தேவையான
பொருட்கள்:-
நாட்டுக்கோழி - 1கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பட்டை - சிறு துண்டு
கசகசா - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1
இஞ்சி - பெரிய துண்டு
மிளகாய்த்தூள் - 1 கரண்டி
மல்லித்தூள் -1 கரண்டி
சோம்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:-
கோழியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டை தட்டிக்கொள்ளவும். தேங்காய், சோம்பு, மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கோழிக்கறியில் சிறிது தண்ணீர் ஊற்றி தட்டிய இஞ்சி பூண்டை அதில் போட்டு வேக வைக்கவும். கறி வெந்ததும் இறக்கிவிட்டு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கசகசா, பட்டை, கிராம்பு,பிரியாணி இலை, சோம்பு, சின்னவெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி நல்ல மணம் வந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து வேக வைத்த கறியை அதில் கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைத்து இறக்கவும்.
இப்போது சுவையான மணமான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

sari.... neenga sonna madiri kuzhambu vaaralenna unga mela vazhakku thodaruven saakkuradha...!
ReplyDeleteKozhi kuzhambu thane vaikka poringa? Paambu kuzhambu illaye... appa sagamattinga.
Delete