என் எழுத்துக்கள் அத்தனையும்
உனக்காக படைக்கப்பட்டவை
நீயோ வாசகனாக வந்து வாசித்து
ஏனோ தானோவென்று
விமர்சித்து விட்டு போகிறாய் ..!
இனி உனை நினைத்து
ஒரு போதும் தீண்டாது
என் பேனா..!
வெள்ளை காகிதங்கள்
வெற்றிடமாய் கிடக்கட்டும்
என் மனதைப் போல..!
குற்றவாளியின் தீர்ப்பில்
உடைக்கப்படும் பேனா
முனைபோல் உன் நினைவுகளை
உடைத்தெறிகிறேன் -இது
உனக்கான தண்டனை அல்ல
எனக்கான தண்டனை..!
உனக்காக படைக்கப்பட்டவை
நீயோ வாசகனாக வந்து வாசித்து
ஏனோ தானோவென்று
விமர்சித்து விட்டு போகிறாய் ..!
இனி உனை நினைத்து
ஒரு போதும் தீண்டாது
என் பேனா..!
வெள்ளை காகிதங்கள்
வெற்றிடமாய் கிடக்கட்டும்
என் மனதைப் போல..!
குற்றவாளியின் தீர்ப்பில்
உடைக்கப்படும் பேனா
முனைபோல் உன் நினைவுகளை
உடைத்தெறிகிறேன் -இது
உனக்கான தண்டனை அல்ல
எனக்கான தண்டனை..!
No comments:
Post a Comment