Friday 2 January 2015

சிப்பிக்குள் முத்து ...

"கடைசி வரை
உன் கூடவே இருப்பேன்"
என்ற நண்பிகள்
 எப்போதாவது போன்
செய்து பேசுகையில்
கொஞ்சம் கோபம்
வரத்தான் செய்கிறது..!

 "போன் பண்ணினா
எடுக்கமாட்டியா எத்தனை
தடவை உனக்கு கால் பண்றது?"
என முதல் தடவை கால்
பண்ணிட்டு நம்மையே
திட்டும் நண்பிகளை
கோபத்தையும் மறந்து
சிரித்துக்கொண்டு
சமாளிக்க வேண்டியிருக்கு..!

பொய்கள்தான் உண்மையாகவே
பல நட்புக்களை வாழ வைக்கிறது
இல்லையென்றால் எப்போதோ
முடிந்திருக்கும் "இப்பதான் உன்னை
நினைச்சேன் கரெக்டா
கால் பண்றே" என பேச தொடங்கும்
நட்புக்கள் எத்தனையோ..!

இன்றும் நண்பிகளாக
இருக்க வாட்ஸ்அப்பும், வைபரும்
பேஸ்புக்கும் நமக்கு தேவையாக
 இருக்கிறது..!

எங்காவது வெளியூர் செல்கையில்
முன்பு சென்ற அதே இடத்தில்
தோழியின் புன்னகை முகம்
பிம்பங்களாய் தெரிகிறது..!

நம் அன்பை
வெளிக்காட்ட வைப்பதற்காக
"என்னை உனக்கு பிடிக்குமா?
நான் உன்கூட பேசலன்னா என்ன?
நீ என்னை மிஸ் பண்றீயா எவ்வளவு? "
என வேண்டுமென்றே
கேட்கும் நட்புகள் அதற்காக
மவுனமாக இருப்பது
கொடுமைடா சாமி..!

நாம் சொல்ல சொல்ல
கேட்டு ரசிப்பதும்
கண்டு கொள்ளாமல்
நடிப்பதும் வாடிக்கை
நண்பர்களும் ஒரு வகையில்
கடவுள்தான் திடீரென்று
வருவதிலும், சோதிப்பதிலும் மறைவதிலும்..!

சேர்ந்தே இறப்போம்
என்ற நண்பிகள்
சேர்ந்து கூட இருக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
மிக நெருக்கமாய்
நம் மனங்களில்..!

No comments:

Post a Comment