என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Tuesday, 7 November 2017
Saturday, 22 July 2017
தக்ஷ்சினசித்ரா
சமீபத்தில் ஒரு சனி கிழமை அன்று தக்ஷ்சின சித்ரா மியூசியம் போனேன் எங்க அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள் சென்னை, முட்டுகாடுக்கு மிக அருகில் இருக்கிறது திருவான்மீயூரில் இருந்து சென்றால் ஹோல்டன் பீச், மாயாஜால் என வரிசையாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்கின்ற ஒரு வழி மாமல்லபுரத்திற்கும் அந்த வழியாக செல்லலாம் . முட்டுக்காடு என்ற பெரிய ஏரியும் அருகே இருக்கிறது.
Monday, 3 July 2017
ராமேஸ்வரம் ஒரு யாத்திரை
ராமேஸ்வரம் போக வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் அமாவாசைக்கு சென்றால் விசேஷம் என்றார்கள் அதன் படி அமாவாசை அன்று மூட்டை கட்டியாச்சு... பட்டுக்கோட்டையில் இருந்து காலை 8 மணிக்கு பஸ் ஏறினோம்.. அந்த நேரத்தில் நேரடியாக பஸ் இல்லை ஒருத்தர் சொன்னார் ராம்நாடு போய் ராமேஸ்வரம் போங்க சீக்கிரம் போய்விடலாம் என்றார். சரியென்று அரை மனதாக பஸ்ஸில் கிளம்பியாச்சு... அன்று அப்படி ஒன்றும் வெயில் இல்லை இதமாகவே இருந்தது.
Wednesday, 19 October 2016
காந்தி மண்டபம்/ Chennai Gandhi Museum
Friday, 24 July 2015
சதுரகிரி ஆகாயம் மேலே பாதாளம் கீழே
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணியபூமி பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்.
சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில், உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனதில் குடிகொண்டு விடுகிறார்.

Thursday, 1 January 2015
மோட்சபுரி காசியில் முக்தி அருளும் விஸ்வநாதர்
திரும்பிய
பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்த காசி அகிலேஸ்வரனின் அம்சம். காசியில்
மட்டும் கயிலைநாதனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
பரமேஸ்வரன் முன்பொரு சமயம் கைலாசத்தை விட மேன்மையான தலம் தரணியில் எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தார். வந்தவர் காசியை அடைந்தார். அந்நகரின் மேன்மையைக் கண்டு கைலாயத்தையே மறந்தார். இங்கேயே இருந்து விட்டார்.

Thursday, 25 December 2014
திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்
இன்று உங்களை நான் உறையூரில் உள்ள
அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன்.
உறையூர் சோழர்களுக்கு தலைநகரமாக விளங்கியது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. உறையூருக்கு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்திருக்கொரு பஸ் இருக்கிறது. நாச்சியார் கோவில் பஸ் நிறுத்ததில் இறங்கி 500 மீ நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.
ஊர்களை அமைக்கும் போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது, வீரமும் வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள் மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்.

Wednesday, 17 December 2014
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்
வாசகர்களே
நான் இப்போது உங்களை திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு
அழைத்துச் செல்ல போகிறேன். அங்கே செல்ல உங்களுக்கு விருப்பம்தானே..! அப்ப
என் கூட வாருங்கள்..!
நான் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி பயணித்தேன். பஸ் நிறுத்தம் அருகிலே திருவானைக்காவல் ஆலயம் மிகப்பெரிய கோபுரத்துடன் வரவேற்றது. அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலமாக இருக்கிறது.
இந்த ஆலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவராப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைய பெற்ற தலமாக இருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்து போகையில் இருபுறம் பாக்கு மரங்கள் அழகாக இருக்கிறது அதை கடந்து போகையில் நாலுகால் மண்டபம் அதிலுள்ள நான்கு தூண்களில் அழகான சிற்பங்கள் நம்மை கவர்கிறது அதை ரசிப்படி உள்ளே நுழைந்தேன் பிரம்மித்து நின்றேன். கற்தூண்களை மண்டபங்களை தாங்கி நம்மை பிரம்மிக்க செய்தது.

Tuesday, 20 May 2014
சிறப்பு வாய்ந்த கோவில்களும் நானும்
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில் இத்தலத்தில் மகாலிங்க சுவாமியை வந்து வணங்கினால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது வரலாறு. வரகுண பாண்டிய என்ற அரசன் இத்தலத்தில் தங்கி இறைவனை வணங்கி பிரமஹத்தி தோஷம் நீங்கி நலம் பெற்றான். நலம் பெற்றவுடன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் முடித்தார் அப்பெண்ணின் அழகிய திருவுருவம் கண்டு இப்பெண் கடவுளுக்கு மட்டும் உரியவள் என்று கருதி மகாலிங்க பெருமானிடம் தன் மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு மனம் உருக வேண்டினாராம் பெருமானும் ஏற்றுக்கொண்டார்.
மறுமுறை பெருமானை வழிபட சென்றபோது அப்பெண்ணின் வலது கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததைக் கண்டு அச்சமுற்று அந்தப் பெண்ணை திருமண நாளன்று வலது கை என்னால் பற்றப்பட்டது தான் பிழை வேற எந்த பிழையும் இல்லை அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாராம் அதன் பிறகு பெருமானும் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக வரலாறு சொல்கிறது. அந்தப் பெண் காந்திமதி தெய்வமாகி இத்தலத்திலே வீற்றிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகை போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகை சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள் . இந்தியாவிலே கொல்லூரிலும் திருவிடைமருதூரில் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது இத்திருகோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக சுற்றி வந்து மூலவரை வழிபாடு செய்தால் சித்த சுவாதினமின்மை மனநோய் பீடிக்கப்பட்டவர்கள் பைத்திம் முதலிய பெரும் நோய் மற்றும் செல்வம் பெருக திருமணத்தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற இங்கே வந்து வழிப்பட்டால் எல்லா தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள். இவை யாவும் படித்த, பார்த்த கேட்டு தெரிந்துக் கொண்ட விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எனக்கே அண்டை நாட்டில் இருக்கும் ஒருவர் சொல்லிதான் இந்த ஆலயத்திற்கு சென்றேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.
Monday, 19 May 2014
யாத்திரை (2) திருவண்ணாமலை
திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது ஒருநாள் போகலாம் என்று முடிவெடுத்தோம் ஆனால் சரியான ரூட் தெரியவில்லை. என் அலுவலத்தில் என்னோடு பணியாற்றுபவர் சொன்னார் கும்பகோணம் போய் போகலாம் என்று சொன்னார் நாங்களும் அவ்வாறு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் அந்த வழியில் ஏன்டா சென்றோம் என்று நொந்து போனோம்.
ஒருவிதத்தில் இது ஒரு சுற்று பயணமாக அமைந்தது. நாங்கள் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்றோம். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் இல்லை என்று பிறகு சிறிது நேர காத்திருப்புக்குபின் அணைக்கரை செல்லும் பஸ்சில் ஏறினோம் போய்கொண்டு இருக்கும் வழியிலே திரும்பி விடுவோமா என்றுகூட தோன்றியது என்னடா சிவன் ரொம்ப சோதிக்கிறானே என்று நினைத்தேன். அணைக்கரை சென்ற பிறகு பாலம் வேலை
நடைபெறுகிறது இங்கேயே இறங்கி செல்லுங்கள் என்று இறக்கிவிட்டார்கள்.
Friday, 2 May 2014
சதுரகிரி போகலாம் வாங்க
எங்கெல்லாமோ போறீங்க சதுரகிரி போயிருக்குறீங்களா?
ஒரு ஆடி அமாவாசை
அன்று சதுரகிரி சென்றோம். பஸ்சை விட்டு இறங்கியதும் ஆச்சரியத்தில் மூழ்கிபோனேன்
மலையின் அடிவார தென்னந்தோப்பில் கும்பல் கும்பலாக கடா வெட்டி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழியெங்கும் பக்தர் வெள்ளத்தில் மூச்சுவிடத் தினறியது ஒரு
லட்சம் பேருக்கு மேல் வந்திருந்தார்கள். சுந்தர மகாலிங்கரை தரிசிக்க ஐந்து வயது
குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை பயணித்தார்கள்.
உல்லாசப்
பயணமாக இருந்தாலும் சரி ஆன்மிக யாத்திரையாக இருந்தாலும் சரி அவை வழங்கும்
அனுபவம் சுவாரஸ்யமானவை. இந்திரகிரி, ஏமகிரி, வருணகிரி, குபேரகிரின்னு நாலு
மலைகள் அதற்கு நடுவில் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரின்னு நாலு
மலைகள் சதுர் என்கிற வார்த்தைக்கு நான்கு ன்னு பொருள் அதனாலதான் அந்த
இடத்துக்கு சதுரகிரின்னு பேர்.
Subscribe to:
Posts (Atom)