Friday, 30 June 2017

இலங்கை வானொலியின் குரல்

               முன்பு இலங்கை வானொலி கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது, அதில் வானொலி மன்றங்கள் வேறு இருந்தது. ஒரு குரூப் வானொலியில் பாடல் கேட்டுவிட்டு நம்ம பெயர் வராதா என்று வானொலிக்கு அருகே காத்து கிடந்தவர்கள் ஏராளம். இந்த நாள் எந்த அறிவிப்பாளர் வருவார் என்று காத்து கிடந்தது ஒரு கூட்டம்..  இன்னும் சிலர் ஆக்கங்களை எழுதிவிட்டு நமது பிரதி இன்று வருமா என்று காத்து கிடந்தவர்கள் ஒரு பக்கம்.  தனது பிரதி ஒலிபரப்பானால் சந்தோஷமும் வரவில்லை என்றால் எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்கள் ஏராளம் ஏராளம்... 

               இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? அடியேனும் அதில் அடக்கம் தான். நேயர் விருப்பத்தில் பாடல் கேட்பதில் அதிக விருப்பம் இல்லை ஆனால் ஆக்கங்கள் எழுதி அதற்கு பொருத்தமான பாடல்களை கேட்பதில் அதிக விருப்பம் இருந்தது.. எல்லோரும் பொதுவாக தனக்கு பிடித்த யாரோ ஒருவருக்காக பாடல்களை கேட்பார்கள் ஆனால் நான் எனக்குப் பிடித்த அறிவிப்பாளருக்காக தான் எழுதினேன் அவருக்காகவே பாடல்களை தொகுத்தேன். அப்ப அவருக்குத்  தெரியாது இது நமக்குதான்னு, இப்ப எப்படியும் இதை பார்த்தால் தெரியத்தான் போகுது ஹா... ஹா.... இனிமேல் தெரிந்தால்  என்னவென்று சொல்கிறேன். ஹா...ஹா... இப்ப நமக்கு ஒருத்தரை பிடிச்சா அவருக்காக என்ன வேணா செய்றோம் இல்ல அந்த மாதிரி தான் இதுவும் எனக்கு அப்ப தோணுச்சு..எப்போது அவர் ரேடியோவுக்கு வருவார் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து காத்திருந்த நேரங்களில் தோன்றி பாடல் "உன்னை காணாமல் நானேது".. என்னோட ஒவ்வொரு பாடல் தேர்வுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் அதற்கு பொருத்தமாக ஒரு கவிதையும் இருக்கும். 

                நமக்குப் பிடித்த அறிவிப்பாளர் எப்போது வருவார் என காத்திருந்து நமது பிரதி ஒலிக்கிறதா என்று பார்த்து அதை கேசட்டில் பதிவு செய்து சந்தோஷப்படுவது என்பது இனி வரப்போவதில்லை. நமக்கு பிடித்த அறிவிப்பாளர் பிரதியை எப்படி வாசிப்பார் என்று முன்கூட்டியே கற்பனை செய்து அதற்கு தகுந்தார் போல் எழுதுவதுதான் என் வழக்கம். அதே போன்று கொஞ்சம் கூட மாறாமல் அந்த ஏற்ற இறக்கத்தோடு வாசிக்கும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இனிமையான குரலும், குரலோடு சேர்ந்த வாசிக்கும் திறனும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளருக்கே எல்லா பெருமையும் போய் சேரும். 

               அப்படி அந்த பிரதியை வாசிக்கும் போது அவர் என்ன சொல்கிறார் என்று உன்னிப்பாக கவனித்து கொண்டே இருக்கும் காதுக்கள் இரண்டும். அந்த நேரத்தில் சிறு பாராட்டு ஒன்று எப்படியேனும் அவரிடம் இருந்து கிடைத்துவிடும். சில நேரங்களில் எனது பிரதி ஒலிப்பரப்பானபோது நான் கேட்க மாட்டேன் டேப் ரெக்காடரை ஆன் செய்து விட்டு தூரத்தில் காதை பொத்திக்கொண்டு நிற்பேன். சிறு வெட்கம் கூடவே கூச்சமும்  ஹா...ஹா... பிரதி முடைவடைந்த பிறகு பதிவு செய்ததை கொஞ்சம் கொஞ்சமாக காதை பொத்தியபடிதான் கேட்பேன். இப்போது நினைக்கையில் சிரிப்பாக இருக்கிறது...
இப்படி வானொலியை அனுவனுவாக   ரசித்து மகிழ்ந்தது ஒரு காலம். 

          அப்போது ஒலித்த எனது பிரதியை மீண்டும் ஒலிக்கவிடுகிறேன் இப்போதும் காதுக்களை பொத்தியபடி நான்... 

            ஹலோ... நீங்கள் யாரும் காதுக்களை பொத்த வேண்டாம்... ஹா...ஹா... நன்றாக கேளுங்கள் இலங்கை வானொலியின் அபிமான அறிவிப்பாளரின் குரல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நாங்கள் ஏன் இலங்கை வானொலியை தூக்கி வைத்து பேசுகிறோம் என்று உங்களுக்கே புரியும். இது ஆறேழு வருடங்களில் நடந்தவை தான்  ஆனால் இப்போது இருக்கும் அறிவிப்பாளர்கள் மீது இந்தளவுக்கு ப்ரியமோ, மதிப்போ இப்ப இருக்கின்ற நேயர்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்று வரை தன் குரலால் பல நேயர்களை கட்டிப்போட்ட பெருமை குறிப்பிட்ட ஒரு சில அறிவிப்பாளர்களையே அது சாரும். 

இந்த பாடல் தேர்வு தென்றலில் பொன்னூஞ்சல் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது அதாவது நேயர் அரங்கம் போன்று தென்றலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு நேயரின் பாடல் தேர்வுகள் ஒலிக்கும் அதில்மூ ன்று பாடல்கள் இடம் பெறும் அதில் ஒன்றுதான் இந்த பாடல்.

நிகழ்ச்சியை கேட்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment