Monday, 12 June 2017

தாய்மடி

பவுர்ணமி நிலா
பட்ட பகலாக எரிய
வட்ட வாசலில்
உற்றார் உறவினார்
ஊர்கதை பேச
அம்மா மடியில்
படுத்து பாதி கதை
கேட்டும் கேட்காமலும்
தூங்கிய காலம்
இனி வரப்போவதில்லை


இங்க பாருடி இது
இங்கேயே தூங்கிடுச்சுன்னு
தோளில் தூக்கி போகும்
அம்மாக்களும் இனி
வரப் போவதில்லை...
அந்த இடத்தை இப்ப
ஷோபாக்கள் இடம்
பிடித்து விட்டன..!

2 comments:

  1. முற்றிலும் உண்மை.
    அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      Delete