Tuesday 3 February 2015

ஆபாசம், வன்முறை தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவையானதா?

            மக்கள் சினிமாவை விட அதிகம் பார்ப்பது தொலைக்காட்சிதான். சீரியல்கள் பெண்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. முன்பு தொலைக்காட்சிகளில் ஆபசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர்களும் எதார்த்தத்தை சொல்கிறோம் என்று ஆபாசமாகவே எடுக்கிறார்கள். கதைக்குள் ஏன் ஆபாசம் வருகிறது? வெள்ளித்திரைகளும் சரி, சின்னத்திரைகளும் சரி ஆபாசத்தை நம்பியே எடுக்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது. ஆபாசத்தின் மூலம் வன்முறைகள் தூண்டப்படுகிறது. அதில் பேசப்படும் வசனங்கள் கூட குடும்பத்தோடு பார்க்கும் போது நெளிய வைக்கிறது. இதை தவிக்கலாமே, நீங்களும் குடும்பத்தோடு பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள் இதை கருத்தில் உணர்ந்து ஆபாசத்தை தவிர்க்க தணிக்கை செய்ய வேண்டும்.


              "கற்று தெரிவதில்லை மன்மத கலை" என்கிறார்கள் பிறகு எதற்கு இந்த ஆபாசங்கள்? காக்கை, குருவி, விலங்குகள் எந்த சினிமாவை பார்த்து காதல் கொள்கிறது. அதற்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்கு இல்லையா? மூன்றிவு, நான்கறிவு பறவைகளும, விலங்குகளும் தெரிகிறது இயற்கை புணர்ச்சி என்றால் என்னவென்று. ஆனால் கேவலம் மனிதன் தான், தான் செய்கின்ற விஷயங்களை திரையில் பார்க்க ஆசைப்படுகிறான்.

             அதிக அறிவுள்ள மனிதனுக்கு இது கேவலமாக இல்லை. அட பாவிகளா ஒரு அம்மாவும், பொண்ணும் உட்கார்ந்து ஒரு சீரியல் ஒரு சினிமா பார்க்க முடியவில்லை தலைகுனிய வேண்டியிருக்கு. எல்லாம் தெரிந்தவன் மனிதன் ஆறு அறிவு கொண்டவன் மனிதன். ஆனால் விலங்குகளை கூட மனிதனோடு ஒப்பிட்டு பேச முடியாத நிலையில் இருக்கிறோம்.

                சினிமாவுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை அவசியம் தேவை. தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பு செய்யுங்கள் ஆபாசத்தை திரையில் காட்டினால்தான் அது என்னவென்று மனிதர்களுக்கு தெரியுமா? அத்தனை முட்டாள்களா மனிதர்கள். மனைவியோடு சேர்ந்து பார்க்க வேண்டிய காட்சியை மகளோடு சேர்ந்து பார்க்க வைக்கிறார்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை? நான்கு சுவற்றுக்குள் நடப்பதை அரங்கேற்றம் செய்கிறீர்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லை? இவை எல்லாம் வேண்டுமென்று மக்கள் கேட்கிறார்களா? கூட்டத்தை வரவழைக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதையில் செல்கிறார்கள்.

                சில வலைப்பூக்கள் கூட பக்க பார்வைகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆபாச செய்திகளை அதிகம் பதிவு செய்கிறார்கள். நண்பர்களே உங்கள் மனசாட்சிக்கு பயந்து பதிவு செய்வதற்கு முன் யோசியுங்கள். இதே வலைதளங்களில் உங்கள் பிள்ளைகளும் வரலாம். அவர்களின் தவறான போக்கிற்கு நீங்களும் ஒரு காரணியாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

              தேன்கூடு போன்ற சமூக வலைதளங்கள் ஆபாசம் கலந்த பதிவுகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள் நீக்கம் செய்துவிடுங்கள். அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

             மக்களிடம் நல்ல செய்திகளை கொண்டு போக நாம் முன்னோடியாக இருப்போம். தணிக்கை சினிமாவுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி இணையதளங்களுக்கும் அவசியம் தேவை. 

2 comments:

  1. உங்களுடைய கேள்விக்கு நீங்கள் எழுதியதே பதில்

    இந்த ஆபாச உடை எப்படி வந்தது? யாரால் வந்தது? சேலையும், தாவணியும் அணிந்த பெண்கள் இன்று மாடர்ன் துணி அணிவது ஏன்? பெண்களுக்கு நவநாகரிக உடை மீது மோகம் எப்படி வந்தது? சினிமாதானே இன்று அந்த சினிமாத்துறை சார்ந்தவர்களே ஜீன்ஸ் உடை அணிவதால்தான் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள் பிறகு ஏன் பெண்களுக்கு அரைகுறை ஆடை உடுத்தி நடிகைகளை ஆட வைக்கிறார்கள்?

    ReplyDelete
  2. பாலியல் குற்றங்கள் ஆடையினால்தான் ஏற்படுகிறது என்று ஒரு நாளும் சொல்லாதீர்கள்... இப்போதெல்லாம் பாலியல் தொல்லை யாருக்கு அதிகம் ஏற்படுகிறது தெரியுமா? பச்சிளம் குழந்தைகள், வயதான கிழவிகள் இவர்களைத்தான் தூக்கிக்கொண்டு போகிறார்கள் இதற்கு என்ன சொல்லப்போறீங்க

    ReplyDelete