Tuesday 30 January 2018

பள்ளிப் பருவத்திலே( 2)

            நட்பும் காதலும் கிட்டதட்ட ஒன்றுதான் காதலில் எப்படி பிரிவு , பரிவு, துன்பம்,இன்பம், அன்பு பாசம் எதிர்பார்ப்பு, ஏக்கம், சண்டை, கொஞ்சல் கெஞ்சல் இருக்கிறதோ அது எல்லாமே நட்பிலும் உண்டு ஆனால் இரண்டிற்கும் ஒரே ஒரு நூழிலை  வித்தியாசம் தான் காதலில் அசைவம் உண்டு நட்பில் அது இல்லை அதனால்தான் அது புனிதமாக சொல்லப்படுகிறது. உறவுகளைவிட உயர்வாக கருதப்படுகிறது கணவன் மனைவிக்குள் உறவு இல்லையெனில் விவாகரத்து வாங்க உரிமை உண்டென்று அரசு சொல்கிறது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு கண்வனையும் மனைவியையும்  இணைப்பது உறவு அது இல்லை என்றால் தனித்தனியே பிரிந்து போகிறார்கள் ஏனெனில் அதுதான் வாழ்க்கை என்கிறார்கள் ஆனால் நட்பில் அப்படி பந்தம் இல்லை என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறதே எப்படி அதற்கு பெயர் தான் நட்பு. இவையெல்லாம் உணர்ந்தவர்களால் மட்டுமே நட்பை வளர்க்க முடியும். ஆனால் ஆழமான நட்பில் பொறாமை வந்துவிட்டால் அதை விட கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் நட்பிலும் அது வந்தது சுதாவுக்கும் கலாவுக்கு இடையிடையே ஆயிரம் சண்டைகள் வந்தாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடும் இவர்கள் இருவருக்கும் நடுவில் யாரும் வரதா வரை. ஆனால் இவர்கள் இடையில் புதிதாக ஒரு பெண் வந்தாள். இவர்கள் வீட்டிற்கு அருகிலே ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது அங்கே புதிதாக ஒரு நர்ஸ் வந்தாள். பெயர் வள்ளி ஒல்லியான தேகம், நல்ல கருப்பு ஆனால் கலையான முகம் அதற்கு தகுந்தார் போல் கலகலவென பேச்சு சுதாவுக்கு பார்த்த உடனே அவரை ரொம்ப பிடித்து போனது தன் கூட பேசாத ஒரு ஆளைவிட கலகலவென ஒரு ஆள் பேசுவதை கேட்டதும் பிடித்து போனதோ என்னவோ இது கலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில் சுதாவிடம் பேசுவதற்காகதான் கலா அவள் வீட்டிற்கே வருகிறாள் அந்த நேரத்தில் வள்ளியும் வந்து பேசிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை அது உள்ளுக்குள்ளே பொறாமையை வளர்த்தது.

Saturday 27 January 2018

பள்ளிப்பருவத்திலே (சிறுகதை)

                          
                 சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தவள் கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

Wednesday 24 January 2018

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சமர்ப்பணம்

உண்மையில் மனம் மகிழ்ந்து இந்த பதிவை இடுகிறேன்... வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களைப் பார்த்து முதலில் நாம் வெட்கப்பட வேண்டும் ஏன் தெரியுமா? முன்னாடி நாம சொல்வோம் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் போய் வசிக்கிறான் வெளிநாட்டில் போய் வசிக்கிறான்னு ஆனால் இன்றைக்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் சாதி்த்ததை தமிழ்நாட்டில் இருக்கும் நாம்மால் ஒன்றையும் அசைக்க கூட முடியல இதான் உண்மை. மலேசியா, சிங்கப்பூர் கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா இங்கெல்லாம் தமிழன் போய் வசித்தான் அங்கெல்லாம் இன்று தமிழ் தலை நிமிர்ந்து வாழ்கிறது. இங்கிருந்து போன ஒவ்வொரு தமிழனும் பச்சை தமிழன் அதனால் போன இடத்தில் தன் இனத்திற்காக தன் மொழிக்காக போராடி வெளிநாட்டிலே இன்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து அமர்ந்திருக்கிறான். ஆனால் நாம் தமிழ்நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்து, இங்கேயே படித்து ஒரு பயனும் இல்லையே...