சிறுவயது முதல் எனக்கொரு ஆசை உண்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வகுப்பு 1ல் இருந்து 5 வரை படிக்கின்ற காலத்தில் வீட்டிற்கு எதிரே இருக்கிற தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை விதையிட்டு நாளொரு வண்ணமாய் அதை ரசித்து ரசித்து ஆடு, கோழி தீண்டா வண்ணம் பாதுகாத்து பள்ளி முடிந்து வந்ததும் அது எப்படி இருக்கிறது என்று ஓடிச்சென்று பார்த்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்வது வழக்கம்....
அம்மா... சமைக்கும் போது சொல்வார்கள் செடியில் நாலு பச்சைமிளகாய் பறிச்சிட்டுவா குழம்பில் போடுவோம் என்று நான் ஆவலாக ஓடுவோன்.. சில நேரங்களில் அந்த பச்சைமிளகாய் செடி எனக்கு மரம் போல் தெரியும்... அதே போன்று தக்காளியும் செடியில் பச்சையும் சிவப்புமாக இருப்பது ஒரு தனி அழகு உண்டு... அதாவது தேவைப்படும் நேரத்தில் நமக்கு வேண்டியவற்றை நம் வீட்டிலே கிடைக்க செய்வது மனதிற்கு ஒரு சந்தோஷமான விஷயம் இல்லையா...
வளர்ந்த பிறகும்... நான் நினைத்ததுண்டு அதாவது மீன் கடையில் சென்று வாங்குகிறோம் சில நேரம் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்காது சில நேரம் விலை அதிகமாக இருக்கும் அந்த மாதிரி நேரங்களில் நம்மிடையே மீன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... திடீரென்று விருந்தினர் வந்தா கூட கவலை இல்லை, நாம ஏன் சின்னதா ஒரு குளம் மாதிரி வெட்டி அதில் மீன்களை வளர்க்க கூடாது என்று பல முறை நினைத்திருக்கிறேன்.. இதுவரை அதை செயல்படுத்த முடியவில்லை....
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிகம் ஆர்வம் உண்டு இப்போது பிராய்லர் கோழியின் ஆதிக்கம் அதிமாக இடம்பிடித்துள்ளது. ஆனால் அது நம் உடம்பிற்கு ஏற்றதல்ல என எவ்வளவோ சொன்னாலும் மக்கள் அதை கேட்பதாக இல்லை... நான் வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறேன். ஆனால் விலை அவ்வளவாக போகவில்லை என்றாலும் இதை பெரிதாக செய்ய வேண்டும் எல்லோருக்கு நாட்டுக்கோழிகளை குறைந்த விலையில் விற்கலாம் என ஆசையும் உண்டு... பிராய்லர் கோழிகளை தவிர்த்து உடலுக்கு சத்தான நாட்டுக்கோழிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய உண்டு ஆனால் அந்த ஆசையும் இதுவரை நிறை வேறவில்லை...
ஆடு....இப்போது சந்தையில் நல்ல விலை போகின்ற ஒரு வியாபாரம்... இதையும் ஒரு பெரிய இடம் வாங்கி அதில் புற்களை வளர்த்து அதில் ஆடுகளை வளர்க்கலாம் என்ற ஆசையும் உண்டு அந்த அசையும் நிறை வேற வில்லை...
அடுத்து, விவசாயம் நெல், வாழை, காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களையும் பயிரிட வேண்டும்... நமக்கு தேவையானது போக மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாம் என்ற என் பல வருடங்களாக உண்டு அந்த ஆசையும் இதுவரை நிறை வேறவில்லை. இதை ஏன் சொல்றேன்னா சின்ன வயது முதல் இப்பவரைக்கும் இந்த மாதிரி சின்ன ஆசைகள் நிறைய உண்டு ஆனால் அதை என்னால் செயல்படுத்த முடியவில்லை...
இதை எல்லாம் செய்ய வேண்டுமெனில் அதற்கு தகுந்த போதுமான இடவசதி வேண்டும் அது நம்மிடம் இல்லை... இடமும் வசதியும் இருக்கின்ற இளைஞர்கள் ஏன் நீங்கள் ஒரே இடத்தில் குட்டி குட்டியா ஒரு வியாபாரம் செய்யக்கூடாது... யாரோ தருகின்ற விஷத்தன்மையான பொருட்களை காசுக்கொடுத்து வாங்கி நாள் முழுவதும் வியாதியோடு வாழ்வதைவிட நமக்கு நன்கு தெரிந்த விவசாயத்தை பயன்படுத்தி நம்ம வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் நீங்கள் கொடுக்க கூடாது..
ஆரோக்கியமான வாழ்வு நம் கைகளில் இருக்கிறது பிறகு ஏன் நாம் கடை கடையாக ஏறி இறங்க வேண்டும் சிந்தியுங்கள். கண்டிப்பா என் மனதில் உள்ள ஆசைகளை ஒருநாள் நிச்சியம் நிறைவேற்றுவேன்... என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... உங்களுக்கும் இந்த மாதிரி ஆசை இருந்தால் வாய்ப்பு இருந்தால் அதை இப்போதே நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் விற்பனை கூட செய்ய வேண்டாம் அவரவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை அவரவர் தோட்டத்தில் செய்யலாம் என்பது என் எண்ணம்...
இதே போன்று சின்ன ஆசைகள் இன்னும் நிறைய உண்டு அதை செய்வதற்குதான் வழித்தெரியவில்லை... உங்களுக்கும் இது போன்ற ஆசைகள் இருந்தால் இன்றே அதை செயல்படுத்த தொடங்குங்கள்...
நன்றி....

எல்லாருக்குள்ளும் இந்த ஆசை உண்டு.
ReplyDeleteஆசை இருக்கு ஆனால் செய்ய முடியவில்லையே ஜி...😄
Delete