Showing posts with label இலங்கை வானொலியின் குரல். Show all posts
Showing posts with label இலங்கை வானொலியின் குரல். Show all posts

Saturday, 16 December 2017

இலங்கை வானொலி அறிவிப்பாளர் நாகபூஷணி அவர்களுக்கு விருது

     



          இலங்கை வானொலியில் அன்றும் இன்றும் தனது குரலால் வானொலி கேட்கின்ற அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாளர் கவிதாயினி, இலக்கிய குயில் நாகபூஷணி அவர்கள். இவர் மலையக ராணியாக உலாவந்து கல்வியிலும் பட்டம் பெற்று அங்கேயே தனது தரத்தை உயர்த்தி வானொலி என்னும் கலை உலகத்தில் நுழைந்து படி படியாக முன்னேறி இன்று பல விருதுகளை பெற்று எல்லோரையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். சிலர் நமக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என்று வருந்துகிறார்கள் ஆனால் இவருக்கோ விருதுகள் இவரைத் தேடி வருகிறது.

Friday, 30 June 2017

இலங்கை வானொலியின் குரல்

               முன்பு இலங்கை வானொலி கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது, அதில் வானொலி மன்றங்கள் வேறு இருந்தது. ஒரு குரூப் வானொலியில் பாடல் கேட்டுவிட்டு நம்ம பெயர் வராதா என்று வானொலிக்கு அருகே காத்து கிடந்தவர்கள் ஏராளம். இந்த நாள் எந்த அறிவிப்பாளர் வருவார் என்று காத்து கிடந்தது ஒரு கூட்டம்..  இன்னும் சிலர் ஆக்கங்களை எழுதிவிட்டு நமது பிரதி இன்று வருமா என்று காத்து கிடந்தவர்கள் ஒரு பக்கம்.  தனது பிரதி ஒலிபரப்பானால் சந்தோஷமும் வரவில்லை என்றால் எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்கள் ஏராளம் ஏராளம்... 

Thursday, 4 February 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேன் சிந்தும் நேரம் :


பாடல்கள்                                                 படம்
1. அடி போடி பைத்தியக்காரி - தாமரை நெஞ்சம்
2. அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன் - அன்புக்கு ஓர் அண்ணன்
3. அடியே ஏன்டி அசட்டுப் பெண்ணே - கன்னிப்பெண்
4. ராஜாத்தி கூந்தலுக்கு - சிரித்த முகம்
5. என்னடி செல்லக்கண்ணு - தேன்மழை
6. வாடி தோழி கதாநாயகி - ???
7. மயக்கத்தை தந்தவன்  யாரடி - பொம்மலாட்டம்

Sunday, 24 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளின் நிகழ்ச்சி தொகுப்பு

                   முந்தைய பதிவில் 2007 ஒலிபரப்பான பாடல்களை பதிவு செய்தேன். இந்த பதிவில் 2008 ல் நிகழ்ச்சிக்கு வந்தவைகளில் சில  தென்றலில் அதிகாலையில் கீதாஞ்சலி என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அறிவிப்பாளர் வரும்போது அவர் தொகுத்த சில பாடல்கள்.  04.07.2008  வெள்ளி

Tuesday, 5 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

            இந்த 2016 ல் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது சட்டென ஒன்று என் நினைவுக்கு வந்தது.  கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நேரங்களில் நமக்குப் பிடித்த விஷயங்களை குறிப்பிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை.

Sunday, 2 August 2015

இலங்கை வானொலியும் நானும்

                 இலங்கை வானொலி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.  நடிகர் சத்தியராஜ் அவர்கள் பேசுவதை கேட்டுயிருக்கிறீர்களா? அவர் பேட்டிகளில் உண்மையை பட்டு பட்டென்று போட்டு உடைப்பார் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி பேசுவது சிலருக்கு பிடிக்காது. அவர் போல நானும் பேசப்போறேன். ஹா.. ஹா... அவர் ஒரு பேட்டியில் சொல்வார் " நடிகன் படத்தில் நடிக்கிறதை விட நிஜத்தில்தான் அதிகம் நடிக்கிறாங்கன்னு சொல்வார். ஏன்னா மேடையா இருந்தாலும் சரி, நேரில் இருந்தாலும்  சக நடிகரை பார்க்கும்போதும், ரசிகர்களை பார்க்கும்போதும் வாய்கூசாமல் சில வார்த்தைகளை அள்ளிவிடுவாங்களாம். இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா? "உண்மையயை மட்டும் பேசுற மைக்கை எவனாவது கண்டுப்பிடிச்சா உலகத்துல ஒருத்தன் கூட உயிரோடு இருக்கமாட்டான் பேசுறவன் அத்தனைப் பேரும் செத்துபோயிடுவான்" ஏன்னா பேசுறது அத்தனையும் பொய்னு சத்தியராஜ்  சொல்வார். அது உண்மைதானே? அது சினிமாவில் மட்டுமல்ல எல்லாத்துறைகளும் அப்படித்தான்.

Sunday, 21 September 2014

அறிவிப்பாளர்களின் அஷ்டவதானி நாகபூஷணி

       


            அறிவிப்புத் துறையின் அஷ்டவதானி கவிதாயினி நாகபூஷணி அவர்கள் தான் இவரை இப்படிதான் சொல்ல வேண்டும் சிலருக்கு கவிதை எழுத தெரியும் ஆனால் பாட தெரியாது சிலருக்கு பாடத் தெரியும் ஆனால் ஆடத் தெரியாது. சிலருக்கு கதை, கட்டுரை எழுது தெரியும் ஆனால் அதை வாசிக்கத் தெரியாது.
                                     


             ஆனால், இவருக்கு கவிதை,கதை, கட்டுரை, ஆடல், பாடல் எல்லாமே கை வந்த கலை அப்ப இவர் அஷ்டவதானி தானே..! சரஸ்வதி இவர் நாக்கிலே தாண்டவம் ஆடுகிறாள் அடக்கமும் அழகு இவரிடத்தில் குடிக் கொண்டிருக்கிறது. இவர் அறிவிப்பாளராக வரவில்லை எனில் ஒரு பாடகியாக வர வேண்டியவர் இலங்கை வானொலி இந்த இலக்கிய குயிலை தன்னக்கத்தே தக்க வைத்துக்கொண்டது.


           இவர் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரயில் உயர்தரம் வரை கற்று யாழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்துவிட்டு தற்போது இலங்கை வானொலி தென்றலில் நிரந்தர அறிவிப்பாளராகவும், 2000 -ல்  வசந்தம் தொலைக்காட்சியில் "தூவானம்" நிகழ்ச்சியும் மற்றும் 2013 -ல் இருந்து முகமூடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.


Monday, 19 May 2014

இலங்கை வானொலியின் கலை பொக்கிஷம் அறிவிப்பாளர் நாகபூஷணி





                     வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர், விளம்பர நடிகை என்ற பன்முகங்களை கொண்டவர்.

                          இவர் நாவலர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரமும் யாழ் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணி பெற்று கொழும்பு பல்கலைகழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் முடித்திருக்கிறார்.

                        சின்னஞ்சிறு வயது முதல் வாசிப்பில் நிறைய ஆர்வம் கொண்ட இவர். பத்திரிக்கை, வானொலி, என்பவற்றுக்கு கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதி பின்பு அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

                        இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இலங்கை நேயர்களையும் இந்திய நேயர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். தன் குயில் போன்ற குரல் இனிமையால் நேயர்களை கட்டி போட்டவர்.பழகுவதற்கு இனிமையும், எளிமையும் நிறைந்தவர்.

                     இவர் பெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது, அதுமட்டுமல்லாமல் சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராகவும், அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராகவும் பங்குகொண்டு இருக்கிறார். மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2 ம் பரிசும் பெற்றிருக்கிறார்.

Thursday, 1 May 2014

இலங்கை வானொலியும் என் மனம் கவர்ந்த அறிவிப்பாளரும்

                   இலங்கை வானொலி எல்லோரும் ரசித்த காலத்தில் நானும் ரசித்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன் அப்போது வானம்பாடியில் (இப்போது தென்றல்) உமாசந்திரா அவர்களின் நிகழ்ச்சி எனக்குப் பிடிக்கும். அதே நேரத்தில் சர்வதேச ஒலிபரப்பில் ஒரு குரல் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போது அது யார் என்று சரியாக எனக்கு தெரியவில்லை அப்புறம் படிப்பு என்று இருந்துவிட்டேன்.


                           பரிட்சை முடிந்து வீட்டில் இருக்கும்போது மீண்டும் அந்த அறிவிப்பாளரின் குரல் என்னை ஈர்த்தது. அப்போது அவர் கவிதை, சிறுகதை, இலக்கியம் என்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். நிறைய நேயர்கள் தனது பங்களிப்பை தந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஸ்ரீராமின் வெற்றிபாதை என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது அதை பிஹச் அப்துல்ஹமீது அதை தொகுத்து வழங்கினார். 




                           இவர்களின் குரல்கள் என்னை கவரவே நானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது ஆனால் எழுதி, எழுதி நானே வைத்துக்கொண்டேன் அதோடு கல்லூரியில் சேர்ந்துவிட்டதால் எழுதும் ஆசையை ஓரங்கட்டி வைத்துவிட்டேன் கல்லூரி படிப்பு முடிந்ததும் மீண்டும் வானொலி கேட்க ஆரம்பித்தேன். அதன்பிறகு ஒவ்வொரு அறிவிப்பாளர்களையும் எனக்கு ரொம்ப பிடித்து போனது பிஹச் அப்துல்ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா, நாகபூஷணி, ஜெகன்மோகன், கலிஸ்டா, அனுஷாமொராய் என்று பெரும் பட்டியலே உண்டு அதில் ஒரு அறிவிப்பாளரின் குரல்
என்னை ரொம்ப கவர்ந்து வந்தது அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
ஆசைப்பட்டேன் ஆனால் அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தயக்கமாக இருந்தது.


                            அந்த நேரத்தில் நேயர் அரங்கம் என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது எல்லா நேயர்களும் அதில் இடம் பெற்று வந்தார்கள் அப்போது ஜெகன்மோகன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதன் முதலாக ஒரு நேயர் அரங்கம் என் நண்பியின் பெயரிலும், என் பெயரிலும் எழுதினேன் ஜெகன்மோகன் வாசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டும் இருந்தேன் இரண்டுமே ஒலிபரப்பு ஆனாது ஆனால் அவர் அதை வாசிக்கவில்லை.
யார் வாசித்தார்கள் தெரியுமா? யாருக்கு நான் கடிதம் எழுத வேண்டுமென்று
ஆசைப்பட்டேனோ, யாரின் குரல் என்னை ஈர்த்து வந்ததோ, அவரே எனது பிரதியை வாசித்தார். வாசித்ததோடு மட்டுமல்லாமல் நான் கவிதை என்று கிறுக்கிய வரிகளை நன்றாக கவிதை எழுதியிருக்கிறார் என்று பாராட்டவும் செய்தார் நான் எல்லையில்லா மகிழ்ச்சியுற்றேன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன். 50 க்கு மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்தது நேயர்கள் பாராட்டு மழை பொழிந்தார்கள் இது என்னுடைய முதல் அனுபவமாக இருந்தது நிறைய பேனா நண்பர்கள் கிடைத்தார்கள்.