Saturday 29 August 2015

நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

நார்த்தங்காய் - 4
வெந்தையம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பூண்டு - 5, 6 பல்
பெருங்காயம் - ஒரு கட்டி
இஞ்சி - சிறு துண்டு
கடுகு -சிறிது
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அச்சு வெல்லம் - 1


செய்முறை:

                   நார்த்தங்காயை அரை வேக்காடாக வேக வைத்து இறக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு 3 நாட்கள் காய வைக்கவும். வெந்தையம், பெருங்காயத்தை வறுத்து பொடி செய்துகொள்ளவும். பூண்டு, இஞ்சியையும் அரைத்துக்கொள்ளவும்.

                  வானலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி நன்கு காய வேண்டும். பிறகு கடுகு,  பச்சைமிளகாய் ஆகியவற்றை தாளித்து நறுக்கிய நார்த்தங்காயைக் கொட்டி அடிபிடிக்காமல் கிளறவும். மிளகாய்த்தூள்அரைத்த வெந்தயம்,இஞ்சி பூண்டு விழுது, வெல்லத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி.  யாரும் இனிப்பு சேர்த்து செய்வார்களா என்று தெரியவில்லை இதை செய்து சாப்பிட்டு பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீங்க.

பின்குறிப்பு:

                      நார்த்தங்காய் ஊறுகாய் வயிற்றுபுண், பித்தம், வாந்தி, மயக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து. பசியை தூண்டும்.
நார்த்தங்காய்

4 comments:

  1. வெந்தயம், பெருங்காயம் அரைத்தது, பூண்டு, இஞ்சி அரைத்தது இவைகளை என்ன செய்வதென்று சொல்லவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. அரைத்த வெந்தயம், இஞ்சி பூண்டு விழுது, வெல்லத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும் என்று இரண்டாவது பத்தியில் 3வது வரியில் உள்ளதே கவனிக்கவில்லையா

      Delete
  2. மன்னிக்கவும் ஐயா சேர்த்துவிட்டதாக நினைத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி

    ReplyDelete