Monday, 21 July 2025

திருவெற்றியூர் பாகம்பிரியாள்

திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது.  அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.




அந்த கோவிலில் சமைப்பதற்கு அடுப்பு பாத்திரங்கள் அங்கேயே இருக்கும் அதே மாதிரி மாவிளக்கு இடிக்க உரல் இருக்கும் அதில் மாவு இடித்து சாமிக்கு படைக்கலாம்.. அதெல்லாம் செய்து விட்டு சாமி கும்பிட போகும் போதுதான் கவனித்தேன் அங்கே சிவலிங்கம் இருப்பதை எனக்கு ஆச்சரியம் தான்.. அர்ச்சனை செய்ய நின்றேன் திடீர்னு ஐயர் வந்து மாலையை கழுத்தில் போட சொல்லி கொடுத்தார் எனக்கு அது புது அனுபவம் ஏன்னா கோவிலுக்கு போய் ஐயர் பூ கொடுக்கிறதே பெரிய விஷயம் சில இடங்களில் அந்த பூவும் கிடைக்காது. அப்படி இருக்கையில் மாலை கொடுத்து போட்டுக்க சொன்னால் எனக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும். பொதுவா உள்ளூரில் கூட பெரிய மனிதர்களுக்கு தான் கொடுப்பார்கள் அதாவது பெரிய ஆள்களுக்குதான் கிடைக்கும் எங்க ஊரிலும் அப்படித்தான் மாலை மரியாதை எல்லாம் பெரிய ஆட்கள் நல்லா தெரிந்தவர்களுக்குதான் கொடுப்பார்கள் இல்லன்னா தட்டில் அதிகமாக பணம் வைத்தால் கொடுப்பார்கள். நாம சின்ன பிள்ளைதான் கல்லூரி முடித்து அப்பதான் வேலைக்கு போய்கொண்டிருந்தேன் நமக்கும் இந்த கோவிலுக்கும் ரொம்ப தூரம் முன்ன பின்ன வந்ததது கிடையாது  முதல் முறையாக சென்றேன்.நமக்கு தானா இல்ல வேற யாருக்கும் கொடுக்க நினைத்து நமக்கு கொடுக்குறாங்களான்னு நான் சுற்றுமுற்றும் பார்த்துகொண்டிருக்க என் ப்ரண்ட் கழுத்தில் போட்டுக்கோ என ஜாடை காட்ட போட்டுக்கொண்டேன். அதாவது விரதம் இருந்து காசு சேர்த்து அந்த காசில் கோவிலுக்கு வந்த அவர்களுக்கு கிடைக்கவில்லை கூட துணைக்கு வந்த எனக்கு மாலை மரியாதை அதை அவர்களே எதிர்பார்க்கவில்லை என முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது சரியென்று சாமி கும்பிட்டுட்டு இருக்கும் போது அருகே இருந்தவர் சொன்னார் இந்த கோவிலுக்கு நான் வருசா வருசம் வருவேன் உள்ளே நுழையவே முடியாது அந்தளவுக்கு கூட்டம் இருக்கும் வெளியவே நின்று சாமி கும்பிட்டுட்டு போய்டுவேன் சாமியை பார்த்ததே இல்லை இன்னைக்குதான் பார்க்கிறேன் என்று சொன்னார் .. அட அப்படியா நாம முதல் தடவையே ஈசியா பார்த்துட்டோமேன்னு மனசுக்குள்ள நினைத்துக்கொண்டேன். அந்த கோவில் பாம்புகளுக்கு உரிய கோவில் பாடல் பெற்ற தலம் அது மட்டுமல்ல இந்த கோவில் பற்றிய புராண கதைகள் நிறைய உண்டு.  வீட்டில் இருப்பவர்களுக்கு உடம்பு சரியில்லன்னா இந்த கோவிலுக்கு வேண்டிக்கிட்டா நோய் நீங்கும் என்று சொல்வார்கள்.


எந்த நாளில் அங்கே போனேன் என்று நினைவில் இல்லை ஆனால் அங்கு வாங்கிய அம்பாள் விக்ரகம்தான் என் வீட்டு பூஜை அறையில்  உள்ளது. நாம எத்தனையோ கோவிலுக்கு போய் வருவோம் ஆனால் எது நம்ம வீட்டுல இருக்கனும்னு முடிவு பண்ணுதோ அதுதான் நம்ம வீட்டில் இருக்கும். அதே மாதிரி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு போகும் போதெல்லாம் தாழம்பூ பிரசாதம்  கிடைத்து விடும் ஐயர் சொல்லியே கொடுப்பார் அங்கு அது ரொம்ப ஸ்பெஷல். நாம கேட்டு வாங்குவதை விட தானா கிடைக்க வேண்டும் என நினைப்பேன் அப்ப தான் நமக்கு சந்தோஷம். நான் குறிப்பிட்ட இந்த இரண்டு கோவிலும் ஆடி மாசம் ரொம்ப விஷேசம் அதனால் தானோ என்னவோ இப்ப எனக்கு தோணுதோ தெரியவில்லை ஆடி வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜைகள் உண்டு. பொதுவா நாம போற எல்லா கோவிலுமே சிவன் இல்லாமல் அம்பாள் இல்லை அம்பாள் இல்லாமல் சிவன் இல்லை அந்த மாதிரி தான் நமக்கு அமைகிறது.. நான் ஏற்கனவே திருவானைக்காவல் கோவில் பற்றி பல பதிவுகள் போட்டிருக்கிறேன் வாய்ப்பு கிடைச்சா சென்று வாருங்கள். எந்த கோவிலுக்கு சென்றாலும் நம்பிக்கையோடு செல்லுங்கள் அந்த அம்பிகை உங்கள் கூடவே துணையாக வருவாள்.. கடமைக்காக போகாதிங்க மனதில் பக்தி இருக்க வேண்டும் டூரிஸ்ட் மாதிரி சுற்றி பார்த்துட்டு வரக்கூடாது. உள்ளன்போடு சென்று வாருங்கள் உங்கள் உள்ளத்தில் அவள் நிறைந்து இருப்பாள். நீங்கள் செல்ல வேண்டும் என்று விதி இருந்தால் தானாக சென்று வருவீர்கள். 

No comments:

Post a Comment