நாட்டுப்புற
இலக்கியங்களில் கும்மிபாட்டும், ஒப்பாரியும் முக்கியமான ஒன்று பல
வருடங்களுக்கு முன்பு யாராவது இறந்தாலோ அல்லது பெண்கள் பூப்பெய்தினாலொ இந்த
இரண்டு நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில்
அது காணாமல் போய் வெகு காலமாயிற்று. எனக்கு 7- 8 வயது இருக்கும் போது
எப்படி ஒரே மாதிரி கும்மியடிக்கிறார்கள் என்று வேடிக்கைப் பார்த்ததுண்டு.
இப்போது அதே கும்மியடி பாடலைக் கேட்டுக்கொண்டே இதை பதிவு செய்கிறேன்.
பக்கத்தெருவில் கும்மியடியல் போய்க்கொண்டு இருக்கிறது. தூக்கத்தைத் தொலைத்து விட்டு தூரத்தில் இருந்து அதைக் கேட்டு ரசித்தப்படி தூங்காமல் இருக்கிறேன். அங்கே மட்டும் இன்னும் மாறாமல் அதை ஒரு வழக்கமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் இது. பழைய விளையாட்டுகள் கூட மாறிபோய் இருக்கின்ற காலத்தில் கும்மியடித்தலை இன்னும் வழக்கமாக கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே..?
பாட்டு சத்தம் குறைந்து விட்டது உறங்கச் சென்றுவிட்டார்கள் போலும். சரி, நானும் உறங்க செல்கிறேன்... "கானம் கேட்டு கண்மூட போய் கடைசியில் காணாமலே போனேன்" என்பதை போல, தொலைந்த தூக்கத்தை இனி வலுக்கட்டாயமாக வரவழைக்க வேண்டும்..!

திருநங்கைகளை கேலிபடுத்தி அவர்களையே அதற்கு
ReplyDeleteதுணையாக்கிய "கும்மிப்பாட்டை ரசிக்கிறார்கள் இன்றைய வர்க்கத்தார்"
அக்காலத்தார் எப்போதும் அதிசய பிறவிகள் தான்
#கும்மிப்பாட்டு
திருநங்கைகளை
Deleteகேலி செய்வதாக நான் அறிந்தது இல்லை.சினிமாவில் மட்டுமே அப்படி
காட்டுகிறார்கள் நிஜத்தில் அல்ல. தங்கள் வருகைக்கு நன்றி.