Thursday, 12 February 2015

தஞ்சாவூர் சமையல் / முளைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:-

முளைக்கீரை - 1 கட்டு 
தக்காளி - 1 
பாசிப்பருப்பு - 50 கிராம் 
தேங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
பூண்டு - 1
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5

 செய்முறை :-

                கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காயோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பூண்டை உரித்துக் கொள்ளவும்.

            இப்போது ஒரு பாத்திரத்தில் கீரை, பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, சிறிது உப்பு , கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கரண்டியை வைத்து நன்றாக கடைந்து(மசித்து) அரைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும். இந்த முளைக்கீரையை தாளிக்க வில்லை ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்.

            இது சத்து நிறைந்தது. மூளைக்கும், அழகுக்கும் இந்த முளைக்கீரை மிகவும் நல்லது.

No comments:

Post a Comment