கதையாகட்டும்,
கவிதையாகட்டும், கட்டூரையாகட்டும்பெரும்பாலும் அது கற்பனையாகவோ அல்லது
மற்றவர்கள் வாழ்வில் நடந்தவையாக இருக்கும் கட்டுரை என்றால் ஆங்காங்கே
நடந்தவைகளை பற்றி அல்லது சில உண்மைகளைப் பற்றி ஒரு ஆதாங்கத்தின்
வெளிப்பாட்டால் நாம்எழுதுவதுண்டு. சில நேரங்களில் கற்பனைக்கு உருவம்
காட்டுவதும் சில நேரங்களில் உருவங்களே கற்பனையாகி போவதும் உண்டு ஆனால்
சிலர் எது நிஜம் எது நிழல் என்று தெரியாமல் தவறாக புரிந்து கொண்டு
பிதற்றுகிறார்கள்.
நாம் மற்றவர்கள் வாழ்வில் நடந்தது அல்லது ஏதோ ஒரு கருவை எடுத்துக்கொண்டு நாமே அந்த இடத்தில் இருந்து உணர்வு பூர்வமாக அந்தந்த கதாபாத்திரமாக மாறுவது தான் கதையும் கவிதையும் ஆனால் அதை படிப்பவர்கள் இது அவர் வாழ்வில் நடந்தவையாக இருக்கும் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.
கவிதை எழுதினால் காதலா என்று கேட்கிறார்கள் காதலிப்பவர்கள் மட்டும் தான் கவிதை எழுதுவார்களா? கவிதை எழுத தெரியாத காதலர்களை என்னவென்று சொல்வது அவர்கள் காதல் பொய் என்றல்லவா ஆகிவிடுகிறது. இப்படிதான் சிலர் நம்மையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி விடுகிறார்கள். நாம் வாசகர்களாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இருந்தால் உங்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கலாம் அல்லது நண்பராக இருந்தால் தவறுகளை சுட்டிக் காட்டலாம் சிறந்த விமர்சனம் ஆரோக்கியமானது அதை விடுத்து தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்ககூடாது. கலைத்துறையை பொறுத்தவரை அது எந்த துறையை
சார்ந்தவையாக இருந்தாலும் சரி நாம் எப்படியோ யாரோ ஒருவருக்கு ரசிகையாக ரசிகனாக கண்டிப்பாக இருப்போம் ஆனால் வெறும் ரசிகர்களாகவே இருப்போம் உரிமை எடுத்துக் கொள்வதோ உரிமை கொள்வதோ வேண்டாம் அது ஏமாற்றத்தையே தரும்.
ஆன்மிகத்தைப்பற்றி எழுதினால் உங்கள் வயதென்ன என்றுதான் முதலில் கேட்கிறார்கள் அகவைக்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? எந்ந வயதில் வேண்டுமென்றாலும் ஆன்மிகம் தோன்றலாம் இந்த வயதில் இருந்து இந்த வயது வரை என்று கணக்கெல்லாம் இல்லை. நம்மால் அது முடியாது என்று தோன்றும் போது நாமகா ஒன்றை நிர்ணயித்து கடவுளையே ஏமாற்றுகிறோம். கடவுளையே கல்லாக்கி விட்டு அனுதினமும் பூஜை செய்து கடா வெட்டி பொங்கல் வைத்து சாப்பிட்டும் விட்டு இப்படி கல்லா இருக்குறீயே என்று ஜபிக்கவும் செய்கிறோம். கடவுளே ஒரு நொடி குழம்பி தான் போகிறான் மனிதனின் வாழ்க்கை நெறி புரியாமல்.
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உற்று நோக்குங்கால் கடைசியில் எல்லாமே பூஜ்ஜிமாகவே போகிறது. வெங்காயம் எத்தனை மருத்துவ குணம் உடையது அது சேரும் இடத்தையும் சேர்த்துக் கொண்டவற்றையும் கெட்டவைகளை அகற்றும் தன்மையும் கொண்டது ஆனால் உறிக்க உறிக்க கடைசியில் ஒன்றும் இல்லாமலே போகிறது நமது வாழ்க்கையும் அப்படி தான்
ஸ்ரீசந்திரா

No comments:
Post a Comment