Friday 24 November 2017

மனதால் இணைவோம்

நாம் வெள்ளைக்காரர்களை ஒரு கொடுரமானவர்களால்தான்
புத்தகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா ஆனால் இப்போது அவர்களை காணும் போது அவ்வாறு தெரியவில்லை நான் பார்த்தவரை அவர்கள் மென்மையான இளகிய மனம் படைத்தவர்களாதான் தெரிகிறார்கள். சென்னை அடையார், பெசன்ட் நகர் பக்கம் அதிக வெள்ளைக்கார்கள் வசிக்கிறார்கள் அவர்கள் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை காணக் கூடியாதாக இருக்கிறது. நாய், பூனை, காகம் இவைகளுக்கு உணவு அளித்து கருணையோடு பார்த்துக்கொள்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம் அவைகளை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கிறோம். அது மட்டுமல்ல அவர்கள் யாரோடும் பேசும் போது கவனித்து இருக்கின்றீர்கள் சிரித்த முகத்தோடே பேசுவார்கள் அட்ரஸ் கேட்பதாக இருந்தாலும் சரி வேறு விஷயங்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்களின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் எப்படி இருக்கோம் என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே புரியும்.

Tuesday 7 November 2017

காஞ்சி ஒரு சிறப்பு தரிசனம்

           நெடுநாட்களாக காஞ்சிபுரம் சென்று வரவேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. திருவாரூரில் பிறப்பதற்கும் காஞ்சியில் கால் வைப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்.. அதற்காக நான் செல்லவில்லை என்னப்பன் சிவபெருமானை தரிசிக்க சென்றேன்...