ஊட்டி
மலைபகுதியில் கதிர்கள் மறைய தொடங்கியது வெள்ளை வேட்டி போர்த்தியது போல்
பனி பரவி கிடந்தது அந்த மலை உச்சியை நோக்கி இரு உருவங்கள் வேக வேகமாக
நடந்து சென்று கொண்டு இருந்தது அது ஒரு ஆணும் பெண்ணும்...
அப்போது இவர்கள் செல்லும் பாதையின் பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம்
கருப்பு கம்பளி போர்வையை போத்திக்கொண்டு ஒரு கையில் கம்புடனும் மறுகையில்
டார்ச் லைட்டுடனும் வந்து கொண்டிருந்தது.
"யாரது... யாரது... அங்க போறது கேக்குறேன்ல... நில்லுங்க" என்றவாறு விரைந்து வந்தது. யாரோ ஒருவர் தம்மை அழைக்கும் சத்தம் கேட்டு நின்றனர் இருவரும். கிட்ட நெருங்கி வந்த அந்த கருப்பு உருவத்திற்கு அறுபது வயதிற்கும்.
"யாருப்பா... நீங்க.. இங்கே எங்க போறீங்க இந்த நேரத்துல... என்ன ஒன்னும் பேசமாட்டேங்குறிங்க... இந்த இடம் ரொம்ப மோசமானது அங்க போககூடாது எதுக்காக அங்க போறீங்க என்றார் மறுபடியும்..."
மவுனமா இருந்த இருவரும் சிறிது தயக்கத்திற்குப் பிறகு அவன் பேசினான் "இவ அந்த மலை உச்சில ஏறி பார்க்கனும்னு சொன்னா அதான்" என்றான் எச்சில் விழுங்கியபடி.
"என்னப்பா... எனக்கே காதுல பூ சுத்துறீயா... உங்கள மாதிரி எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆமா என்ன விஷயம் காதல் தோல்வியா? உங்க மூஞ்சப் பார்த்தாலே தெரியுதே..." "உங்களுக்கு பதினெட்டு இருபது வயசு இருக்குமா இந்த வயசுல வாழ்க்கைன்னா என்னான்னு தெரியாது ஆனா காதல் மட்டும் வந்துருச்சு... ஏம்மா உன்ன எப்படியெல்லாம் உங்க அப்பா அம்மா வளர்த்திருப்பாங்க? இந்த ப் பையனைக் கண்டதும் உனக்கு பெத்தவங்கல மறந்து போச்சுல்ல.,. என்றவர் அவனிடம் வந்தார் ஏம்பா... பெத்தவங்க ஆசைகளை கொன்னுட்டு இந்தப் பொண்ண அழைச்சுட்டு வந்துட்டே... இந்தப் பொண்ணு உன்னை நம்பி வாழத்தானே வந்தா நீ சாக அழைச்சுட்டுப் போறியே இதுதான் நீ அவளுக்கு கொடுக்கிற பரிசா..."
"இல்ல நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சோம் அவ வேற மதம் நான் வேற மதம் அதான் எங்க காதலை ஏத்துக்கமாட்டாங்கன்னு இந்த முடிவு எடுத்தோம்"
"ம்...ம்... எல்லாம் உங்களச் சொல்லி குத்தமில்ல... நீங்க பார்க்கிற சினிமா அப்படி, அந்த ஹீரோ நேர் வகிடு எடுத்து தலைசீவினா நீங்களும் அப்படி செய்றீங்க, அவங்க காதுல கடுக்கன் ,கையில காப்பு, கழுத்துல ப்ளேடு போட்டா நீங்களும் அப்படியே செய்றீங்க... அந்த ஹீரோக்கள் செய்யுற நல்ல விஷயங்களை நீங்க ஏன்யா செய்யுறதுல்ல... அந்த நடிகன் கூட காசுக்குத்தான்யா அதை செய்யுறாங்க, ஆனா நீங்க காசு கொடுத்துப் பார்த்துட்டு எது செய்யக்கூடாதோ அதை செய்யுறீங்க... அவன் காதலிச்சு காதல் தோல்வில தற்கொலை பண்ணிகிட்டா கடைசில நீங்களும் தற்கொலை பண்றீங்க ஆனா அவங்க ஒரு படத்துல தற்கொலை பண்ணிட்டு, இன்னொரு படத்துல கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. நீங்கதான் அது புரியுமா காதல் கத்தரிக்கான்னு அலையுறீங்க. முதல்ல ஒரு வேலையை தேடுங்க அதுக்கப்புறம் கடைசி வரை அந்த பொண்ண வச்சு காப்பாத்த முடியுமான்னு யோசிங்க"
இதை ஏன் சொல்றேன்னா... எம்பொண்ணும் ஒருத்தனை விரும்பினா எங்ககிட்ட கூட சொல்லல நாங்க ஒத்துக்க மாட்டோம்னு நினைச்சு இதே இடத்துல தான் செத்துப்போனா. அப்ப இருந்து நான் இங்கதான் சுத்திகிட்டு இருக்கேன்.
எம்பொண்ணதான் என்னால காப்பத்த முடியல உங்கள எம்புள்ளையா நினைச்சு திருப்பி அனுப்புறேன். மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்குது. பெத்தவங்கள கலந்து ஆலோசிக்காமல் நீங்களா ஒரு தவறான முடிவெடுக்குறீங்க... உங்கள மாதிரி வயசுப்பசங்களுக்கு பெரிசுங்க மனசு புரியுறதுல்ல, நாங்க கொஞ்சம் உங்களை சீண்டி பார்ப்போம் அவ்வளவுதான். நீங்க ஒரு வேலையை தேடுங்க, நல்லா சம்பாதிங்க அந்த தைரியத்தோட போய் இந்த பொண்ணோட அப்பாகிட்ட பெண் கேளுங்க..." என்று சொல்லிவிட்டு அந்த ஒத்தையடி பாதையில் சென்று மறைந்தார்.
ஆய்ஷாவும் மாதவனும் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு அந்த மலையைவிட்டு இறங்கி நடந்தனர். வானத்து நிலா அவர்களுக்கு ஒளிக்கொடுத்து வழிக்காட்டி துணையாக கூடவே வந்தது.
**முற்றும்**

No comments:
Post a Comment