சொல்லும் போது உடலின் வேறுபாட்டைக் குறிக்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகளைக் கொண்ட உடல்கள் எல்லாமே உணவால் சமைந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இது உன் மனம், இது அவன் மனம், இது நல்ல மனம், இது கெட்ட மனம் என்றெல்லாம் தனி மனிதனின் மனத்தைப்பற்றிச் சொன்னாலும் எல்லா மனங்களும் வெளியாகாயத்திலிருந்து பெறப்பட்ட மனம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் மன ஆகாயம் பரவியிருக்கிறது என்பதை நீங்கள் இப்படி நம்பலாம். பூமிக்கு பலகோடி மேல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனின் ஒளியை பூமிக்கு கொண்டுவர இடையில் ஒளியாகாயம் இருக்க வேண்டும். ஒளிகளின் மின்காந்த அலைகளை உலக முழுவதும் பரவச் செய்ய ஆகாயப்பரப்பில் மின் காந்த ஆகாயம் இருக்க வேண்டும் என்பது போல், மனத்தின் அலைகளைத் தாங்கிச் செல்ல ஏதுவாக மன ஆகாயமும் இருக்க வேண்டும் என்பதை நாம் நம்பலாம். அதுமட்டுமல்ல இன்று உலகில் மிக அதிக ஆண், பெண்களால் பயன்படுத்தப்படும் மானதத்தந்தி(Telepathy) என்ற கலை, வெளி ஆகாயத்தில் மனம் பரவியிருக்கிறது என்பதை உறுதிப்படுகிறது.

Saturday, 14 March 2015

டாப்பு டூப்பு சினிமா செய்திகள்

              ஒரு சினிமா எடுப்பது என்பது மிக கடினமான வேலை. அப்பப்பா... பல குழுக்கள் ஒருங்கினைந்து கஷ்டப்பட்டு எடுப்பதுதான் சினிமா. அந்த படம் ஒடுவதும் ஒடாமல் இருப்பதும் கதையை பொறுத்துதான் அமைகிறு. ஆனால், சில பெரிய பெரிய நடிகர்கள் நடித்த படங்களை படம் வருவதற்கு முன் இவர் அப்படி நடித்திருக்கிறார் அவர் இப்படி நடித்திருக்கிறார் அப்டி இப்படி என்று டிவிலும், பத்திரிக்கையிலும் விளம்பரம் வரிசைக் கட்டி வாசிக்கிறது. அதே போல் படம் வெளிவந்ததும் நடிகரோடு படம் குழுவினர் பேட்டி கொடுப்பார்கள் பாருங்கள். படம் செம்மையா போகுது... 2 நாட்களில் 15 கோடியை தாண்டியது 30 கோடியை தாண்டியது என சொல்கிறார்கள்.

Thursday, 12 March 2015

சமையல்/ கோதுமை வடை

          டயட்டில் இருப்பவர்கள் இந்த கோதுமை வடையை செய்து சாப்பிடலாம். நொறுக்குத் தீணி சாப்பிட முடியலையேன்னு இனி கவலைப்பட வேண்டாம்.

 தேவையான பொருட்கள்:

முழு கோதுமை அல்லது
கோதுமை ரவை - 1 கப்
 கோதுமை மாவு - 1 கப்
 சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2 
சோம்பு - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது
 பூண்டு - 4 பல் 
உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - தேவைக்கேற்ப

Tuesday, 10 March 2015

காதல்

வாராந்திர ராணி இதழில் வெளிவந்த எனது கவிதை. 

Sunday, 8 March 2015

தஞ்சாவூர் சமையல் / எண்ணெய் கத்தரிக்காய் பொறியல்

தேவையான பொருட்கள்: 

கத்தரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துறுவல் - சிறிது
எண்ணெய் - சிறிது

Saturday, 7 March 2015

மகளீர் தினம்

           இன்று சர்வதேச மகளீர் தினமாம் டிவி, பத்திரிக்கை, மற்றும் அனேக இடங்களில் பேசுகிறார்கள். ஆண்கள் பெண்களை புரிந்துக் கொண்டு பெருமைப்படுத்துகின்ற தினம் அப்படிதானே? இன்று எத்தனை ஆண்கள் பெண்களைப் புரிந்துக்கொண்டார்கள்? எத்தனை ஆண்கள் பெண்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்கள்? கேள்வி குறியாகதான் இருக்கிறது.

Friday, 6 March 2015

கவிதை நயமும் கிராமத்து இசையும்

            "உள்ளத்து உள்ளது கவிதை இன் உருவெடுப்பது கவிதை"

           இது கவிமணியின் வாக்கு ஏட்டிலக்கியம் நாட்டுப்புற இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் ஒப்பிப்பொருந்தும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய நான்கினையும் கூறுவர். இந்நான்கும் ஓரளவு ஒப்ப அமையும் போது சிறிய கவிதை என்பது அவர்தம் கருத்து.

         இதனையே நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் இப்படி கூறுகிறார்.

 "பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் ஆணிபெறச் செய்வன செய்யுள்"

துவரங்குறிச்சி சிவ ஆலயம்

          தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே 7 கி.மீ தொலைவில் துவரங்குறிச்சி எனும் ஊரில் பழுதடைந்த சிவாலயம் ஒன்று இருக்கிறது. மூன்று தினங்களுக்கு முன்பு பிரதோஷம் அன்று முதல் முறையாகச் சென்றேன். கோவிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் நமது வீடு ஒன்று இடிந்த நிலையில் கிடந்தால் என்ன ஒரு உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு எனக்குள் வந்தது.

Friday, 27 February 2015

சுழியம்

தேவையான பொருட்கள்:

 கடலைப்பருப்பு - 1/2 கிலோ 
வெல்லம் - 2
 தேங்காய் - 1
 ஏலக்காய் - சிறிது
 மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்

Wednesday, 25 February 2015

மும்மூர்த்திகளின் தத்துவம்

            ஆக்கல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றும் இந்த உலகத்தில் எந்நேரமும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். நடப்பது எதுவானாலும் இந்த மூன்று வகைக்குள் அடங்கியே ஆகவேண்டும்.

            இந்த மூன்று சக்திகளையும் மனிதன் உணர்ந்துகொள்ளவே இறைவனை இந்த மூன்று முக்கியமான கிரியைகளின் வடிவமாக நாம் வழிபடுகிறோம்.

Tuesday, 24 February 2015

நட்பு என்பது எதுவரை?

சிலேட்டு குச்சியும் 
குச்சி மிட்டாயும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!

பேப்பர் பேனாவும் 
பென்சில் ரப்பரும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!

வயசு பசங்க /சிறுகதை

          ஊட்டி மலைபகுதியில் கதிர்கள் மறைய தொடங்கியது வெள்ளை வேட்டி போர்த்தியது போல் பனி பரவி கிடந்தது அந்த மலை உச்சியை நோக்கி இரு உருவங்கள் வேக வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தது அது ஒரு ஆணும் பெண்ணும்... அப்போது இவர்கள் செல்லும் பாதையின் பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம் கருப்பு கம்பளி போர்வையை போத்திக்கொண்டு ஒரு கையில் கம்புடனும் மறுகையில் டார்ச் லைட்டுடனும் வந்து கொண்டிருந்தது.

           "யாரது... யாரது... அங்க போறது கேக்குறேன்ல... நில்லுங்க" என்றவாறு விரைந்து வந்தது. யாரோ ஒருவர் தம்மை அழைக்கும் சத்தம் கேட்டு நின்றனர் இருவரும். கிட்ட நெருங்கி வந்த அந்த கருப்பு உருவத்திற்கு அறுபது வயதிற்கும்.

Monday, 23 February 2015

ஜபம் செய்வது எப்படி?

             மனிதனை நல்வழிப்படுத்தி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது ஜபம். எப்படி ஜபம் செய்யத் தொடங்குவது? வாங்க பார்க்கலாம்.

            உங்கள் வீட்டில் தனிமையான ஓர் அறையைத் தேர்ந்தெடுங்கள். சுவரில் உங்கள் மனதுக்கினிய சுவாமி அல்லது தேவியின் படத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கண் பார்வை இருக்கும் மட்டத்தில் அவருடைய பாதம் கண்ணில் படும்படி படத்தை மாட்டுங்கள். கீழே உட்கார ஒரு பாயையோ, பலகையையோ போட்டுக்கொண்டு உட்காருங்கள். காலை சௌகரியமாக சப்பணம் போட்டு உட்கார்ந்து ஜபத்தை ஆரம்பியுங்கள்.

Sunday, 22 February 2015

பாடும் வானம்பாடி சூப்பர் சிங்கர்ஸ்

              ஒரு நேரத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் அலைந்த கலைஞர்கள் ஏராளம். ஆனால் இன்று திறமையானவர்களைத் தேடி வாய்ப்புகள் வருகிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள். அந்தப் பணியை விஜய் டிவி சிறப்பாக செய்து வருகிறது.

            நேற்று சூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி என்ற 9 வயது சிறுமி எத்தனை அழகாக பாடி முதல் இடத்தை தட்டிச்சென்றது. அந்தக் குழந்தையை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது. இந்த வயதில் நாம் என்ன செய்தோம் என்று, இப்பவும் எதுவும் செய்யவில்லை மேடை ஏறினாலை கை, கால் உதறுகிறது. ஆனால் இந்த சிறுமிகள் எவ்வளவு தைரியமாக பயம் இல்லாமல் பாடுகிறார்கள்.

Saturday, 21 February 2015

தினசரி சிவன் வழிபாடு

                     ஞாயிற்றுக்கிழமை

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
 போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
 போற்றியோ நமச்சிவாய புறம் என்னப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/4 கிலோ 
வெல்லம் - 1 
தேங்காய் - 1 மூடி 
பாசிப்பருப்பு - 50 கிராம்

Friday, 20 February 2015

இம்சை

பூனையை மடியில கட்டுறதும்
 நமக்கு பிடிச்சவங்களை
 மனசுல வைக்கிறதும் ஒன்னு

Thursday, 19 February 2015

அல்சர் எப்படி வருகிறது?

            நேரத்திற்கு சாப்பிடாததால் தான் அல்சர் வருவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இல்லை, நேரத்திற்கு சாப்பிடுபவர்களுக்கு தான் இந்த அல்சரே வருகிறது.

          பசிக்காமலே நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக பசித்தோ, பசிக்காமலோ, அல்லது அதிக உணவோ எடுத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்த அல்சர் வருகிறது. அந்த உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி அது ஒரு கழிவாக மாறி நாளடவில் அது புண்ணாக உருவெடுத்து வலியை கொடுக்கிறது. கடைசியில் கேன்சராகவும் மாறுகிறது.

Monday, 16 February 2015

பிறவிப் பாவங்களைக் களையும் ராமநாதர்

         இராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் பாரதத்திற்குத் திரும்பிய இராமர். வானர வீரர்கள் புடைசூழக் கந்தமாதனம் வந்து சேர்ந்தார். அப்போது அகஸ்தியர் முதலான ரிஷிகள் அங்கு வந்து இராமரைத் துதித்து, சிவபக்தனாக விளங்கிய இராவணனை அழித்த பாவம் விலக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்று இராமருக்கு ஆலோசனை வழங்கினார்.

             இராமர் ஆஞ்சநேயரிடம் மாருதி நீ கைலாயத்திற்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவா என ஆணையிட்டார். ஆஞ்சநேயர் கயிலையை அடைந்தார். சிவபெருமானிடமிருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்று கந்தமாதனம் நோக்கி விரைந்தார். ஆனால் அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் குறிக்கப்பட்ட நல்ல நேரம் முடியப் போவதை முனிவர்கள் தெரிவித்தனர்.

சிவராத்திரி

            சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர்

             மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து பகலில் இளநீரும் இரவில் துளசி தண்ணீரும் அருந்தலாம். முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருத்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் இரவு கண்விழித்திருந்து அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி பாராயணம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

விரதங்களும் அதன் பலன்களும்

             மாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவராத்திரியும், மாசி மகமும் தான். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது.

Sunday, 15 February 2015

மாற்றம்

உன்...
நினைவுகள் வரும்போதெல்லாம்
நிலவைப் பார்த்து - நான்
ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்..!

உன்னைப் போலவே - அதுவும்
சில நாள் வளர்வதும்
சில நாள் தேய்வதுமாக இருக்கிறது
நீ செய்கின்ற அதே தவறை
நிலவும் செய்வதால்
நீதான் நிலவோ என்று
எண்ணிவிட்டேன் - இனி
வெகு விரைவில் உனை
 மறக்கக் கூடும் ஏன் தெரியுமா?

Saturday, 14 February 2015

இறால் பக்கோடா

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 kg
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு துறுவல் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - சிறிது
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

ஏதோ... நினைவுகள் மனதிலே வருகிறதே..!

       
  நினைவுகள் என்பது எத்தனை ஒரு அழகான விஷயம். ஏதோ ஒன்றை தேட போய் ஏதோ ஒன்று என் கையில் சிக்கியது. 2004 ல் இலங்கை வானொலிக்கு நான் எழுதிய இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் வந்த போது ஒலித்த பாடலின் தொகுப்புகள், அவருக்கு எழுதிய கடிதங்கள், சிறுகதைகள் என அடங்கிய ஒரு நோட்டு புத்தகம். அதை எடுத்து பார்க்கும்போது ஏனோ... என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது. இன்னும் சில பாடல்களை எங்காவது கேட்கும்போது இது என் பாட்டு, இது அந்த அறிவிப்பாளருக்குப் பிடித்தப்பாட்டு, அப்போது அவர் அப்படிச் சொன்னார் என்று அப்படியே செவி வழியே வந்து போகிறது. அந்தவகையில் எனக்குப் பிடித்தப் பாடலையும், எனக்காக அன்று ஒலித்தப் பாடலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

Friday, 13 February 2015

கும்மிபாட்டு

             நாட்டுப்புற இலக்கியங்களில் கும்மிபாட்டும், ஒப்பாரியும் முக்கியமான ஒன்று பல வருடங்களுக்கு முன்பு யாராவது இறந்தாலோ அல்லது பெண்கள் பூப்பெய்தினாலொ இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அது காணாமல் போய் வெகு காலமாயிற்று. எனக்கு 7- 8 வயது இருக்கும் போது எப்படி ஒரே மாதிரி கும்மியடிக்கிறார்கள் என்று வேடிக்கைப் பார்த்ததுண்டு. இப்போது அதே கும்மியடி பாடலைக் கேட்டுக்கொண்டே இதை பதிவு செய்கிறேன்.

தஞ்சாவூர் சமையல் /பாசிப்பருப்பு சாம்பார்


தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 5, 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 மூடி 
சீரகம் - 1 ஸ்பூன் 
உருளைக்கிழங்கு - 2
கத்தரிக்காய் - 2 
கடுகு - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள்தூள் - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப

Thursday, 12 February 2015

தஞ்சாவூர் சமையல் / முளைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:-

முளைக்கீரை - 1 கட்டு 
தக்காளி - 1 
பாசிப்பருப்பு - 50 கிராம் 
தேங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
பூண்டு - 1
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5

Wednesday, 11 February 2015

காதலர் தினம்

         
                காதலர் தினம் நம் இந்திய கலாசாரத்தில் இல்லாத ஒன்று. மேற்கத்திய கலாசாரத்தைதான் நம் காதலர்கள் கொண்டாடுகிறார்கள். சரி, இந்த தினம் என்றால் என்ன? எய்ட்ஸ் ஒழிப்பு தினம், போலியோ ஒழிப்பு தினம் இப்படி நிறைய சொல்லலாம். அதாவது, நமக்கு ஆபத்து தரக்கூடிய நமக்கு தீமை தரக்கூடிய ஒன்றை ஒழித்தப் பிறகு அதை ஒரு தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த காதலர் என்பது ஒரு துக்க நாள் "வேலன்டைன்" என்ற ஒருவன் இறந்த நாளைதான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு காதல் இறந்ததை, ஒரு காதலன் இறந்ததைதான் இன்றைய காதலர்கள் அதை சந்தோஷமாக , உல்லாசமாக, கடற்கரையிலும், ஹோட்டல்களிலும் மறைவான இடங்களிலும் கொண்டாடப்படுகிறதா? இந்த காதலர் தினம் பெற்றோருக்குதான் துக்கத்தினமோ?

தஞ்சாவூர் சமையல் / நாட்டுக்கோழி குழம்பு

தேவையான பொருட்கள்:-

நாட்டுக்கோழி - 1கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி - 3
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பட்டை - சிறு துண்டு
கசகசா - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1 
இஞ்சி - பெரிய துண்டு
 மிளகாய்த்தூள் - 1 கரண்டி
 மல்லித்தூள் -1 கரண்டி
 சோம்பு - 1 ஸ்பூன்
 கொத்தமல்லி - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப

Saturday, 7 February 2015

தஞ்சாவூர் சமையல் / இறால் சுரக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:-

 இறால் - 1/2 கிலோ
சுரக்காய் - சிறியது/ பாதி
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 முழு பூண்டு - 1
மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
 மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
 தேங்காய் - 1/2 மூடி
 புளி - சிறு நெல்லிக்காய் அளவு
 எண்ணெய்- தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு

விளையும் பயிர் / சிறுகதை

             மெரினா கடற்கரை... இதமான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த வெள்ளை வெளேர் மணற்பரப்பில் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு கண்களை மூடியபடி படுத்திருந்தான் கோபி. சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி சிரித்து, சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர் அதன் அருகில் ஒரு சிறுவன்

         "சார்... சார்... சுண்டல் வாங்கிகோங்க சார்.. கடைசியா ரெண்டு பொட்டலம்தான் சார் இருக்கு வாங்கிகோங்க சார் நல்லா இருக்கும்" என்று கெஞ்சியபடி இருந்தான்.

Tuesday, 3 February 2015

தெரிந்த விஷயம் தெரியாத கேள்விகள்

              ஆன்மீகவாதிகளின் மூட நம்பிக்கை என்ற ரீதியில் நிறைய கேள்விகளை நாத்திகவாதிகள் கேட்கிறார்கள். தெருவில் கிடக்கும் சாணியை மிதித்து விட்டால் ச்சீசி... இது சாணி என்கிறார்கள் அதையே பிடித்து வைத்து சாமி என்கிறார்கள். ஆடு, கோழிகளை சாமிக்கு பலிகொடுக்கிறார்கள் அதுவும் உயிர்தானே அதை காப்பாற்ற இந்த சாமி ஏன் முன் வரவில்லை என்று அறிவு சார்ந்த ஆயிரம் கேள்விகளை கேட்கிறார்கள். இதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும் போதுமென்று நினைக்கிறேன்.

உண்மை

நட்புக்கும் காதலுக்கும்
உள்ள சின்ன வித்தியாசம்
என்ன தெரியுமா?
நட்பு கொடுக்கிறது
 காதல் எதிர்பார்க்கிறது..!

மவுன மொழி

மலர்கள் பேசிக்கொள்கிறது
 மவுன மொழியில்
 நமக்கான நட்பைப் பற்றி!

ஏமாற்றம்

உன் பெயரில் இருக்கும்
 முதல் எழுத்தை பார்த்து
அடிக்கடி ஏமாந்து போகிறேன் - அது
 நீ இல்லை என்று தெரிந்த பிறகு

ஆபாசம், வன்முறை தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவையானதா?

            மக்கள் சினிமாவை விட அதிகம் பார்ப்பது தொலைக்காட்சிதான். சீரியல்கள் பெண்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. முன்பு தொலைக்காட்சிகளில் ஆபசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர்களும் எதார்த்தத்தை சொல்கிறோம் என்று ஆபாசமாகவே எடுக்கிறார்கள். கதைக்குள் ஏன் ஆபாசம் வருகிறது? வெள்ளித்திரைகளும் சரி, சின்னத்திரைகளும் சரி ஆபாசத்தை நம்பியே எடுக்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது. ஆபாசத்தின் மூலம் வன்முறைகள் தூண்டப்படுகிறது. அதில் பேசப்படும் வசனங்கள் கூட குடும்பத்தோடு பார்க்கும் போது நெளிய வைக்கிறது. இதை தவிக்கலாமே, நீங்களும் குடும்பத்தோடு பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள் இதை கருத்தில் உணர்ந்து ஆபாசத்தை தவிர்க்க தணிக்கை செய்ய வேண்டும்.

Saturday, 31 January 2015

தண்டனை

என் எழுத்துக்கள் அத்தனையும்
 உனக்காக படைக்கப்பட்டவை
 நீயோ வாசகனாக வந்து வாசித்து
 ஏனோ தானோவென்று
 விமர்சித்து விட்டு போகிறாய் ..!

Thursday, 29 January 2015

நட்பின் அடையாளங்கள்

          "எதையும் எதிர்பார்த்து வாழ்வது நட்பல்ல எதார்த்தமாய் வாழ்வதுதான் நட்பு"

 பாலும் தேனும் உனக்கு நான் தருவேன் பதிலுக்கு பாசத்தையும் அன்பையும் மட்டும் நீ எனக்குத் தந்தால் போதும் என்பதும் நட்புதான்..!

 தூரத்தில் இருக்கும் நண்பனை
 உயரத்தில் வைத்து அழகு பார்ப்பதும்
 நட்புதான்..!

Tuesday, 27 January 2015

மருத்துவம்/பெண்கள் கர்ப்பம் தரிக்க

1. அத்தி விதையை பாலில் அரைத்து தினமும் வெறும் வயிற்றில் 2 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும். 

 2. புதிய அமுக்கிராக்கிழங்கின் பொடியை மாதவிடாய் ஆகும் தேதிக்கு முன்பு 10 நாளும் மாதவிடாய் ஆன 10 நாளும் தொடர்ந்து அரை டம்ளர் சுடு தண்ணீரில் கலக்கி சர்க்கரை சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றிலும் மாலையிலும் இரண்டு வேளை ஒவ்வொரு மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் 12 மாத விலக்கு அதாவது ஒரு வருடம் சாப்பிட்டால் ஒரு வருடத்திற்குள் மாதவிலக்கு ஏற்படுவது நின்றுவிடும் அந்த நின்று போன மாதவிலக்கு மூலம் கருத்தரித்துள்ளார் என்று பரிசோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

Wednesday, 21 January 2015

சீரியல் கொலைகள்

                நாம் டிவி பார்ப்பதே ஒரு ரிலாக்ஸ்காகதான் அதில் வரும் சீரியல்கள் நம்மை எரிச்சலூட்டுகின்றன. சன் டிவி ல தெய்வ மகள்னு ஒரு சீரியல் போகுது அதில் வில்லத்தனம் செய்பவர்கள் எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் ஆனால் எதிர்மறையாக நல்லவர்கள் மாட்டிக்கொள்வார்கள். நான் நினைக்கிறேன் சினிமாவில் சரியான நேரத்தில் ஹீரோக்கள் வந்து வில்லனை அடிப்பதும், ஜெயிப்பதும் வாடிக்கையாகிப்போனதால் ஒரு மாற்றத்திற்காக சீரியலில் வில்லத்தனம் ஜெயிப்பதாக காட்டுவோம் என பார்முலாவை மாற்றிவிட்டார்களோ?

எல்லைக் கோடு

சீதைக்கு அன்று லட்சுமணன்
கோடு போட்டான் இன்று
நிறைய சீதைகள் தங்களுக்குதானே
ஒரு எல்லைக் கோடு
போட்டுக்கொண்டார்கள்..!

நம்பிக்கை

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாய்
 மாறும்போது வருத்தங்களை
 வார்த்தைகளாக வடி பிடித்தவர்கள்
 படித்துவிட்டு போகிறார்கள்..!

 விளக்கினை நம்பி 
 விட்டில் பூச்சிகள் இல்லை 
 நேரமும் காலமும்
 எதை எதிர்பார்த்து ஓடுகிறது
 நீயும் அதுவாக மாறு..!