Tuesday 30 May 2017

கிளி ஜோசியம்

     

          ஒரு நாள் நானும் இன்னொரு பொண்ணும் பீச்சுக்கு போகலாம்னு போனோம்.... நாங்க போகும் போது ஒரு நாலு மணி இருக்கும் ஆனால் சுள்ளென்று வெயில் இருந்தது. நிற்க கூட முடியவில்லை ஆனால் அங்கே இரண்டு ஜோடிகள் மற்றவர்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நாய்கள் போல் பீச்சை அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்... எனக்கு சுள்ளென்ற கோவம் அந்த நாய்களை விரட்டிவிட்டு வர்றேன் என்று கிளம்பினேன். என் கூட வந்த பொண்ணு "வேணாக்கா... அந்த அசிங்கத்தை நீங்க ஏன் பார்க்குறீங்க விட்டுறுங்கக்கா... எல்லாரும் பார்த்துட்டுதான் போறாங்க நீங்க வாங்க நாம அந்த பக்கம் போவோம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனது..

Monday 29 May 2017

மாட்டு இறைச்சியும் மனித நேயமும்

               எப்பா பெருமைக்குரிய போராளிகளே... மோடியை எதிர்க்க மாட்டுக்கறி சாப்பிட்டுதான் எதிர்கனும்னு இல்ல... வேற நல்ல வழியிலும் எதிர்க்கலாம்...

சின்ன சின்ன ஆசையும் பசுமை புரட்சியும்

சிறுவயது முதல் எனக்கொரு ஆசை உண்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வகுப்பு 1ல் இருந்து 5 வரை படிக்கின்ற காலத்தில் வீட்டிற்கு எதிரே இருக்கிற தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை விதையிட்டு நாளொரு வண்ணமாய் அதை ரசித்து ரசித்து ஆடு, கோழி தீண்டா வண்ணம் பாதுகாத்து பள்ளி முடிந்து வந்ததும் அது எப்படி இருக்கிறது என்று ஓடிச்சென்று பார்த்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்வது வழக்கம்....

Thursday 25 May 2017

முதுமையும் வறுமையும்

            நண்பியின் ஊரில் திருவிழா நான் வந்தே ஆகவேண்டும் என்று கட்டாய அழைப்பு வேறு வழியின்றி சென்றிருந்தேன்... அதாவது இந்த அன்பு என்ற பெயரில் கொல்வார்கள் தெரியுமா அந்த மாதிரி. என் நண்பியின் வீட்டிற்குள் சென்றேன் அவர் வாயெல்லாம் பல்லாக வந்து என்னை "குட்டிமா...." என கைகளைப் பிடித்து வரவேற்றார். என்னை குட்டிமா என்றுதான் அன்போடு அழைப்பார்.  அங்கே இருந்த கட்டிலில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அவரின் பிள்ளைகள் சித்தி... எப்படி இருக்கின்றீர்கள் என்று ஓடி வந்து விசாரித்தார்கள்.. அப்போது எனது அருகில் ஒரு அம்மா வாட்ட சாட்டமாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு தெனாவெட்டு,  திமிர் என்பார்களே அந்த மாதிரி.  எனது நண்பி அவரை கைட்டி "இவங்க தான் பாக்யத்தம்மாள் ... நீ இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு இருப்பே இவங்க நம்ம ஊர்தான் இப்ப திருச்சியில் வேலை செய்யுறாங்க இரண்டு பையன் ஒரு மகள் "என்று அறிமுகம் செய்தார். அந்தம்மா என்னைப் பார்த்து சாதாரணமா ஒரு புன்னைகை செய்தார் ஏனோ அவரின் புன்னகையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அப்படியே என்னைப் பற்றி யும் சொன்னார் என் நண்பி "நீங்களும் ரேடியோவில் இவபேரை கேட்டு இருப்பிங்க இவளும் கவர்மென்ட் ஆபிஸ்லதான் வொர்க் பண்றா.. ஆனால் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேங்கிறா.. நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கம்மா " என்று சிரித்தப்படி என்னைப்பார்த்தார்.

Friday 19 May 2017

உனதன்பில் நான் தொலைந்தேன்

நட்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் யாரும் மன நிம்மதியோடு இருக்க முடியாது.  வீட்டில் பிரச்சினை,  அலுவலகத்தில் பிரச்சினை,  செல்லும் இடங்களில் பிரச்சினை என்றால் நாம் ஆறுதல் தேடி செல்கின்ற ஒரு இடம் நட்பு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையோடு வசிப்பவரும் சரி. கணவன்,  குழந்தைகள் என்று வசிப்பவர்களும் சரி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் நாடி செல்வது நட்பிடம் மட்டுமே...