Saturday 10 January 2015

தஞ்சாவூர் ஸ்பெஷல்/வெங்காயக் குழம்பு

தேவையான பொருட்கள்:-

 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 தக்காளி - 3
 தேங்காய் - 1 கப்
 வெந்தயம் - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 தனியாத்தூள் - தேவையான அளவு
 புளி - சிறிய எலுமிச்சை அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப

 செய்முறை :-

                  சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கக்கூடாது இரண்டாக நறுக்கவும், தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும், தேங்காயோடு சோம்பு சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

                இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் வெந்தயத்தை சிவக்க வதக்கி, பின் நறுக்கிய வெங்காயத்தை கொட்டி வாசம் வரும் வரை வதக்கவும் அதன் பின் கறிவேப்பிலை, தக்காளி ஆகியவைகளை வதக்கி புளிகரைச்சலை ஊற்றி அதோடு மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை கொட்டி மூடிவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.

              இப்போது சுவையான மணமான வெங்காய குழம்பு ரெடி.

             இது காய்கறி இல்லாமல் ரொம்ப ஈசியா செய்யக்கூடியது. காரக்குழம்பு பிடிக்காதவர்களும் அந்த மணமும, சுவையும் சுண்டி இழுக்கும்.

             இந்த வாசம் எட்டு ஊருக்கு மணக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

No comments:

Post a Comment