Friday, 9 January 2015

அறிந்ததும் அறியாததும்

              காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழவேண்டும். இதை முதல் ஒழுக்கம் என ஆசாரக் கோவை கூறுகிறது. வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இந்துமத சாஸ்திரங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.00 மணியாகும். அப்போது எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு, நன்கு குளித்துவிட்டு, கடவுளை தியானிப்பது மிகச் சிறப்பாகும்.


              காலையில் எழுந்ததும் நமது கைகளை விரித்து உள்ளங்கைகளை பார்த்து, லட்சுமி, சரஸ்வதி, பராசக்தியை உள்ளம் உருக தியானிக்க வேண்டும். இவர்கள் மூவரும் நமது உள்ளங்கையில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம். மனித உடல் எந்த நிறத்தில் இருந்தாலும் உள்ளங்கைகள் வெளுப்பாகவே இருக்கும். நமது உள்ளங்கையில் கண்களையும், மனதையும் செலுத்தி தியானிப்பதன் மூலம் தீய பலன்களை கழிந்து நற்பலன்கள் உண்டாகும்.

              முன் கையில் இலட்சுமி, மத்தியில் சரஸ்வதி, கையின் ஓரத்தில் கௌரி இவர்கள் மூவரும் நம் கையில் வாசம் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment