Saturday 7 February 2015

தஞ்சாவூர் சமையல் / இறால் சுரக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:-

 இறால் - 1/2 கிலோ
சுரக்காய் - சிறியது/ பாதி
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 முழு பூண்டு - 1
மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
 மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
 தேங்காய் - 1/2 மூடி
 புளி - சிறு நெல்லிக்காய் அளவு
 எண்ணெய்- தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:-

          இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காயோடு சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சுரக்காய், வெங்காயம், பூண்டு,தக்காளி ஆகியவைகளை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

           இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு, பூண்டு,வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நறுக்கிய சுரக்காய், இறால், சிறிது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, கரைத்த புளிதண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு 3 கொதி வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி மூடிவிட்டு சிறிது நேரத்திற்கு இறக்கவும்.

            இப்போது சுவையான இறால் குழம்பு ரெடி.

குறிப்பு:- (தேங்காயோடு சோம்பிற்கு பதிலாக சீரகத்தை சேர்த்து அரைத்தாலும் அது தனி ருசி. ஒரு நாள் அது ஒரு நாள் இது மாற்றி சமைத்துப்பாருங்கள். சமையலுக்கு ருசி நாம் சேர்க்கின்ற சேர்மானங்கள் தான்)

2 comments:

  1. நான் இந்தக் குழம்பைச் செய்து பார்த்துவிட்டு கருத்துத் தெரிவிக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete