Showing posts with label மருத்தவம். Show all posts
Showing posts with label மருத்தவம். Show all posts

Monday, 11 May 2020

சளி இருமலுக்கு சிறந்த மருந்து

நாள் பட்ட சளி இருமலுக்கு சிறந்த மருந்து வெற்றிலை கசாயம் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து செய்முறை தெரிந்து கொள்ளுங்கள்..

Tuesday, 9 September 2014

மருத்துவம் / நன்றாகப் படிக்க, மூளை பலம் அடைய ஞாபக சக்தி உண்டாக

            வல்லாரை சமூலத்தை கொண்டு வந்து நிழலில் காயவைத்து அதை வஸ்திர காயம் செய்து வைத்துக்கொண்டு சூடான பாலில் காலை, மாலை,சாப்பிட்டு வந்தால் நினைவு ஆற்றலை பெறலாம் மூளை சக்தி அடையும் வல்லாரையை அடிக்கடி சமைத்து  வீட்டில் அனைவரும் கீரை உபயோகிபதுபோல உபயோகிக்கலாம் பத்தியம் இல்லை பள்ளயில் படிக்கும் மாணவர்கள் இந்த வல்லாரைக் கீரையை அடிக்கடி உண்டால் மிகவும் நல்லது.

          தினமும் காலையில் பாதாம் பருப்பு 10 எடுத்து பால்விட்டு அரைத்து 1/2 லிட்டர் பாலில் வேக வைத்து  அத்துடன் 10 கிராம் காய்ந்த  திராட்சை சேர்த்து நன்றாக சுண்ட வைத்து அதில் தேவையான அளவு கற்கண்டு கூட்டி சாப்பிட்டு வந்தால் மூளை    பலம் அடையும். திரட்சைக்கும், பாதாம் பருப்புக்கும் மூளையைப் பலபடுத்தும் சக்தி இருப்பதுடன் மூளை நரம்புகளும் நல்ல சக்தி பெரும் ஞாபக சக்தி மிகுதியாகும் உஷ்ணம் இருக்காது.