Wednesday, 21 January 2015

சீரியல் கொலைகள்

                நாம் டிவி பார்ப்பதே ஒரு ரிலாக்ஸ்காகதான் அதில் வரும் சீரியல்கள் நம்மை எரிச்சலூட்டுகின்றன. சன் டிவி ல தெய்வ மகள்னு ஒரு சீரியல் போகுது அதில் வில்லத்தனம் செய்பவர்கள் எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் ஆனால் எதிர்மறையாக நல்லவர்கள் மாட்டிக்கொள்வார்கள். நான் நினைக்கிறேன் சினிமாவில் சரியான நேரத்தில் ஹீரோக்கள் வந்து வில்லனை அடிப்பதும், ஜெயிப்பதும் வாடிக்கையாகிப்போனதால் ஒரு மாற்றத்திற்காக சீரியலில் வில்லத்தனம் ஜெயிப்பதாக காட்டுவோம் என பார்முலாவை மாற்றிவிட்டார்களோ?


              அடுத்து வம்சம் என்ற ஒரு சீரியல் இதில் எங்கிருந்து தான் இரட்டையர்கள் வருகிறார்களோ தெரியவில்லை. அத்தை இரட்டையர், மாமா இரட்டையர், இப்ப கதாநாயகியும் இரட்டை. இப்படி இன்னும் எத்தனையோ..? எப்பா சாமி கொடுமை தாங்க முடியல... இது எப்ப முடியும்?

            விஜய் டிவி ல புதுக்கவிதை ன்னு ஒரு சீரியல் ஆரம்பத்தில் கணவனும், மனைவியும் அத்தனை காதலோடு உலா வர்றாங்க, மனைவிக்காக தன் குடும்பத்தையே எதிர்த்து நிற்கிறான். ஒரு கட்டத்தில் மருமகளை விரட்ட அம்மா தனக்குத்தானே தீ வைத்துக் கொள்கிறாள். அதற்கு தன் மனைவி தான் காரணம் என்று போலிஸ் கைது செய்கிறது அதற்கு அவனும் ஆமாம் என்று ஒத்துக்கொள்கிறான்.

               இதில் கொடுமை என்னவென்றால் தன் அம்மா ஹாலில் தனக்குத்தானே தீ வைக்கும் போது தன் மனைவி வேறொரு அறையில் தன்னோடு இருந்தால் என்பது அவனுக்குத் தெரியும் அவள் கொளுத்தவில்லை என்பதும் தெரியும். ஆனால் இதுவரை தன் மனைவிக்கு துணையாக, உயிராக இருந்த கணவன் தன் மனைவி தவறு செய்யவில்லை என்று தெரிந்தும் கைது செய்ய அனுமதிக்கிறானாம் விவாகரத்துக்கும் சம்மத்திகிறானாம். ஹையோ... என்ன ஒரு மொக்கை... இந்த இடத்தில் கதை சொதப்பல்.

            இத பார்க்க பிடிக்காமல் டிவியை ஆப் பண்ண போனால் வீட்டில் இருக்கும் அம்மாக்கள் இந்த சீரியல்தான் பார்ப்பேன்னு அடம்பிடிக்கிறார்கள். இதனால் வீட்டில் சண்டையும் வருகிறது. நாமும் சேர்ந்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.


          "கடுப்பேத்துகிறார்கள்... மை லாட்..!"

1 comment:

  1. எனது வலைதளத்தை பார்வையிட்டு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் மனோ சாமிநாதன் அவர்களே

    ReplyDelete