Tuesday, 3 February 2015

தெரிந்த விஷயம் தெரியாத கேள்விகள்

              ஆன்மீகவாதிகளின் மூட நம்பிக்கை என்ற ரீதியில் நிறைய கேள்விகளை நாத்திகவாதிகள் கேட்கிறார்கள். தெருவில் கிடக்கும் சாணியை மிதித்து விட்டால் ச்சீசி... இது சாணி என்கிறார்கள் அதையே பிடித்து வைத்து சாமி என்கிறார்கள். ஆடு, கோழிகளை சாமிக்கு பலிகொடுக்கிறார்கள் அதுவும் உயிர்தானே அதை காப்பாற்ற இந்த சாமி ஏன் முன் வரவில்லை என்று அறிவு சார்ந்த ஆயிரம் கேள்விகளை கேட்கிறார்கள். இதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும் போதுமென்று நினைக்கிறேன்.


             வயலில் விளைகின்ற நெற்பயிரை அறுத்து புடைத்து கொண்டு வரும்போது அது நெல்லாகிறது. அதையே ஊற வைத்து அவித்து காயவைத்து இடிக்கும் போது அரசியாகிறது. அந்த  அரிசியை                             வைக வைத்து இறக்கும் போது சாதமாகிறது. சரி வயலில் இருக்கும் போதே அதை ஏன் நாம் பச்சையாக சாப்பிடக்கூடாது? சரி அது நெல்லாக இருக்கும் போது ஏன் சாப்பிடக்கூடாது?           யாக இருக்கும் போது ஏன் சாப்பிடக்கூடாது? அதை ஏன் வேக வைத்த பிறகு சாப்பிடுகிறோம். நெற் பயிர்க்கு ஏன் இத்தனை பெயர்கள்? ஒரு தானியம் ஒவ்வொரு இடத்திற்கும் தன் தன்மையை மாற்றிக்கொண்டதோ அப்படிதான் அந்த சாணமும் தெருவில் கிடக்கும் சாணியாகிறது, பிடித்து வைத்தால் சாமியாகிறது,  வீடு மொழுகி வாசலில் சாணம் தெளித்தால் கிருமி நாசினியாகிறது, நெருப்பிலிட்டால் திருநீராகிறது. ஒன்றிலிருந்து தான் ஒன்று அதது அந்தந்த இடத்தில் இருக்கும் போது அதன் மதிப்பும் அதன் தன்மையும் மாறுபடுகிறது. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

             புல், பூண்டிலிருந்து பறவை, விலங்குகள் வரை ஒன்றை அடித்துதான் ஒன்று சாப்பிடுகிறது. அதவாது அவர்களால் எது முடியுமோ அதை மட்டும் சாப்பிடுகிறது. உதாரணத்திற்கு மான் புலியை அடித்து சாப்பிட முடியாது புலிதான் மானை அடித்து சாப்பிடும் அதுபோலதான் நம்மால் இயன்றதை நம் உடலுக்கு ஏற்றுக்கொண்டதை உணவாக்கி சாப்பிடுவதை வழக்கமாகி கொண்டுள்ளோம். இவை எல்லாம் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக சாமிக்கு படையலிட்டு நாமே உண்கிறோம். ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் கடவுள் இதை கேட்கவில்லை. பகிர்ந்து உண்பது மனிதனின் இயல்பு அதனால்தான் அதை சாமிக்கு படைப்பது போல் படைத்து மனிதனே எடுத்துக்கொள்கிறான். அசைவம் சாப்பிடுகிறவர்கள் அசைவத்தை படைக்கிறார்கள், சைவத்தை சாப்பிடுகிறவர்கள் சைவத்தை படைக்கிறார்கள்.

           ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதில் என்ன குறை இருக்கிறது என்று பார்க்காமல் நாலுபக்கமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அன்று இருந்த ஆன்மீகத்தை தான் இன்று படித்து பட்டம் பெற்றவர்கள் அறிவியல் என்கிறார்கள். சரி பள்ளிகள் இல்லாத காலத்தில் பாமரர்கள் சொன்ன விஷயங்களை படித்தவர்கள் இன்று அறிவியல் என்கிறார்களே அது எப்படி? அந்த பாமரர்களுக்கு இந்த விஷயங்கள் எப்படி தெரிந்தது?

            எல்லாவற்றையும் ஆராய்த்தவர்கள் இதையும் ஆராயட்டும்.

No comments:

Post a Comment