Sunday 31 August 2014

யாரும் தீண்டாத காகிதம்

யாரும் தீண்டாத
காகிதம் வானம் - அதில்
அழகிய கவிதையாய்
உலா வருகிறது நிலா - அதை
காண வந்த கூட்டங்கள்
கண்சிமிட்டி சிரிக்கிறது
விண்மீன்களாய்..!

துணை

பிணம் கூட
எரியும் போது
எழுந்து நிற்கிறது
நீ மட்டும்தான்
எழுந்து நிற்க
துணை தேடுகிறாய்..!

இலக்கியமும் அறவுணர்வும்

                 இலக்கை இயம்புவது இலக்கியம் குறிக்கோளைச் சுவைப்பட கூறுவது இலக்கியம் என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் இந்நான்கும் கொண்டது இலக்கியம் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்கிறது நன்னூல்.

                 பிறன்மனை நோக்காத பேராண்மையை இராமயணம் வலியுறுத்துகிறது இந்த இப்பிறவிக்கு இருமாந்தரைச் சிந்தையாலும் தொடேன் என்கின்றான் இராமன். பிறன்மனை நோக்கினான்
இராவணன் பெண்ணாசையால் பேரழிவை சந்திந்தான் மண்ணாசையால் மாபெரும் அழிவை சந்தித்தான் துரியோதணன் இதனை தெளிவாக விளக்குகிறது நூல்கள்.

பழந்தமிர் நாகரித்தையும் பண்பாட்டையும் பறை சாற்றுவதாக இலக்கியங்கள்
கூறுகிறது.

                                    "முந்தை இருந்து நட்போர் கொடுப்பின்
                                    நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"

என்கிறது நற்றினை

                                     "நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
                                     அல்லது செய்தல் ஓம்புமின்"

என்கிறது புறனாறு.

Saturday 30 August 2014

என் மனதில் பட்டவை

                   கதையாகட்டும், கவிதையாகட்டும், கட்டூரையாகட்டும்பெரும்பாலும் அது கற்பனையாகவோ அல்லது மற்றவர்கள் வாழ்வில் நடந்தவையாக இருக்கும் கட்டுரை என்றால் ஆங்காங்கே நடந்தவைகளை பற்றி அல்லது சில உண்மைகளைப் பற்றி ஒரு ஆதாங்கத்தின் வெளிப்பாட்டால் நாம்எழுதுவதுண்டு. சில நேரங்களில் கற்பனைக்கு உருவம் காட்டுவதும் சில நேரங்களில் உருவங்களே கற்பனையாகி போவதும் உண்டு ஆனால்
சிலர் எது நிஜம் எது நிழல் என்று தெரியாமல் தவறாக புரிந்து கொண்டு
பிதற்றுகிறார்கள்.

                   நாம் மற்றவர்கள் வாழ்வில் நடந்தது அல்லது ஏதோ ஒரு கருவை எடுத்துக்கொண்டு நாமே அந்த இடத்தில் இருந்து உணர்வு பூர்வமாக அந்தந்த கதாபாத்திரமாக மாறுவது தான் கதையும் கவிதையும் ஆனால் அதை படிப்பவர்கள் இது அவர் வாழ்வில் நடந்தவையாக இருக்கும் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.

                 கவிதை எழுதினால் காதலா என்று கேட்கிறார்கள் காதலிப்பவர்கள் மட்டும் தான் கவிதை எழுதுவார்களா? கவிதை எழுத தெரியாத காதலர்களை என்னவென்று சொல்வது அவர்கள் காதல் பொய் என்றல்லவா ஆகிவிடுகிறது. இப்படிதான் சிலர் நம்மையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி விடுகிறார்கள். நாம் வாசகர்களாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இருந்தால் உங்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கலாம் அல்லது நண்பராக இருந்தால் தவறுகளை சுட்டிக் காட்டலாம் சிறந்த விமர்சனம் ஆரோக்கியமானது அதை விடுத்து தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்ககூடாது. கலைத்துறையை பொறுத்தவரை அது எந்த துறையை
சார்ந்தவையாக இருந்தாலும் சரி நாம் எப்படியோ யாரோ ஒருவருக்கு ரசிகையாக ரசிகனாக கண்டிப்பாக இருப்போம் ஆனால் வெறும் ரசிகர்களாகவே இருப்போம் உரிமை எடுத்துக் கொள்வதோ உரிமை கொள்வதோ வேண்டாம் அது ஏமாற்றத்தையே தரும்.

                 ஆன்மிகத்தைப்பற்றி எழுதினால் உங்கள் வயதென்ன என்றுதான் முதலில் கேட்கிறார்கள் அகவைக்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? எந்ந வயதில் வேண்டுமென்றாலும் ஆன்மிகம் தோன்றலாம் இந்த வயதில் இருந்து இந்த வயது வரை என்று கணக்கெல்லாம் இல்லை. நம்மால் அது முடியாது என்று தோன்றும் போது நாமகா ஒன்றை நிர்ணயித்து கடவுளையே ஏமாற்றுகிறோம். கடவுளையே கல்லாக்கி விட்டு அனுதினமும் பூஜை செய்து கடா வெட்டி பொங்கல் வைத்து சாப்பிட்டும் விட்டு இப்படி கல்லா இருக்குறீயே என்று ஜபிக்கவும் செய்கிறோம். கடவுளே ஒரு நொடி குழம்பி தான் போகிறான் மனிதனின் வாழ்க்கை நெறி புரியாமல்.

                 ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உற்று நோக்குங்கால் கடைசியில் எல்லாமே பூஜ்ஜிமாகவே போகிறது. வெங்காயம் எத்தனை மருத்துவ குணம் உடையது அது சேரும் இடத்தையும் சேர்த்துக் கொண்டவற்றையும் கெட்டவைகளை அகற்றும் தன்மையும் கொண்டது ஆனால் உறிக்க உறிக்க கடைசியில் ஒன்றும் இல்லாமலே போகிறது நமது வாழ்க்கையும் அப்படி தான்

ஸ்ரீசந்திரா

யார்? நண்பன்

                                உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே
                               இடுக்கண் களைவதாம் நட்பு.

                 நம்மில் சிலர் "டேய் நீ என் உயிர் நண்பேண்டா.. உனக்கொரு அவமானம்ன்னா அது எனக்கும் அவமானம் உன்னோட துக்கம் எனக்கும் துக்கம் உன்னோட சந்தோஷம் என் சந்தோஷம் நீ வைச்சுருக்கிறதெல்லாம் என்னோடது நான் வைச்சுருக்கிறது எல்லாம் உன்னோடது உன்னோட காசு என்னோட காசுறா..." என்று உரிமையோடு பேசும் நண்பர்களை
பார்த்திருக்கலாம்.

Tuesday 12 August 2014

எழுதுகிறேன்... ஒரு கடிதம்

       
அன்புள்ள... "இல்ல வேணாம் ஹாய்... வச்சுக்கலாம் இல்ல வேணாம் ஹலோ... ம்ம் இது நல்லா இருக்கு இதே வச்சுக்கலாம்.." என்னாச்சு ஏன் இப்படினு நினைக்கீறீங்களா? கடிதம் எழுதி ரொம்ப நாளாச்சு எப்டி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அதான் இத்தனை குளறுபடிகள். இப்பவும் காகிதத்தில் கடிதம் எழுதலாம் உங்க வீட்டில் இருப்பவர்கள் கூட சிரிப்பார்கள் எனக்கு வந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தேன் உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வந்தது நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டேன் ஹா... ஹா... ஹா... முன்பு கடிதத்தை தவிர வேற எதிலும் பேசமுடியாது ஆனால் பதில் வராது என்று தெரிந்தும் பக்கம் பக்கமாய் கடிதம் எழுதினோம்.

       இன்று பேஸ்புக், டுவிட்டர்,வைபர், வாட்ஸ்அப் என்று பல வலைதளங்கள் இருந்தாலும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை சுருங்கிவிட்டது. எவ்வளவு... மாற்றம்? மாறியது வலைதளம் மட்டுமல்ல நாமும் தான் இல்லையா..? நம்மையே நாம் மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இன்று வலைதளங்கள் விரிந்து கிடக்கிறது வார்த்தைகள் இன்றி. 

                                இப்படிக்கு,

                  யாரும் தீண்டாத காகிதம்

Sunday 10 August 2014

மறுபிறவி

நம்பிக்கையான நட்பு வேண்டும்
உண்மையான உறவுகள் வேண்டும்
கண்ணீர் சிந்தாத கண்கள் வேண்டும்
கவலையில்லாத வாழ்க்கை வேண்டும்
வேசமில்லாத பாசம் வேண்டும்
வஞ்சமில்லாத நெஞ்சம் வேண்டும்

எதிரி

ஒரு எதிரி நண்பனாகலாம் ஆனால்
ஒரு நண்பன் எதிரியானால்
சர்வமும் நாசமாகிவிடும்.