Monday, 16 February 2015

சிவராத்திரி

            சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர்

             மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து பகலில் இளநீரும் இரவில் துளசி தண்ணீரும் அருந்தலாம். முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருத்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் இரவு கண்விழித்திருந்து அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி பாராயணம் செய்து விரதத்தை முடிக்கலாம்.


              விரதம் இருக்கும் வேளையில் 108 சிவநாமங்களைச் சொல்லி துதிக்கலாம் முடியாதவர்கள் எட்டு திருநாமங்களையாவது சொல்லலாம்.

 அந்த எட்டு நாமங்கள்

 1. ஸ்ரீ பவாய தேவாய நம
2. ஸ்ரீ சர்வாய தேவாய நம
 3. ஸ்ரீ ஈசானாய தேவாய நம
4. ஸ்ரீ பசுபதயே தேவாய நம
5. ஸ்ரீ ருத்ராய தேவாய நம
 6. ஸ்ரீ உக்ராய தேவாய நம
 7. ஸ்ரீ பீமாய தேவாய நம
8. ஸ்ரீ மஹதே தேவாய நம

 யாமங்கள்

 1. யாமம் 6- 9 மணி வரை
 2. யாமம் 9 - 12 மணி வரை
 3. யாமம் 12 - 3 மணி வரை
 4. யாமம் 3 - 6 மணி வரை

           சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.


          இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை உள்ள நேரம் லிங்கோத்பவ காலமாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் இந்த காலம் வரை விழித்திருப்பது மிகவும் நல்லது.

         மகா சிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து இரவு முழுவது கண் விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை பெறலாம்.

No comments:

Post a Comment