Saturday 21 February 2015

தினசரி சிவன் வழிபாடு

                     ஞாயிற்றுக்கிழமை

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
 போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
 போற்றியோ நமச்சிவாய புறம் என்னப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி


               திங்கள் கிழமை

பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக் கசைத்து
 மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
 மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
 அன்னை உன்னையல்லாமல் இனியாரை நினைக்கேனே.

                         செவ்வாய்க்கிழமை

 நம் மானம் மாற்றி நமக்கருளாய் நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தனர் சேரும் அணிகாழி
 எம்மானை ஏத்தவல் லார்க்கு இடர் இல்லையே

                         புதன் கிழமை

சிவனோ டொக்குஞ் தெய்வந் தேடினுமில்லை
 அவனோ டொப் பாரிங்கு யாவருமில்லை
 புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
 தவனச் சடைமுடித் தாமரை யானே.


வியாழக்கிழமை

பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக் கசைத்து
 மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
 மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
 அன்னை உன்னையல்லாமல் இனியாரை நினைக்கேனே.


                        வெள்ளிக்கிழமை

மாசில் வீணையும் மாலை மதியமும்
 வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

                       சனிக்கிழமை

குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே.

No comments:

Post a Comment