Saturday, 30 August 2014

யார்? நண்பன்

                                உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே
                               இடுக்கண் களைவதாம் நட்பு.

                 நம்மில் சிலர் "டேய் நீ என் உயிர் நண்பேண்டா.. உனக்கொரு அவமானம்ன்னா அது எனக்கும் அவமானம் உன்னோட துக்கம் எனக்கும் துக்கம் உன்னோட சந்தோஷம் என் சந்தோஷம் நீ வைச்சுருக்கிறதெல்லாம் என்னோடது நான் வைச்சுருக்கிறது எல்லாம் உன்னோடது உன்னோட காசு என்னோட காசுறா..." என்று உரிமையோடு பேசும் நண்பர்களை
பார்த்திருக்கலாம்.


             வீட்டில் விஷேச நேரங்களில் "டேய்... உனக்கு பத்திரிக்கை வைக்கலன்னு நினைக்காதே நீ நம்ம வீட்டு பையன்டா.. நீதான் முன்னாடி நின்னு எல்லாம் செய்யனும் உன்னைதான் நம்பியிருக்கேன்னு நண்பன் சொல்லும் போது இவனுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வான். ஆனால் எதுக்குமே உதவாத உறவினர்களுக்கு பாக்கு வெத்தல வைச்சு பத்திரிக்கை கொடுத்து அழைத்து வருவான். இவன் நண்பனோ வீட்டில் ஒருத்தன்னு சொல்லிவிட்டானே
என்று மாங்கு மாங்குவென்று வேலை செய்து கொண்டிருப்பான் வந்த உறவினர்கள் கூட அத செய்ப்பா... இத செய்ப்பா.. என்று வேலை ஏவுவார்கள், தன்னை சரியா கவனிக்கவில்லை என்று குறை சொல்லி எழுந்து போவார்கள் அந்த நேரத்தில் கொஞ்சம் எரிச்சலாய் ஏதாவது அவன் சொல்லிவிட்டால் போதும் அவன் நண்பனுக்கு சுள்ளென்று கோபம் வந்துவிடும் "நீ அப்படி சொல்ல கூடாதுடா.. நீ சொன்னது தப்பு." என்று சொல்வான். அப்போது அவனுக்கு உறவினர்தான் பெரிதாக தெரிவார்கள் இவ்வளவு நேரம் கஷ்டப்பட்ட அந்த நண்பன் பெரிதாக தெரியமாட்டான் அவன் செய்த
உதவிகள் பெரிதாக தெரியாது ஆனால் எதுக்குமே உதவாத அந்த உறவினர் கோபித்து கொண்டு போவதுதான் பெரிதாக தெரியும். இப்போது இவ்வளவு நேரம் கஷ்டப்பட்ட அந்த நண்பனுக்கு எத்தனை மனக்கஷ்டமாக இருக்கும், எத்தனை வேதனையாக இருக்கும்.

                    இது போன்ற நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா? தூர விலகி விடுங்கள் இல்லையா நீங்களும் எதுக்கும் உதவாத உறவினரா கூடவே இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் உண்மையை உணரும்போது உங்களை புரிந்து கொள்வார்கள். உறவுக்காக உதவி செய்யும் நண்பனைமுறைத்துக்கொண்டால் இழப்பு அவனுக்குதான் அதை உணரும் காலம் வரும்.


                      அதே நேரத்தில் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள் "எந்த சூழ்நிலையிலும் நண்பனை விட்டுக்கொடுக்காத நண்பனும் இருக்கிறான். நண்பனுக்காக உறவினரை இழந்த ண்பனும் இருக்கிறான் இவனே உண்மையான நண்பன். இது போன்ற நண்பன் கிடைத்தால்
விட்டு விடாதீர்கள் உங்களை மிக உயரத்திற்கு கூட்டி செல்வான் இது போன்ற
ஒருவனே உங்கள் காவலன் இவன் இருக்க உங்களும் பயமில்லை. இப்படிப்பட்ட நண்பன் உங்களில் யார் இருக்கிறார்கள்? இப்பவே கண்டுபிடியுங்கள் வாழ்க்கையை ஜெயித்து காட்டுங்கள்.

No comments:

Post a Comment