Wednesday 30 April 2014

நட்பு தந்த காயம்

கண்கள் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
இதயம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
சுவாசம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
உயிர்போல் நட்பும்
ஒருநாள் போய்விடும் என்று
இப்போது உணர்கிறேன்..!

Monday 28 April 2014

நட்பு

ஒன்றாக பிறக்கவில்லை
ஒன்றாக வளரவில்லை
ஒரே வயதுமில்லை
சொந்தமும் இல்லை
பந்தமும் இல்லை
பக்கத்து வீடுமில்லை
பக்கத்து ஊருமில்லை
சேர்ந்து படிக்கவில்லை
சேர்ந்து வேலையும் செய்யவில்லை
நெருங்கி பழகவில்லை
மணிகணக்கில் பேசியத்தில்லை
ஆனாலும் ஒரு நிமிடம் கூட 
உன்னை நினைக்க தவறியதே இல்லை 
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது
 என்னை மறப்பதற்கு?

மேகம் மூடிய நிலா..!

என்னை காண பிடிக்காமல்
மேக கூட்டத்தில் ஓடி ஓடி
மறைந்துகொள்கிறது நிலா..!
வருத்தத்தோடு கண்ணீர்
சிந்துகிறது வானம்..!

Sunday 27 April 2014

மரணவலி

உன் மவுனத்தின் வலி
எனக்கு மரணத்தின்
வலியை கொடுக்கிறது
 உன்னை மறக்க  முயல்கிறேன்
முடியவில்லை!

கடிதம்



அன்புள்ள... தோழி!
எப்படி இருக்கிறாய்?
நலம்தானே! ஆனால்
நான் நலமோடு இல்லை
நீ நலமோடு இருப்பாய்
என்று நினைக்கின்றேன்..!
காதலில் கருத்து வேறுபாடு
வருவதுண்டு நட்பில் வருமா?

வந்துவிட்டதே நீ வருத்தப்படுவாய்
என தெரிந்திருந்தால் நான் அந்த
கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்..!
என் மீது என்ன தவறென்று
இதுவரை நான் அறியேன்
கேட்க கூடாத கேள்வியா
கேட்டுவிட்டேன் இல்லையே
உன் கோபம் எனக்கு புரியவில்லை..!
ஒருவேளை என்னோடு பேச
உனக்கு விருப்பம் இல்லையா?
அதனால்தான் சின்ன விஷயத்தை
பெரிசுபடுத்தி விட்டாயா?
என் மனதை இப்படி யாரும்
கஷ்டப்படுத்தியது இல்லை
மனசு வலிக்கிறது..!

வேலை செய்ய முடியவில்லை
படிக்க முடியவில்லை
யாரோடும் பேச பிடிக்கவில்லை
எல்லோரிடம் எரிந்து விழுகிறேன்
தனிமையை விரும்புகிறேன்
தனியா அழுகிறேன்..!
உனக்கு எந்த கஷ்டமும்
இருக்காது ஏனெனில்
நான் உனக்கு பத்தோடு பதினொன்னு
இது தெரியாமல் நெருங்கி தொலைத்துவிட்டேன்
இப்ப நெருப்பில் வேகுகின்றேன்..!

நீ தந்த சந்தோஷத்தோடும்
நீ தந்த வலியோடும் என்றும்
உன் நினைவோடு நான்..!

கோழி மித்து
குஞ்சு சாகுமா? ஆனால்
நான் செத்துக்கொண்டு
இருக்கிறேன்
உன் மவுனத்தால்..!

மவுனம்

நீ பேசாத ஒவ்வொரு
நாளும் எனக்கு
யுகங்களாக கழிகிறது..!

Friday 25 April 2014

கோபம்

நீ கோபத்தில் இருப்பதால்
என் கைபேசி அலறுவதை
நிறுதிக்கொண்டது..!

நீ எப்படியோ?
எனக்கு வரும் அழைப்புகளும்
குறுஞ்செய்திகளும் நீயாக
இருக்குமென்று
எட்டிப் பார்க்கவைக்கிறது..!

மவுனமாய் கொள்ளாதே
மரணித்துவிட போகிறேன்
தள்ளிவைக்க நினைக்காதே
என்னைவிட்டா உன்னை
தாங்கிகொள்ள என்னைப்போல்
உனக்கு யாருமில்லை..!

நீ வேறு நான் வேறு என்று
நீ நினைக்கலாம் என்னால்
அப்படி நினைத்திட முடியவில்லை
என்றேனும் ஒருநாள்
என்னை புரிந்துகொள்வாய்
அப்போது உன் கன்னதில்
வழியும் கண்ணீரை துடைக்க
நான் இருக்கபோவதில்லை..!

தடுமாற்றம்

கண்கள்கூட ஏமாறுகிறது
மனசுகூட தடுமாறி போகிறது
உன்னை பார்க்கும் போதும்
 பேசும் போதும்

Thursday 24 April 2014

வானம்

தூரத்து வானம் கூட
அருகில் இருப்பது போல
தோன்றும் அதுபோலதான்
சிலரின் அன்புகூட
நெருங்க நெருங்க
தூர தூர போய்விடுகிறது..!

நட்பின் சுகம்

நீ மலர்ந்து சிரிக்கும்
அழகை காண தினமும்
எழுந்து வருகிறேன்..!
நீ உதிர்ந்து போகையில்
நான் மறைந்து போகிறேன்..!
யாருக்குத் தெரியும்
நமக்கான நட்பைப் பற்றி

பனித்துளி

பூக்களில் எத்தனை
அழகான பருக்கள்
பனித்துளி..!

கற்பனை சாலை

என் கற்பனைச்
சாலையில் வெகுதூரம்
பயணிக்கிறேன்
உன் நினைவின் துணையோடு..!

கற்பனை சாலை

நீ தந்த நட்பு
நல்ல நறுமணத்தை
தருமென்று சுவாசித்தேன்
பிறகுதான் தெரிந்தது அது
வாசமில்லா காகிதப்பூ என்று
அதற்கு மணமுமில்லை
மனசும் இல்லை..!

ஓலை குடிசை

கொடுக்கின்ற கடவுள்
கூரையை பிய்துக்கொண்டு
கொடுத்தார் ஓலை குடிசைக்குள்
மழை..!

வறுமை

எலும்பாய் மனிதன்
ஜொள் விடுகிறது
நாய்..!

மனம்

அன்பு என்பது குரங்கு மாதிரி
மரத்தைக் கண்டவுடன் தாவிவிடுகிறது
ஏறிய பிறகுதான் உணர்கிறது அது
முருங்கை மரமா? ஆலமரமா? என்று..!

எதிர்பார்ப்பு

வானத்தில் வான்வூர்தி
செல்லும் போதெல்லாம்
நானும் சிறுபிள்ளைபோல்
அன்னாந்து நோக்குகிறேன்
நீ எப்போது வருவாய் என்று?

மீன்தொட்டி

மீன் தொட்டியாய்
என் மனம் அதில்
நீந்துகின்ற மீனாய் நீ..!


தியாகம்

உன் வீட்டில் விளக்கு
எறிய ஒவ்வொரு நாளும்
தனது உயிரை தியாகம்
செய்கிறது தீக்குச்சி..!

குட்டி நிலவு

பணக்காரன் வீட்டு
முற்றத்தில் ஒற்றை நிலவு
ஓலை குடிசைக்குள்
ஆஹா.. எத்தனை
குட்டி நிலவுகள்..!

Wednesday 23 April 2014

மேய்ப்பானை மறந்த மந்தைகள்

உன்னை பத்து மாதம்
சுமந்து பெற்றெடுக்கும்போது
வலி தெரியவில்லை..!

பாலும் தேனும் ஊட்டி
பசியாற்றும்போது எட்டி உதைத்தாயே
அப்போது வலி தெரியவில்லை..!

நேரமில்லை

அன்பே... எனக்கும் உனக்கும்
உள்ள பெரிய வித்தியாசம்
என்னத் தெரியுமா?
உன்னை நினைப்பதற்கு
எனக்கு நேரம் போதவில்லை
என்னை நினைப்பதற்கு
உனக்கு நேரமே இல்லை!

துயரம்

காயம்பட்ட கள்ளிச்செடி
காய்ந்துபோன வேலமரம்
பெய்யாத மரத்தை எண்ணி நீ..!

நித்தம் நித்தம் எம்மனசு
காயம்பட்டு நிக்கிக்கும்போது
மருந்துபோட ஆளில்லை
மரணத்திற்கும் நேரமில்லை!

விண்மீன்கள்

நிலவு சிரித்தா
சிதறிகிடக்கிறது
இத்தனை வெள்ளிகாசுகள்!
விண்மீன்கள்

Tuesday 22 April 2014

வருத்தம்

நாம் எல்லோருக்கும்
பிடித்தவர்களாகிறோம்
மற்றவர்களை விட
முக்கியமானவர்களாகிறோம்
அவரவர்களுக்கு தேவைப்படும்போது

பிச்சை

சுவரில்லாத
சித்திரங்கள்
தெருவோரத்தில்
கையேந்தி கிடக்கிறது..!



அமாவாசை

வானுக்கும் வான் நிலவுக்கும்
அப்படி என்ன சண்டை?
 வரமறுக்கிறது நிலா...! 

Monday 21 April 2014

நதியில் விழுந்த நிலா











அடடே...
அழகாய் நீந்துகிறதே
நதியில் விழுந்த நிலா...!

Saturday 19 April 2014

நினைவுகள்


























நான் மரமாக இருந்திருக்கலாம்
உன் நினைவுகளை உதிர்த்துவிட்டு
போயிருக்கலாம்...

துரத்தும் உன் நினைவுகளை
தூக்கிலிடப் போகிறேன
ஏனெனில்..? மெல்ல மெல்ல
என்னை கொன்றுவிடும் என்பதால்..!

Friday 18 April 2014

மவுனம்




















நிலவும் நட்சத்திரமும்
அருகருகே இருந்தும்
மவுனமாக இருக்கிறது
நீயும் நானும்போல

பாசம்






















நானும் உனக்குத் தாய்தான்
 என் இதயக் கருவறையில்
நினைவு குழந்தையாய் நீ
வலியோடு நான்..!

Thursday 17 April 2014

கண்ணீர்

                                 

என் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உன் நினைவுகளை
உருண்டு ஓடச் செய்கிறது
வழியும் கண்ணீர்
வலியின் வடிகால்...!

ஏக்கம்


























நீ என்னோடு பேசாவிட்டால் என்ன?
நான்தான் உன்னோடு
பேசிக்கொண்டு இருக்குறேனே!

 நீ என்னை நினைக்காவிட்டால் என்ன?
நான்தான் உன்னை
நினைத்துக்கொண்டு இருக்கேனே!

என்றேனும் ஒரு இலையுதிர்காலத்தில்
என் நினைவு வரும் அப்போது
என் பாசம் புரியும் - ஆனால்
அப்போது நான் இருப்பேனோ
 மாட்டேனோ..!

நதியில் விழுந்த நிலா..!

அடடே..! அழகாய் நீந்துகிறதே நதியில் விழுந்த நிலா..!

நான் கவிதையாகிறேன்















நான் கவிதையாகிறேன்...
 நீ கவிபடைக்கும்போது!
கற்சிற்பமாகிறேன்...
நீ சிற்பியாகும்போது!
காகிதமாகிறேன்...
நீ ஓவியம் தீட்டும்போது!
கானமாகிறேன்...
நீ காவியம் பாடும்போது!
தென்றலாகிறேன்...
 நீ உணரும்போது!

தன்னம்பிக்கை






தினமும் இந்த வாழ்க்கையை
நினைத்து அழுது புலம்பி
 என்னடா வாழ்க்கை இது
என விட்டத்தைப் பார்த்து
யோசிக்கும்போது
இந்த உலகம் புதிதாக தெரிகிறது..!

ஒவ்வொரு இரவும்
கனத்த இதயத்தோடு
புரண்டு படுக்கையில்
கண்ணோரம் கரைபுரண்டு ஓடி
 காதை நனைக்கிறது
சூடான கண்ணீர்..!

அப்போது தவறாமல்
நினைவுக்கு வந்து போகிறது
எந்த வெள்ளத்திற்கும்
எதிர்த்து நிற்கும் நாணலும்
 நெருப்பு என்று தெரிந்தும்
ஒரு முறையாவது
தொட்டுவிட வேண்டுமென்று
 நெருங்கத் துடிக்கும்
விட்டில் பூச்சியும்..!

 இப்போது தன்னையும் மீறி
தன்னம்பிக்கையோடு
 கண்ணீரைத் துடைக்கிறது
 கைகள் சாதிக்கவேண்டுமென்ற
எண்ணத்தோடு..!

கைபேசி




























அதிகாலை வேளையில்
போர்வையை இழுத்து பிடித்து
உறங்கும் போது காதை திருகி
செல்ல சினுங்களாய் அழும்
சிறு குழந்தையாய் கைபேசி..!
 
பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில் வீறிட்டு
அழும் சிறு குழந்தையாய்
கைபைக்குள் கதறும் கைபேசி..!

அலுவலக வேலையில்
டென்ஷனாய் இருக்கும் போது
அது புரியாமல் அடம் பிடிக்கும்
 சிறு குழந்தையாய் கைபேசி..!

தனிமையில் இருக்கும் வேளையில்
ஓடிவந்து கட்டி பிடித்து கன்னத்தில்
முத்தமிடும் சிறு குழந்தையாய் கைபேசி..!

 அடிக்கடி தொலைத்துவிட்டு
தேடி தவிக்கும் வேளையில்
எங்கோ மறைந்திருந்து
கண்சிமிட்டி சிரிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

 இரவு உறங்கும் வேளையில்
தூங்காது சினுங்கி நம்மையும்
தூங்கவிடாமல் செய்யும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

அதிகாலை முதல் இரவு வரை
கைகளில் விளையாடிவிட்டு
நம்மோடு நம் தலையணைக்கு
அருகில் அலுத்து உறங்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

சாடல்

























வீடு மொழுகி சாணம்
தெளித்து கோலமிட்டால்
கிருமிநாசினி என்று
சொல்லித் தந்தவர்கள்
வேப்பிலையை படுக்கையாக்கி
 மஞ்சல் நீரில் ஸ்நானம் செய்தால்
அம்மைநோய் குணமாகும் என்று
சொல்லித் தந்தவர்கள்
நீராடிய பிறகு திருநீர்
பூசிக்கொண்டால்
நீர்கோர்க்காது என்பதற்காக
கடவுளை வணங்க
 சொல்லித் தந்தவர்கள்
அயல்நாட்டிலும்
வியாபாரம் செய்ய வணிகம்
சொல்லித் தந்தவர்கள்
விண்ணிலும் ஆராய்சி செய்ய
அறிவியலை சொல்லித் தந்தவர்கள்
வீரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள
வரலாற்றை சொல்லித் தந்தவர்கள்
 ஏன்... களவியலையும் காதலையும்
கூட பாடமாக சொல்லித் தந்தவர்கள்
 தவறு செய்தால் என்ன தண்டனை
கிடைக்குமென்று சொல்லும்
கருடபுராணத்தை சொல்லித் தராமல்
 போனதும் ஏனோ..?

Wednesday 16 April 2014

வன்கொடுமை














மேற்கு வங்கத்தில்
மேடை அமைத்து பலர்
அறிய பெண் கற்பழிப்பு!



இந்திய தேசத்தில்
பெண்கள் தெய்வமாம்
 மதிப்பாம் மரியாதையாம்
வெட்கக்கேடு!

அண்டை நாட்டில்
 மானபங்கம் செய்யப்பட்ட
பெண்ணுக்காக மறியல்
செய்கிறோம் கொடிப்பிடிக்கிறோம்
கோசங்கள் போடுகிறோம்
பொது சொத்துக்களை
தீயிலிட்டு கொளுத்துகிறோம்
சிறை செல்கிறோம் - அதை
 வைத்து பொலப்பை நடத்துகிறோம்!

அதே கொடுமை
நம் நாட்டில் நடக்கும் போது
கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறோம்
ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?

 சுதந்திர இந்தியாவில்
பெண்கள் தனியாக
செல்ல வழியில்லை
கோவில்களில் கூட
பாலியல் தொல்லை -
இவற்றையெல்லாம்
மூடி மறைத்துவிட்டு
மற்ற நாடுகளுக்காக
வரிந்துக் கட்டிக்கொண்டு
செல்கிறோம்!

வாருங்கள்...
முதலில் நம்நாட்டை
 சுத்தம் செய்வோம் - பிறகு
எப்படி சுத்தம் செய்வதென்று
 மற்றநாடுகளுக்கு உபதேசம்
செய்வோம்!

காம வெறியர்களையும்
இன வெறியர்களையும்
தீயிலிட்டு கொளுத்துவோம்
 இனமொழி சாதிமத
வேறுபாடற்ற இந்தியா என்று
உலகிற்கு பறைசாற்றுவோம்
 பிறகு நம் தேசியக்கொடியை
விண்ணுயர பறக்கவிட்டு
தலைநிமிர்ந்து
வணக்கம் சொல்வோம்!

ஒரு பெண்ணின் இதயம்

                      ஒரு பெண்ணின் இதயம் கருணையின் கோயிலாக மாறும்போது அதற்கு இணையான அழகு வேற எதுவுமில்லை "நாம் எல்லோருமே எண்ணங்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களாகத்தான் வாழ்கிறோம். ஏதோ ஒன்றுக்காக நாம மத்தவங்களைச் சார்ந்து இருக்கோம்.

                    சிலர் மட்டும் எப்போதுமே சுமைதாங்கியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் மனசுல அதிகமா இருக்கிற அன்புதான். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பெருநன்மை எய்துவீர்களாக என்கிறார் கிருஷ்ணர் யார் நன்மை செய்கிறார்கள்?" பொய் முகங்கள் கிழித்து எறியப்படும்போதுதான் மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவருகிறது. மனதில் பாசம், பிரியம் எதுவும் இல்லை என்று புரிகிறது. "வானுக்கு அழகு விண்மீன்கள் நீருக்கு அழகு நிலவு பெண்ணுக்கு அழகு கருணை"

விழி

உன் கடைக்கண்ணின
 ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது
 திராட்சை கருவிழிகள்..!

காலம்

என் காலக் கடிக்காரம் நீ
என் ஒவ்வொரு நொடியும்
உன்னை நினைத்தே நகர்கிறது..!

குறுஞ்செய்தி


அடிக்கடி வந்து
புன்னகைத்து விட்டு போகிறாய்
புகைப்படத்தோடு
என் குறுஞ்செய்தியில்..!

மழை

வானிற்கு பூமீ மீது
 அப்படி என்ன கோபம்?
 கொட்டித் தீர்த்துவிட்டதே
 மழை..!

இதயம்


இதயம் கூட
இடம் மாறித்தான் போகிறது
நீ வருகையில்...!

நிலா

உன் அன்பில் கரைந்து
தொலைந்த நிலா
மீண்டும் எழுந்து வருகிறது
வளர்பிறையாய்..!

காலச் சுவடுகள்

                   ஆதி மனிதன் கற்களை கருவியாக்கி விலங்குகளிடம் தன்னை எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் உணவு பழக்க வழக்கங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்றும் பின் வரும் மனிதற்கு விட்டுச் சென்றான். தெய்வ புலவர்கள் அற நெறிகளையும், வாழ்க்கை நெறிகளையும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் ஓலைச் சுவடிகள் மூலம் நமக்கு விட்டுச் சென்றனர். அரசர்கள் போர் முறைகளையும், அரசால்கின்ற முறைகளையும், வீத்தையும், சேர்த்த செல்வங்களையும் நிலவறை கரூவூலங்களில் பாதுகாத்தும் அதை அறிய ரகசிய கல்வெட்டுகள் மூலம் நமக்கு விட்டுச் சென்றனர்.

                 ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு வந்து சாலைகளையும, போக்குவரத்து முறைகளையும் மின்சாரத்தையும், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தையும் நமக்காக விட்டுச் சென்றனர். ஆனால் நாம் நம் சங்கதினருக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறோம்? சிடிகளையும், பென்டிரைவுகளையுமா? அந்த காலத்தில் அழியாத கல்வெட்டுக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தைச் சொன்னது. நம் காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்று சொல்ல நாம் விட்டு செல்லப்போவது என்ன? நாம் வாழ்வது கலியுகம் அது மண்ணோடு மண்ணாகி, விண்ணாகி காற்றிலே கலந்திடுமோ..?

அடி

நடைவண்டி பழகும்
சிறு குழந்தையாய்
விழுந்து விழுந்து
மீண்டும் மீண்டும்
எழுந்து வருகிறேன்
காயப்படுத்துவது
நீ என்று தெரிந்தும்

காதல்

இதயத்தில் கல்லெறிந்து விட்டு
இருப்பிடம் சென்றுவிட்டாய் நீ
நெருப்பிடம் அகப்பட்ட
புழுவாய் துடிக்கிறேன் நான்
ரம்மியாய் இருக்கிறது உனக்கு
ரணமாய் இருக்கிறது எனக்கு
அன்றொருநாள் நீ சொன்ன வார்த்தை
அடிக்கடி என் காதில் ஒலிக்கிறது
வஞ்சகமாய் வலை விரித்து விட்டாய் நீ
வகையாய் மாட்டிக்கொண்டேன் நான்
இப்போது தனிமைகூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவால்

முப்பொழுதும் உன் கற்பனையில்

நீ... கானல் நீர் என்று தெரிந்தும்
அள்ளி பருக நினைக்கிறேன்! 
நீ... தூரத்து நிலவு என்று தெரிந்தும்
தொட்டுவிட நினைக்கிறேன்! 
நீ... கையில் சிக்காத
காற்று என்று தெரிந்தும்
எட்டி பிடிக்க நினைக்கிறேன்! 
நீ... என் மீது வைத்திருக்கும்
அன்பு தாமரை இலை மீது
இருக்கும் தண்ணீர் போல என்று
தெரிந்தும் உனக்காக
உயிரையும் கொடுக்க நினைக்கிறேன்! 
இவை யாவும் கானல்
சுகம் தான் என்று
என் அறிவுக்கு தெரிந்தும்
என் மனதிற்கு தெரியவில்லை
ஏனெனில் நான் வாழ்வது
முப்பொழுதும் உன் கற்பனையில்!   

கானல் சுகங்கள்

தாமரை
தன் மீது கொண்ட காதலால்தான்
சூரியன் உதிக்கிறது என்று
தாமரை நினைத்துக் கொண்டால்
சூரியன் தான் என்ன செய்யும்..? 

கடற்கரை
தன் மீது கொண்ட காதலால்தான்
கடல்அலை ஒயாது மோதுகிறது என்று
கடற்கரை நினைத்துக் கொண்டால்
கடல் அலைதான் என்ன செய்யும்..? 

பூமி
தன் மீது கொண்ட காதலால் தான்
வானம் பொழிகிறது என்று
பூமி நினைத்துக் கொண்டால்
வானம் தான் செய்யும்..?

மலர்
தன் மீது கொண்ட காதலால் தான்
வண்டு தன்னயே
சுற்றி சுற்றி வருகிறது என்று
மலர் நினைத்துக்கொண்டால்
வண்டு தான் என்ன செய்யும்..?

விளக்கு
தன் மீது கொண்ட காதலால் தான்
விட்டில் பூச்சி
தன்னையே மாய்த்து கொள்கிறது என்று
விளக்கு நினைத்து கொண்டால்
விட்டில் பூச்சி தான் என்ன செய்யும்..? 

நான்
நீ என் மீது அன்பு வைத்திருக்கிறாய் என்று
நானே நினைத்துக் கொண்டால்
பாவம் நீதான் என்ன செய்வாய்..?      

ஏமாற்றம்

கண்ணே மணியே என்றாய்
 கற்பூர முல்லை என்றாய்
 கானகத்து குயில் என்றாய்
தங்க முத்து பவளம் என்றாய்
சுவாசம் என்றாய் உயிர் என்றாய்
தேனே மானே என்றாய்
தேவாரப் பண் என்றாய்
கடைசியில் எல்லாமே
நீதான் என்றாய் - ஆனால்
இப்போது நானோ உனக்கு
தூரத்து நிலவாகி போனேன்
ஏனெனில்..? உன் நினைவுகளில்
சிலநாய் தேய்கிறேன்...
சிலநாள் வாளர்கிறேன்...
ஏன்..? ஒருநாள் காணாமல் கூட
போகிறேன் இப்போது நான்
உனக்கு தூரத்து நிலவுதானே..?


                             - ஸ்ரீசந்திரா

பிரிவு

எனக்குத் தெரியாமலே...
என் கண்ணுக்குள் மணியானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் இதயத்தின் துடிப்பானாய்!
எனக்குத் தெரியாமலே... 
என் உயிருக்குள் உயிரானாய் - ஆனால் 
என்னைவிட்டு பிரியும்போது மட்டும்
ஏன் தெரிந்தே சென்றாய்..?
நீ என்னைவிட்டு எங்கே சென்றாலும்
உன் கூடவே வருவேன்
உன் நிழலாக...
உன் சுவாசமாக..
 உன் உயிராக..!


                                 - ஸ்ரீசந்திரா