Sunday, 15 February 2015

மாற்றம்

உன்...
நினைவுகள் வரும்போதெல்லாம்
நிலவைப் பார்த்து - நான்
ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்..!

உன்னைப் போலவே - அதுவும்
சில நாள் வளர்வதும்
சில நாள் தேய்வதுமாக இருக்கிறது
நீ செய்கின்ற அதே தவறை
நிலவும் செய்வதால்
நீதான் நிலவோ என்று
எண்ணிவிட்டேன் - இனி
வெகு விரைவில் உனை
 மறக்கக் கூடும் ஏன் தெரியுமா?



நிலவுக்கும் உனக்கும் பெரிய
வித்தியாசம் ஒன்றுமில்லை ஆனால்
தூரத்தில் இருந்தாலும்
நான் போகுமிடமெல்லாம்
என் கூடவே வருகிறது ஆனால்
நீ அப்படி இல்லை என்று
நீயே அறிவாய்..!

கார்காலம்
இலையுதிர்காலம்
வசந்த காலம் - என
காலங்களே மாறுகிறது
நீயும் மாறித்தான் போனாய்
இன்று எனக்கு இலையுதிர்காலம்
யார் கண்டார்கள்?
நாளையே வசந்த காலம் வரலாம்...

 உனக்காக நான் இழந்த
 நாட்கள் நிமிடங்கள்
 கூட பயனுள்ளதாக இருக்கும்

 தடாகத்தில் இருக்கும்
 தாமரை இலையில் அதன்
 நீர் ஒட்டாதது போல் இனி
 நீயும் நானும்..!

No comments:

Post a Comment