Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, 6 March 2015

கவிதை நயமும் கிராமத்து இசையும்

            "உள்ளத்து உள்ளது கவிதை இன் உருவெடுப்பது கவிதை"

           இது கவிமணியின் வாக்கு ஏட்டிலக்கியம் நாட்டுப்புற இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் ஒப்பிப்பொருந்தும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய நான்கினையும் கூறுவர். இந்நான்கும் ஓரளவு ஒப்ப அமையும் போது சிறிய கவிதை என்பது அவர்தம் கருத்து.

         இதனையே நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் இப்படி கூறுகிறார்.

 "பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் ஆணிபெறச் செய்வன செய்யுள்"

Friday, 13 February 2015

கும்மிபாட்டு

             நாட்டுப்புற இலக்கியங்களில் கும்மிபாட்டும், ஒப்பாரியும் முக்கியமான ஒன்று பல வருடங்களுக்கு முன்பு யாராவது இறந்தாலோ அல்லது பெண்கள் பூப்பெய்தினாலொ இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அது காணாமல் போய் வெகு காலமாயிற்று. எனக்கு 7- 8 வயது இருக்கும் போது எப்படி ஒரே மாதிரி கும்மியடிக்கிறார்கள் என்று வேடிக்கைப் பார்த்ததுண்டு. இப்போது அதே கும்மியடி பாடலைக் கேட்டுக்கொண்டே இதை பதிவு செய்கிறேன்.

Wednesday, 5 November 2014

இலக்கிய காதலில் தோழியின் பங்கு

         வரலாற்று சுவடுகளில் இன்றும் அழியாமல் தடம் பதித்து நிற்பது காதல். காதலைப் பற்றி இலக்கியங்களும், இதிகாசங்களும், காவியங்களும் பலவாறு எடுத்து இயம்புகின்றன. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் புனிதமானது என்கின்றனர் பலர், காதல் இல்லையேல் சாதல் என்கின்றனர் சிலர். அப்படிப்பட்ட வலிமை பொருந்திய காதலுக்கு தூதாக நிற்பது நட்பு.

           ஒரு தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு தூதாக செல்வது தோழிகள். அதுமட்டுமல்ல இவர்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மனமறிந்து நாசுக்காக தவறை உணரச் செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய இலக்கியத்துக்குள் சென்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமா? வாருங்கள் இங்கே ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு யாரும் அறியாதவாறு களவொழுக்கத்தில் ஈடுபடுக்கின்றனர். இவ்வாறு களவிலே கூடும் வழக்கத்தை விடுத்து தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். அதனால் தலைவனை சந்தித்து அவன் மனம் புண்படாதவாறு இவ்வாறு கூறுகின்றாள்.

Tuesday, 4 November 2014

மனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களும்

         
        காலை வேளை வேலைகள் முடிந்து அமர்ந்திருந்தேன் திடீரென்று கார் இருள் சூழ்ந்தது. இது என்ன கார் காலமோ மண் மணக்கிறதே என்று என் மனம் வாசலுக்கு விரைந்தது. உடனே உள்ளிருந்து ஒரு குரல் அழைத்தது.

                  மனசே...என் மனசே..
            நீ எங்கே போகப் பார்க்கிற
            மனசே.. என் மனசே...
            நீ யாரை தேடி போகிற
            இத்தனை நாள் என் கூடயிருந்த
            இப்ப என்ன விட்டு நீ போவதெங்க
            உனக்கு யாரோட சகவாசம்...
           வேணாம் செய்யாத எனை மோசம்...

Saturday, 25 October 2014

களவுமணம் கூடா

        பண்டை தமிழருடைய ஒழுக்கம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், சிறப்பு முதலிய செய்திகளை இலங்கியங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

         களவாவது பிறப்பு, கல்வி, வயது, உருவம், திரு முதலியவற்றால் ஒத்த தன்மையுடைய ஓர் ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் ஊழ்வலியினால் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து இன்புற்று ஒழுகுவது.

         கற்பாவது, அங்ஙனம் காதலித்து அவர்கள் பிள்ளைகள் ஊர் அறிய மணந்து கொண்டு இல்லறம் நடத்தி இன்புற்று வாழ்வது இவ்விரு ஒழுக்கங்களையும் புலப்படுத்தும் பாக்களை குறுந்தொகை பாடல்கள் நமக்கு அழகாக சொல்கின்றது. இலக்கியங்களிலே எல்லோருக்கும் பிடித்த இலக்கியம் குறுந்தொகை பல கவிஞர்களை உருவாக்கிய இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

     அந்த பாக்கள் இதோ...

             தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டு பிறர் அறியாதவாறு களவு மணம் மேற்கொண்டனர் தலைவன் அக்களவொழுக்கத்திலேயே நாட்டமுள்ளவனாய் இருந்தான் அதனால் தலைவி ஊரறியத் தலைவன் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டு தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.


            "யாரு மில்லைத் தானே கள்வன்
             தானது பொய்ப்பின் யானெவன்
            செய்கோ தினைத்தா ளன்ன சிறு
             பசுங் காவை ஒழுகுநீ ரால் பார்க்குங்
             குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே"

                                       - குறுந்தொகை

           அதாவது, தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த போது வேறு எவரும் இல்லை என் நலத்தைக் கவர்ந்த கள்வராகிய தலைவர் மட்டுமே இருந்தார் "உன்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்" விரைவில் உன்னை மணப்பேன் என்று தலைவர் தாம் கூறிய சூளுரையைப் பொய்யாகும்படி நடப்பாராயின் நான் என் செய்வேன்? ஐயோ... சாட்சிகள் ஒன்றுமில்லையே...! எங்கள் களவு மணம் நிகழ்ந்த இடத்தில் குருகு ஒன்று இருந்தது (குருகு என்பது நாரை) அது சான்று கூறும் தகுதி உடையது அன்றே..! மேலும் அது தன் இரையாகிய ஆரல்மீன் வருகிறதா..! என்று கூர்ந்து நோக்கி கொண்டிருந்ததால் தலைவன் சூளுரையைக் கேட்டுமிராது ஆகவே இனி நான் என்ன செய்வேன் என தலைவி புலம்புவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.

          இச்செய்யுள்ளில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால் களவுமணம் என்பது நம் பண்பாட்டுக்கு புறம்பான ஒரு செயல் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

         பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சான்று தவறு  செய்துவிட்டபின் எங்கே தலைவன் தன்னை மறந்து செல்வானோ என்று பயந்து நாளை வெளி உலகத்திற்கு தெரிந்தால் தூற்றுவார்களே தலைவன் இல்லை என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது அந்த இடத்தில் சாட்சிகள் கூட இல்லையே என்று எப்படி அழுது புலம்புகிறாள்.

        இன்றைய காலக்கட்டத்தில் காதலின் மிகுதியால் காதல் மிகுதி என்று கூட சொல்வது தவறு உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தவறு செய்கின்றனர் அவ்வாறு தவறு ஏதும் செய்யாதிருக்கும் பொருட்டுத்தான் புலவர் முன்னரே இச்செய்யுள்ளை இயற்றினாரோ என்னவோ..?

        பெண்களே "உயிரை விட மானம் பெரியது" சேலையில் முள் பட்டாலும் முள் மீது சேலைப்பட்டாலும் பாதிப்பு சேலைக்குதான். உண்மையான காதல் ஒருபோதும் தவறு செய்யாது அப்படி தவறு செய்ய தூண்டினால் அது உண்மையான காதலாக இருக்க முடியாது உங்கள் காதல் எப்படிப்பட்டது என்று இப்போது தெரிந்திருக்கும்.




V

Monday, 1 September 2014

கற்றலின் பெருமை


                  மனிதன் தன் உயர் வாழ்க்கைக்கு கல்வி கற்கிறான், பொருள் ஈட்டுகிறான், நல்ல வாழ்க்கத்துணையைப் பெறுகிறான் அறிவறிந்த மக்கட் பேற்றினை அடைகிறான். இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வி அதனால்தான் "இளமையிற் கல்" என்கிறது
பழமொழி இளமை காலத்தே படிப்பது மனதில் நிற்கும் என்பது கருத்துஇளமையில்தான் கற்க வேண்டும் பிறகு கற்க கூடாது என்பது கருத்தன்று, ஏனெனில் கற்பதற்கு வயது வரம்பில்லை படித்த அறிஞர்கள் படித்துக் கொண்டே இருக்கின்றனர்.

                                        யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
                                        சாந்துலகையும் கல்லாதாவாறு

                என்று கூறுகின்றார் வள்ளுவ பெருந்தகை ஒருவன் சாகும் வரை கற்கலாம் என்பது தான் இதன் கருத்து.

                                       உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
                                       பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று கூறுகிறது புறனாறு.

                                       கற்க கடறக் கற்பவை கற்றபின்
                                       நிற்க அதற்குத் தக

என்கிறது திருக்குறள்

                                       கற்கை நன்றே கற்கை நன்றே
                                       பிச்சை புகினும் கற்க நன்றே

என்கிறது வெற்றி வேட்கை

                      வள்ளுவர் முதலில் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கற்க என்கிறார் எவற்றை கற்பது? கற்பவையை கற்க பின்ன யாது செய்வது? கற்றல் வழி நிற்க வேண்டும் நடத்தையில் பண்பாட்டில் குறைவின்றி நிற்க என்கிறார்.

                     கல்வியின் பெருமையை அதன் முக்கியத்துவத்தை சான்றோர்கள் நூல்கள் வாயிலாக நமக்கு நிறைய சொல்லியிருக்கிறார்கள். முன்பு இளமையில் 'கல்' என்றது பழமொழி இன்று இளமையில் காத)ல் என்கிறது முதுமொழி ஏனென்றால் இப்போது எல்லாம் இளமையில் படிக்கின்றார்களோ இல்லையோ காதலை நன்கு படிக்கிறார்கள்.

                    நாம் கற்றவை மிகமிகக் குறைவு உலகில் முற்ற கற்றவர்கள் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன அதனால்தான் ஔவையார்

                                     "கற்றது கையளவு கல்லாதது உலகளவு"

                   என்று கூறினார் இதன் பொருள் என்ன? நாம் முழுவதும் கற்றுவிட்டோம் என்று இறுமாப்புக் கொள்ளாமல் கற்க வேண்டும் என்பதுதான். கற்கும்போதே கேட்கின்றோம், கேட்கும் போதே கற்கின்றோம் கற்றலும, கேட்டலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆகவே கற்பவையை கற்போம் கற்றல் வழி நிற்போம்.

Sunday, 31 August 2014

இலக்கியமும் அறவுணர்வும்

                 இலக்கை இயம்புவது இலக்கியம் குறிக்கோளைச் சுவைப்பட கூறுவது இலக்கியம் என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் இந்நான்கும் கொண்டது இலக்கியம் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்கிறது நன்னூல்.

                 பிறன்மனை நோக்காத பேராண்மையை இராமயணம் வலியுறுத்துகிறது இந்த இப்பிறவிக்கு இருமாந்தரைச் சிந்தையாலும் தொடேன் என்கின்றான் இராமன். பிறன்மனை நோக்கினான்
இராவணன் பெண்ணாசையால் பேரழிவை சந்திந்தான் மண்ணாசையால் மாபெரும் அழிவை சந்தித்தான் துரியோதணன் இதனை தெளிவாக விளக்குகிறது நூல்கள்.

பழந்தமிர் நாகரித்தையும் பண்பாட்டையும் பறை சாற்றுவதாக இலக்கியங்கள்
கூறுகிறது.

                                    "முந்தை இருந்து நட்போர் கொடுப்பின்
                                    நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"

என்கிறது நற்றினை

                                     "நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
                                     அல்லது செய்தல் ஓம்புமின்"

என்கிறது புறனாறு.

Friday, 9 May 2014

நமது சிந்தனைக்கு இலக்கிய நூல்கள்

                        சில பெரிய மனிதர்கள் உதவி செய்ய முன்வரும்போது ஏதேனும் ஒரு சுயநலதைக் கருதியே உதவி செய்ய வருகின்றனர் அத்தகைய இழி செயலைக் காண்பித்து மேகத்தைப் போல் கைமாறு கருதாது கொடைவளம் புரிய வேண்டுமென விழைகிறார் ஆசிரியர். மேகத்திலிருந்து மழை பொழிகிறது மழை பொழிவதால் நாட்டில் வளம் பெருகின்றன அப்படி பல வளம் பெருக்க வழி செய்யும் மேகத்திற்கு நாம் ஏதேனும் செய்கிறோமா என்றால் அதுதானில்லை. அதுபோலதான் உதவி செய்ய வருபவரின் உள்ளமும் அமைந்திருக்க வேண்டுமென சொல்கிறது திரிகடுகம் என்னும் நூல்.

                                       பிறர் தன்னைப் பேணுங்கால் நானலும் பேணார்
                                       நிறன்வேறு கூறிப் பொறையும் - அறனைவியைக்
                                      காராண்மை போல வொழுகலும் இம் மூன்றும்
                                      ஊராண்மை யென்னுஞ் செருக்கு

- திரிகடுகம்

                     அக்காலத்தவர் பொருளை எண்ணியே செல்வமென்று சொல்லவில்லை அறத்திற்கேற்ப ஆன்ற செல்வத்தையே செல்வமாக போற்றுகின்றனர்."ஆக நாமும் அன்றாடம் இல்லை என்றாலும் அவ்வப்போது அந்த மேகமாவோமே."


ஸ்ரீசந்திரா

நட்பு எப்படி இருக்க வேண்டும்

                        கூடா நட்பு கேடாய் முடியும் எப்படி தெரியுமா? நாம் வீதியில் செல்கிறோம்!செல்கின்றபோது பலரைப் பார்க்கின்றோம் பழகுறோம் சிலரை நண்பராகவே கொள்கிறோம் அவ்விதம் நட்பு கொள்ளும்போது ஆராய்ந்து பார்த்து நண்பரை கொள்வதில்லை உடனே நம்பி பழகத் தொடங்கிவிடுகிறோம். இத்தகைய செயலால் தீமையே தோன்றுகின்றன என்கிறார் வள்ளுவர்

                                       ஆராய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை
                                       தான்சாம் துயரம் தரும்

                       எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொள்வோமானால் அதனுடைய இறுதி கட்டமானது சாவாகத்தான் இருக்குமெனக் கூறுகிறார்.
உண்மைதான் ! தேர்ந்தெடுக்காமல் நட்பு கொண்டு நலிந்து இருப்பவர்கள் இன்னும் தான் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையவர்களைக் கண்டாலும் நாம் திருந்த முன்வர வேண்டும்.

                       நன்றாகப் பேசுபவர்கள் அவர்கள் தம் பேச்சு சுவையாகவும் இருக்கும் ஆனால்முடிவென்னவென்று கருதுகிறீர்கள்? அந்த தேன் போன்ற சொல்லே நம்மை கொல்லாமல் கொன்றுவிடும் பழக வரும் எந்த மனிதனும் தூய  உள்ளன் போடுதான் பழக வருகிறார்.

                      என்று தெரியாது. அதனால் கருத்துணர்ந்து கற்றறிந்தார் தம் நட்பைக் கொள்ளவேண்டும் அந்த நட்பு எங்ஙனம் வளருமென்றால் கரும்பின் நுனியிலிருந்துஅடிவரைத் தின்பதை யொத்ததாகும் ஏனெனில் கற்றவர் தம் நட்பானது முதன் முதலில் சற்று சுவைக்கும் வகையில் இருக்காது போகப் போகத்தான் இன்பம் பயக்கக் கூடியதாகும். தீயவர் நட்பு அத்தகையதல்ல! முதலில் கரும்பினது அடியிலிருந்து நுனியை நோக்கிச் செல்வதைப் போன்று இதனை புலமை மிக்க சமண புலவரொருவர் நாலடியாரில் கூறுகிறார் இப்படி

                              "கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
                               குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்(கு)
                               எதிர் செலுத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்
                               மதுரம் இலாளர் நட்பு"


- நாலடியார்

                      எல்லோரிடமும் நட்பு கொள்வது நல்லது தான் ஆனால் அது நல்ல நட்பாக இருக்க வேண்டும் போலித்தனமான ஆயிரம் நட்பை விட உண்மையான ஒரு நட்பு இருந்தால் போதும்.


ஸ்ரீசந்திரா