Thursday 22 September 2022

ஏக்கம் குட்டிக்கதை

அம்மா... அம்மா... ஒரு நாளைக்கு தியேட்டருக்கு போயிட்டு சினிமா பார்த்திட்டு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவோமா..." பொன்னி ஆசையாக தன் அம்மாவிடம் கேட்டாள்.

" ஆமா... நீ வேணா போய் சாப்பிடு எனக்கு வேணாம்" அம்மா மல்லிகா முகத்தை சுழித்தபடி சொன்னாள்.

"உனக்கு ஞாபகம் இருக்காம்மா இருபது வருசத்துக்கு முன்னாடி முருகைய்யா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வருவோம் அதுக்கு எதிரே ஒரு சின்ன ஹோட்டல் ஒன்னு இருக்கும் அதுல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க சோறு, மீனு, கறி, முட்டையின்னு வெளுத்துக்கட்டுவாங்க. நான் ஆசையா பார்த்துகிட்டு உன்கிட்ட கேட்பேன் நீ.. அதுக்கெல்லாம் காசு இல்ல ஒரு சாப்பாடு பதினைஞ்சு ரூபான்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருவே... ஒரு நாள் கூட வாங்கி தந்தது இல்ல. தியேட்டருக்கு போனா பாப்கார்ன் கேட்டு அழுவேன் வயிறு வெந்து போயிரும்னு அதையும் வாங்கி தரவே மாட்டே.. இப்ப என்னகிட்ட அதை வாங்குற அளவுக்கு காசு இருக்கு ஆனால் இப்பவும் நீயும் வர மாட்டேங்கிற என்னையும் வாங்கி சாப்பிட விட மாட்டேங்கிறே.. ஏம்மா என்றாள் தழுதழுத்த குரலில்..

மல்லிகாம்மாவால் ஒன்றுமே பதில் சொல்ல முடியல இதுதான் அவர்கள் இயல்பு..

Monday 19 September 2022

வாலை மீன் குழம்பு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்: 


வாலை மீன் 1 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய்- 7
புளி- ஏலுமிச்சை அளவு
குழம்பு மசாலா - தேவைக்கு ஏற்ப
வெந்தையம்  - 1 ஸ்பூன்
சீரகம்- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் சிறிது.
கடலெண்ணெய்- தேவைக்கேற்ப


செய்முறை: 



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Saturday 10 September 2022

மீனும் நண்டும் 20. நிமிஷத்துல சமைக்க முடியுமா?

மீனும் நண்டும் ஒரே நேரத்தில் எப்படி சமைக்கிறதுன்னு பார்க்கலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்க


https://youtu.be/JQaL8kNGomc

Wednesday 7 September 2022

இம்மையில் நன்மை தருவார் ஆலயம் போகலாம் வாங்க


                 கடந்த சில வருடங்களா எங்கேயும் போக முடியல கொரோனா காலம் என்பதை விட வேலை பளு,  நேரமில்லை இப்படி பல காரணங்கள் சொல்லலாம். சட்டென்று ஒரு யோசனை மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயம் செல்லாம் என்று தோன்றியது. சரி ஞாயிற்றுக்கிழமை போகலாம் என முடிவு செய்தாச்சு. சனிக்கிழமை இரவு மொபைலில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். முழிச்சுப் பார்த்தால் காலை 6 மணி