Wednesday 31 December 2014

2014 யை திரும்பி பார்க்கிறேன்

           
               2014 இந்த வருடம் ஆரம்பம் என்னவோ எனக்கு அமர்க்களமாகதான் இருந்தது. ஆனால் போகபோக ஏனோ நிறைய மனக்கஷ்டத்தை தந்தது. நாம் கடந்து வந்த பாதைகள் அனைத்தும் பசுமையாக இருப்பதில்லை. சில இடங்கள் குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும், பாலைவனமாகதான் இருக்கிறது.

Tuesday 30 December 2014

சஷ்டியின் பெருமை

            "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்" என்ற கிராமப்பகுதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையான பழமொழி என்ன தெரியுமா? "சஷ்டியிருந்தால் அகப்பையில் வளரும்" என்பதுதான் இதன் பொருள்.

அறியப்படாத ரகசியங்கள்

ஜீவன் எப்படி உடலை விடுகிறது?

             பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன், மல வழியில் அபாநன்,தொப்புளில் ஸமாநன், கழுத்தில் உதானன், சரீரமெங்கும் வயாநன் தங்கியிருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யாநன் ரத்தத்திலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபாநன் ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும்போது ஜீரணம், மலஜலம் நின்று விடும். ஒரு வீட்டை ஒழித்துக் கொண்டு வேறு வீடு செல்வோர் எப்படி எல்லா சாமான்களையும் நடுவீட்டில் கொண்டு வந்து வைப்பார்களோ அப்படி எல்லாம் இருதயத்தில் வந்து தங்கும் பின்னர் வெளியேறும.

தஞ்சாவூர் சமையல் / நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:-

நண்டு - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
முழு பூண்டு - 1
தேங்காய் - 1 மூடி
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
தனியாத்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையானளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது

Sunday 28 December 2014

மகனின் காதலை ஆதரிக்கும் அம்மாக்கள்

              சினிமா தனமான காதல், கொலை, திருட்டு, வாழ்க்கையென பலவகைகளில் நாம் சினிமா உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் அம்மாக்களும் சினிமா தனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இது அவர்களாக தன்னை மாற்றிக்கொண்டார்களா? இல்லை காலத்தின் சூழ்நிலை அவர்களை மாற வைத்ததா? எனக்கு ஒன்று புரியாவில்லை சினிமாவை பார்த்து கெட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவர்கள் நல்ல விஷயங்களில் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்களோ தெரியவில்லை.

           இப்போதெல்லாம் சினிமாதனமாக தான் எல்லாம் இயங்குகிறது அதில் அம்மாக்களும் இடம் பிடித்து வருகிறார்கள். அம்மா, மகனுக்கு உள்ள நெருக்கம் உறவையும் தாண்டி தோழி என்று எல்லா விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தி ஒரு மகன் தன் தாயிடம் காதலையும், காதலியையும் அறிமுகப்படுத்துவதும் அதற்கு துணையாக இருப்பதும், ஆதரிப்பதும் அம்மாக்களுக்கு இப்போது பேஷனாகிவிட்டது.

தஞ்சாவூர் சமையல் /மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:-

மீன் - 1/2 கிலோ
மிளகாய்தூள் - தேவையான அளவு
தனியா தூள் - தேவையான அளவு
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஸ்பூன்
வெந்தையம் - சிறிதளவு
தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிது

Saturday 27 December 2014

உடல் எடையை குறைக்க

உடல் எடை குறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்  


  • தினமும் எழுந்ததும் உடல் பயற்சி செய்ய வேண்டும் காலை/மாலை இரு வேளையும்.காயகல்ப பயிற்சி நல்லது. 

Friday 26 December 2014

ஏழை

ஒரு ஏழை தன்னோட
கனவில் மட்டும்
பணக்காரனாக வாழ்கிறான்...!

ஏழ்மை

ஐந்து வருடம் எப்போது
கழியுமென்று கல்யாண
கனவுகளை கண்ணில் சுமந்தபடி
பஞ்சாலையில் பருவப்பெண்கள்..!



Thursday 25 December 2014

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்

             இன்று உங்களை நான் உறையூரில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன்.

             உறையூர் சோழர்களுக்கு தலைநகரமாக விளங்கியது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. உறையூருக்கு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்திருக்கொரு பஸ் இருக்கிறது. நாச்சியார் கோவில் பஸ் நிறுத்ததில் இறங்கி 500 மீ நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.


             ஊர்களை அமைக்கும் போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது, வீரமும் வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள் மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்.

பொதுச்சேவையில் சினிமா பிரபலங்கள்

             பொதுச் சேவை என்பது மகத்தான ஒரு சேவை. கருணை என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்னை தெரசா. இல்லாதவர்களுக்கு உதவுவதும், கொடுப்பதும் எல்லோருக்கும் அந்த மனம் இருப்பதில்லை அந்த மனம் ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது. இல்லாதவர்களை கண்டு பரிதாபம் கொள்வதோடு பாதிபேர் சென்று விடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு கொடுத்து உதவுவது ஒரு சிலர்தான்.

            அந்த வரிசையில் இப்போது சினிமா பிரபலங்கள் சேவை செய்து வருகிறார்கள் இது வரவேற்க தக்க விஷயம். சில நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை அடைகாத்துக் கொண்டு அவர்களுக்காக உயிரைக்கொடுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் ஏழை எளியவர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் நான் எளிமையானவன் எளிமையானவன் என்று சொல்லிக்கொள்ளாமல். நடிகர்களை விட குறைவாக சம்பளம் வாங்கி குறைந்த படங்களில் மட்டும் நடித்து அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவும் நடிகைகளுக்கு பெரிய மனதுதான். அந்த நடிகைகளை நாம் பாராட்டதான் வேண்டும்.

Tuesday 23 December 2014

சின்ன சின்ன மருத்துவம்


  • வாந்தி நிற்க துளசி சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். 
  • குமட்டல் நீங்க வெற்றிலைக்காம்பை வாயில் அதக்கினால் நீங்கும்.
  • குடல் வாயு தீர கொய்யா கொழுந்தை மென்று தின்ன தீரும்.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட குணமாகும்.

Monday 22 December 2014

சிந்தனைத் துளிகள்


அன்பு என்பது மின்னல் மாதிரி
அது எங்கே விழுமென்று
யாருக்கும் தெரியாது.

அன்பு தெரியாதவர்களுக்கு
புரியவைக்கலாம் ஆனால்
தெரியாததுபோல் நடிப்பவர்களுக்கு
புரியவைப்பது கஷ்டம்.

Sunday 21 December 2014

தஞ்சாவூர் சமையல் / அப்பம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

அரிசி : 2கப்
தேங்காய் ஒரு மூடி
வெல்லம் - 2 
ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப

சைனிஸ் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : 3 கப்
முட்டை கோஸ்: 100 கிராம்
கேரட் : 1
பீன்ஸ்: 100 கிராம்
தக்காளி: 1
வெங்காயம்: 50 கிராம்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1 
சர்க்கரை : 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு : சிறிதளவு

Friday 19 December 2014

சூடான செய்தி

           நான் சொல்லப் போற செய்தியைக் கேட்டு கதறி அழவோ, முட்டி மோதி கத்தி கூச்சல் போடவோ கூடாது. எல்லோரும் மனச திடமா வச்சுகோங்க.

           அது வேற ஒன்னுமில்ல நம்ம நாசா விஞ்ஞானிகள் நிலவுக்கு தண்ணீர் இருக்கான்னு பார்க்க போனங்கல்ல, அப்ப அங்க ஒரு மனித உடல் கிடந்திருக்கு. விஞ்ஞானிகளுக்கு ஒரே குழப்பமா போச்சு.

Thursday 18 December 2014

தஞ்சாவூர் சமையல் / சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - தேவைக்கேற்ப
தேங்காய் - 1 கப்
பூண்டு - 1 பெரியது
இஞ்சி - 2 துண்டு
மிளகு - சிறதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை, கசகச - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

Wednesday 17 December 2014

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்

             வாசகர்களே நான் இப்போது உங்களை திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன். அங்கே செல்ல உங்களுக்கு விருப்பம்தானே..! அப்ப என் கூட வாருங்கள்..!

             நான் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி பயணித்தேன். பஸ் நிறுத்தம் அருகிலே திருவானைக்காவல் ஆலயம் மிகப்பெரிய கோபுரத்துடன் வரவேற்றது. அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலமாக இருக்கிறது.

           இந்த ஆலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவராப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைய பெற்ற தலமாக இருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்து போகையில் இருபுறம் பாக்கு மரங்கள் அழகாக இருக்கிறது அதை கடந்து போகையில் நாலுகால் மண்டபம் அதிலுள்ள நான்கு தூண்களில் அழகான சிற்பங்கள் நம்மை கவர்கிறது அதை ரசிப்படி உள்ளே நுழைந்தேன் பிரம்மித்து நின்றேன். கற்தூண்களை மண்டபங்களை தாங்கி நம்மை பிரம்மிக்க செய்தது.

Monday 15 December 2014

ஆலயத்தில் செய்யக்கூடியது/ செய்யக்கூடாதது


  • கர்ப்ப கிரஹகத்தில் கடவுளுக்கு அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுயிருப்பார்கள் அச்சமயம் வழிபடுதல் கூடாது. 
  •  சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 
  •  ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப்பெரியவன் ஆலயத்தில் அனைவரும் சமம்.
  •  பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதல் கூடாது. 

Sunday 14 December 2014

கண்ணீர்

உன் கண்களென்ன
வெந்நீர் ஊற்றா?
சுடுகிறதே கண்ணீர்..!

நூதன பிச்சை

         ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களும் சரி பாவ புண்ணியம் என்று இரக்கப்பட்டு உதவி செய்பவர்களும் சரி இதனால் நிறைய சோம்பேறிகளை உருவாக்குகிறோமோ என்று கூட தோன்றுகிறது.

         ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா? 30 வயது மதிக்கதக்க ஒருத்தர் காவி உடை, நெற்றியில் பட்டை சந்தனம், கழுத்தில் மாலை, கையில் குடுகுடுப்பை சகிதம் வந்தார். (எங்கள் ஊரில் இதுபோன்று அதிகம் பேர் இருக்கிறார்கள்) நான் அவரிடம் "நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் போங்க" என்று சொன்னேன்.

          அவர் உடனே சொன்னார் "என்னம்மா வேண்டான்னு சொல்றீங்க நல்ல வாக்கு சொல்றேன் ஏன் தடுக்குறீங்க என்று சொல்லிவிட்டு என்னைப்பற்றி ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்தார் இது எல்லோரும் வழக்கமாக சொல்வதுதான். இப்படி சொல்லிவிட்டு சாப்பாடு இருக்குமான்னு கேட்டார்.

Friday 12 December 2014

2060 ல் நம் இந்தியா எப்படி இருக்கும்? என் பாரதம் எப்போது முன்னேறும்?

            இந்தியா ஒரு காலத்தில் அடிமை இந்தியாவாக இருந்தது. இன்று அந்த அடிமைச்சங்கலியை உடைத்தெரிந்து முன்னேற்ற பாதைகளில் சென்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடங்கள்தான்.


          ஆம், நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மின்சாரம், இருப்புபாதைகள் போக்குவரத்து வசதிகள் என பல நவீன வசதிகளை நாம் கற்றுக்கொண்டு இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

Thursday 11 December 2014

ரசிப்பதற்கு மட்டும்

அழகுப் பெண்ணின் 
முகத்தில் இருக்கும்
பருபோல் பூக்களின்
மேலிருக்கும் மழைத்துளி..!

இரவெல்லாம் காத்திருந்து
கதிரவனைக் கண்டதும்
உருகும் ஒற்றைப் பனித்துளி..!

Monday 8 December 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்/ சிறுகதை

                                               கதை தொடர்ச்சி

          இரவு ராசாத்தி சமையல் செய்துக்கொண்டிருந்தாள். அனிதா பக்கத்து ரூமில் நாளைக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்தாள். கண்ணன் மெல்ல வந்தான் பேக்கை தன் ரூமில் வைத்தவன் சமையலறை பக்கம் சென்றான். "என்னம்மா சமையலா" என்றான். உடனே கோபத்தோடு தலையை வெடுக்கென்று திருப்பி "எங்கேடா போய் தொலைஞ்சே ரெண்டு நாளா... எங்க போனே.. நீ.. புள்ளையா.. நீ.. என்னைக்காவது உண்மையை சொல்றீயா ப்ராடு.. ப்ராடு.. மூஞ்சிய பாரு.. " ஏக வசனத்தில் திட்டி தீர்த்தாள்.

               "என்னம்மா.. இப்படி கோபமா பேசுறீங்க., நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. நான் கல்யாணத்துக்கு தாம்மா போனேன்..." என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

Sunday 7 December 2014

தலைமுடி கறுப்பாக வளர

           மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சாறு ஒரு லிட்டர், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், கார்போக அரசி 200 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் இவைகளை ஒரு பெரிய சட்டியில் போட்டு லேசான தீயில் எரித்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். எண்ணெய்பதம் வந்ததும் சுத்தமாய் வடிகட்டி ஆறிய பின்பு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு தலைக்கு தேவையான போது தேய்த்து வந்தால் முடி வளருவதுடன் முடி கருத்து வளரும்.

Saturday 6 December 2014

விந்தையான கணிப்புகள்

           நவீன அறிவியல, விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்வோர் அடையும் நிலைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளின் முடிவுகள் புராணம் கூறும் கதைகளை நினைவுப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறது. வானில் மிளிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஆராய்ந்து அதன் மகத்துவத்தை முன்னோர்கள் கண்டு அனுபவித்து கதை வாயிலாகவும், செவி வழி பரவும் செய்தியாகவும் கூறி இருக்கின்றனர்.

              27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரமான ரேவதியின் கதை ஆச்சர்யமான கதை!

Friday 5 December 2014

கொஞ்சம் குறும்பு கொஞ்சம் குசும்பு

       
பெரும்பாலும் பழைய சினிமாவில் ஒரு வசனம் எல்லா படங்களிலும் வரும் அந்த வசனம் என்ன தெரியுமா? "ஒரு மரத்தில் படர்ந்த கொடி வேறொரு மரத்தில் படராது" என்று வரும் இதை எல்லோருமே கேட்டுருப்பீர்கள் இல்லையா?

         அது உண்மையா எனக் கண்டறிய நான் ஒரு வேலை செய்தேன். எங்க வீட்டில் காவள்ளி என்ற ஒரு கொடி இது கிழங்கு வகையை சார்ந்தது வெற்றிலை கொடிபோல் அழகாக பரடரும். அந்த கொடியின் ஓரத்தில் ஒரு கம்பை வைத்திருந்தேன் அதில் அந்த கொடி படர்ந்து இருந்தது. நான் அந்த கம்பை எடுத்துவிட்டு, இன்னொரு கம்பில் அந்த கொடியை எந்த சேதாரமும் செய்யாமல் சுற்றி வைத்துவிட்டேன்.

மருத்துவம்/ஆஸ்துமா குணமாக

     ஆடு தின்னாப் பாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாகக் கத்தரித்துப் புகையிலையில் வைத்துச் சுருட்டுச் சுற்றிப் புகைத்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும். 

தீபங்கள் பேசும்

இந்த உலகத்தில்
தாம்தான் பெரியவனென்ற
அகந்தையை அழிக்க
பிரம்மாவையும் விஷ்ணுவையும்
அடிமுடி காண விரட்டி
எம்பெருமான் ஈசன்
தன் பேருறுவைக் காட்டிய
கார்த்திகை திருநாள் இன்று

Tuesday 2 December 2014

மனமும் அட்ட சித்திகளும்

         
                 யோகி, சித்தர், சாது என்று சொன்னதும் அவர்கள் ஏதோ அற்புதங்களை, சித்துக்களைச் செய்வார்களென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அற்புதங்களைச் செய்யாதவர் யோகியாய் இறையருளைப் பெற்றவராய் பக்தராய் இருக்க முடியாதென்பது பலருடைய தவறான கருத்து. யோகி, சித்தர், சாது என்பதற்கும் சித்துக்கள் விளையாடுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. யோகத்தின் குறிக்கோள் சித்து விளையாடுவது அல்ல. ஒரு உண்மையான யோகி அதைப்பற்றி நினைக்கவே மாட்டான்.

           இறைநெறியில் செல்பவர்களுக்கு இடையில் சித்துக்கள் செய்யும் ஆற்றல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதுப்பற்றி அறிய மாட்டாமல் மேலே முன்னேறிப் போக முயல்வர். ஆக சாமியார், யோகி என்றால் சித்துக்கள் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றோ, சித்துகள் செய்பவர்களெல்லாரும் சன்மார்க் சீலர்களென்றோ கருதும் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

            பொதுவாக சித்துக்கள் அணிமா, லகிமா, கரிமா, மகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, ப்ராப்தி என எட்டுவகைப்படும். ஆனால் முன் பகுதிகளில் நாம் விளக்கிய சூக்கும திருஷ்டி, சூக்கும் ச்ரவணம், சூக்கும யாத்திரை, மானதத்தந்தி போன்றவைகளையும் சித்துகளென்றே சொல்ல வேண்டும்.