Tuesday 6 January 2015

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

              இதுவரை ஆன்மிகம், மருத்துவம், கதை, கவிதை என்று படித்து உங்களுக்கு போரடித்திருக்கும். அதனால் இன்று சற்று வித்தியாசமாக உங்களை பேருந்தில் பயணிக்க அழைத்துச் செல்லப்போகிறேன்.

              பேருந்தில் பயணம் செய்ய எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்கு பேருந்தில் பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும்.      பேருந்தில் போகும்போது அதில் ஒலிக்கின்ற பாடல்கள் அனைத்தும் நம் மனதை ஏதோ ஒருவகையில் தொட்டுவிடும்.

             அந்த பாடல்களை கேட்டப்படி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சாரல் காற்று முகத்தில் வீச காதோரம் பறக்கும் முடியை ஒதுக்கியபடி ஓடும் வயல்களையும், மரங்களையும், கட்டிடங்களையும் கடந்து நம் மனதிற்கு பிடித்த நினைவுகளுடன் செல்வது ஒரு தனிசுகம் தான். பேருந்தில் நம் மனதிற்கு பிடித்த பாடல்கள் ஒலிக்கும் போது 100 பேர் இருந்தாலும் நான் தனித்து உணர்வேன்.


          நீங்கள் எப்படி சரி வாருங்கள் பாடல்களை கேட்போம்.


                மனசே என் மனசே
                நீ எங்கே போக பார்க்கிற
                மனசே மனசே நீ
                யாரை தேடி போகிற
                இத்தனை நாள் என்கூடயிருந்த
                இப்ப என்னைவிட்டு போவதெங்க
                உனக்கு யாரோட சகவாசம்
                நீ செய்யாத எனை மோசம்

            நம் மனசு நம்மைவிட்டு வேற எதையோ தேடிபோவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் அப்படி என்ன இருக்கிறது கேட்டு பாருங்கள்.   


      வெண்மதி வெண்மதியே நில்லு
      நீ வானத்து மேகத்துகிட்ட சொல்லு
      வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
     மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்

               இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சில நேரங்களில் நம் மனதிற்கு பிடித்தவர்கள் நெருங்கிச் சென்றால் விலகிச் செல்வார்கள்  விலகிச் சென்றால் நெருங்கி வருவார்கள் அதைதான் இந்த பாடல் சொல்கிறதோ...


              ஆயிரம் கோடி சூரியன் போலே
              மலர்ந்த காதல் பூவே

            இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை தொடுகின்ற வரிகள். இந்த பாடலை நான் பல முறைக் கேட்டுயிருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் தோன்றும் நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்

                  தவிக்கிறேன் தவிக்கிறேன்
                  உனது கனவாலே
                  துடிக்கிறேன் துடிக்கிறேன்
                  உனது நினைவாலே


               இந்த பாடல் ஏன் பிடிக்கிறது எதற்காக பிடிக்கிறது என்று தெரியவில்லை ஆனால் பிடித்திருக்கிறது. நினைவுகள் என்பது கற்பனைக்கு கால் முளைத்த கனவுகள். அதனால்தான் நினைவுகள் தனிமையை இனிமையாக்குகின்றன போலும்.

               இந்த பாடல்கள் அனைத்தும் பேருந்தில் பயணிக்கையில் கேட்டவை. அந்த பேருந்தில் இருந்து நான் இறங்கி வந்துவிட்டேன். ஆனால் இந்த பாடல்கள் என் மனதைவிட்டு இன்னும் இறங்கவில்லை.  என்ன வாசகர்களே உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

No comments:

Post a Comment