என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Friday, 3 August 2018
Monday, 30 July 2018
காலனை வென்ற கலைஞர் மற்றுமொரு மார்க்கண்டேயன்
இப்போது வருகின்ற பதிவுகள் பார்க்கும் போது கலைஞரை திட்டித்தான் வருகிறது. என்ன காரணம் சொல்லி திட்டுகிறார்கள் தெரியுமா? அவருக்கு மூன்று மனைவிகள், ஊருக்கு ஒரு பொண்டாட்டி, 2g ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை இந்த மூன்றுதான் அவருடைய பெருங்குற்றமாக கருதப்படுகிறது.
மூன்று மனைவிகள் :
இவருக்கு மூன்று மனைவிகள் தவறதுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழாமல் மூன்று மனைவிகளை திருமணம் செய்தது தவறுதான். ஆனால் இன்று எத்தனை ஆண்கள் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்கிறார்கள் பிற பெண்களை அக்காவாகவும், தங்கையாகவும் எத்தனை ஜென்மங்கள் பார்க்கின்றார்கள்? அப்படி நினைத்திருந்தால் ஊருக்குள் ஏன் பாலியல் குற்றங்கள் நடக்குது?
மூன்று மனைவிகள் :
இவருக்கு மூன்று மனைவிகள் தவறதுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழாமல் மூன்று மனைவிகளை திருமணம் செய்தது தவறுதான். ஆனால் இன்று எத்தனை ஆண்கள் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்கிறார்கள் பிற பெண்களை அக்காவாகவும், தங்கையாகவும் எத்தனை ஜென்மங்கள் பார்க்கின்றார்கள்? அப்படி நினைத்திருந்தால் ஊருக்குள் ஏன் பாலியல் குற்றங்கள் நடக்குது?
Wednesday, 18 July 2018
ஆயுதம் ஏந்துவோம்
பெண்கள் இரவில் தனியாக செல்ல வேண்டாம்
முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம்
தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம்
உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்
வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம்
முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம்
தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம்
உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்
வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம்
Tuesday, 12 June 2018
யார் தமிழன்?
இன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ... அந்த காலக்கட்டம் மாறிவிட்டது. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் அதை வைத்து நிறைய உதவிகள் செய்யலாம். ஆனால் அந்தளவுக்கு யாருக்கும் மனசு இருப்பதில்லை. சில பேர் கொஞ்சம் வசதி இருந்தாலே இல்லாதவங்களுக்கு படிப்போ சாப்பாட்டிற்கோ கஷ்படுறவங்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்கள் ஆனால் பணத்தை கட்டி வைத்திருப்பவர்களுக்கு அந்தளவுக்கு மனசில்ல அதனால்தான் சிலர் மீது நமக்கு மிகுந்த கோபம் வருகிறது ஆத்திரம் வருகிறது அவரோடும் இவரோடும் ஒப்பிட்டும் பேசுறோம் திட்டுறோம் இது எல்லாரையும் நாம் சொல்வதில்லை ஒரு சில பிரபலமானவர்களைதான் இதற்கு காரணம் இருக்கிறது. சில கேட்கிறார்கள் அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சான் அவன் ஏன் மக்களுக்கு கொடுக்கணும்னு கேட்கிறான் நல்ல கேள்விதான் அதே நேரத்தில் அவனைவிட வசதியில் குறைந்தவன் மக்களுக்கு செய்கிறானே அவன் என்ன இளிச்சவாயனா? நமக்கு கேட்கத்தோணுவதில் தவறு இல்லையே..?
Monday, 9 April 2018
காவிரி மேலாண்மை வாரியமும் மவுன விரதமும்
ஒரு ப்ளாட் பாராத்தில தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை வைச்சிருக்கிறவன் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா பசிக்கு சாப்பிட சாப்பாடு இருக்காது கடைசி பருக்கையை கூட காசாக்க நினைச்சு கொடுத்திருவான். ஆறு மாசம் இரவு பகலா கஷ்டப்பட்டு நிலத்தை உழுது உரம் போட்டு மண்ணை பதப்படுத்தி விதையிட்டு பயிராக்கி அதை பிரிச்சு வேற இடத்தில நட்டு காத்திருந்தா அது வளர தண்ணி இருக்காது ஆத்துல தண்ணி வரும்னு காத்திருந்தா அது வராது அப்புறம் கடனை உடனை வாங்கி போர் போட்டு தண்ணி பாச்சி கதிர் அறுத்து வீட்டுக்கு கூட கொண்டு வராம களத்து மேட்டுலேயே விலை பேசி வித்துட்டு அந்த விவசாயி களைச்சி போயி ரேஷன் கடையில் புழுத்த அரிசியில் பழைய கஞ்சி குடிக்கிறவன் விவசாயி.
Wednesday, 24 January 2018
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சமர்ப்பணம்
உண்மையில் மனம் மகிழ்ந்து இந்த பதிவை இடுகிறேன்... வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களைப் பார்த்து முதலில் நாம் வெட்கப்பட வேண்டும் ஏன் தெரியுமா? முன்னாடி நாம சொல்வோம் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் போய் வசிக்கிறான் வெளிநாட்டில் போய் வசிக்கிறான்னு ஆனால் இன்றைக்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் சாதி்த்ததை தமிழ்நாட்டில் இருக்கும் நாம்மால் ஒன்றையும் அசைக்க கூட முடியல இதான் உண்மை. மலேசியா, சிங்கப்பூர் கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா இங்கெல்லாம் தமிழன் போய் வசித்தான் அங்கெல்லாம் இன்று தமிழ் தலை நிமிர்ந்து வாழ்கிறது. இங்கிருந்து போன ஒவ்வொரு தமிழனும் பச்சை தமிழன் அதனால் போன இடத்தில் தன் இனத்திற்காக தன் மொழிக்காக போராடி வெளிநாட்டிலே இன்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து அமர்ந்திருக்கிறான். ஆனால் நாம் தமிழ்நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்து, இங்கேயே படித்து ஒரு பயனும் இல்லையே...
Friday, 24 November 2017
மனதால் இணைவோம்
நாம் வெள்ளைக்காரர்களை ஒரு கொடுரமானவர்களால்தான்
புத்தகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா ஆனால் இப்போது அவர்களை காணும் போது அவ்வாறு தெரியவில்லை நான் பார்த்தவரை அவர்கள் மென்மையான இளகிய மனம் படைத்தவர்களாதான் தெரிகிறார்கள். சென்னை அடையார், பெசன்ட் நகர் பக்கம் அதிக வெள்ளைக்கார்கள் வசிக்கிறார்கள் அவர்கள் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை காணக் கூடியாதாக இருக்கிறது. நாய், பூனை, காகம் இவைகளுக்கு உணவு அளித்து கருணையோடு பார்த்துக்கொள்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம் அவைகளை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கிறோம். அது மட்டுமல்ல அவர்கள் யாரோடும் பேசும் போது கவனித்து இருக்கின்றீர்கள் சிரித்த முகத்தோடே பேசுவார்கள் அட்ரஸ் கேட்பதாக இருந்தாலும் சரி வேறு விஷயங்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்களின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் எப்படி இருக்கோம் என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே புரியும்.
புத்தகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா ஆனால் இப்போது அவர்களை காணும் போது அவ்வாறு தெரியவில்லை நான் பார்த்தவரை அவர்கள் மென்மையான இளகிய மனம் படைத்தவர்களாதான் தெரிகிறார்கள். சென்னை அடையார், பெசன்ட் நகர் பக்கம் அதிக வெள்ளைக்கார்கள் வசிக்கிறார்கள் அவர்கள் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை காணக் கூடியாதாக இருக்கிறது. நாய், பூனை, காகம் இவைகளுக்கு உணவு அளித்து கருணையோடு பார்த்துக்கொள்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம் அவைகளை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கிறோம். அது மட்டுமல்ல அவர்கள் யாரோடும் பேசும் போது கவனித்து இருக்கின்றீர்கள் சிரித்த முகத்தோடே பேசுவார்கள் அட்ரஸ் கேட்பதாக இருந்தாலும் சரி வேறு விஷயங்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்களின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் எப்படி இருக்கோம் என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே புரியும்.
Sunday, 17 September 2017
கண்ணில் பதிந்த காட்சிகள்
வெள்ளிக்கிழமை வந்தாலே பேருந்து நிலையங்கள் எப்போதும் நிரம்பி வழியும். அது போல் ஒரு நாள் நான் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தேன்... நிரமாத கர்ப்பிணி கூட வேகமாக நடந்தய விடுவாள் ஆனால் இந்த பேருந்துக்கள் நகர முடியாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நெடுஞ்சாலையில். அப்போது ஒரு தாய் இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏறினாள்...
Monday, 29 May 2017
சின்ன சின்ன ஆசையும் பசுமை புரட்சியும்
சிறுவயது முதல் எனக்கொரு ஆசை உண்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வகுப்பு 1ல் இருந்து 5 வரை படிக்கின்ற காலத்தில் வீட்டிற்கு எதிரே இருக்கிற தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை விதையிட்டு நாளொரு வண்ணமாய் அதை ரசித்து ரசித்து ஆடு, கோழி தீண்டா வண்ணம் பாதுகாத்து பள்ளி முடிந்து வந்ததும் அது எப்படி இருக்கிறது என்று ஓடிச்சென்று பார்த்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்வது வழக்கம்....
Thursday, 25 May 2017
முதுமையும் வறுமையும்
நண்பியின் ஊரில் திருவிழா நான் வந்தே ஆகவேண்டும் என்று கட்டாய அழைப்பு வேறு வழியின்றி சென்றிருந்தேன்... அதாவது இந்த அன்பு என்ற பெயரில் கொல்வார்கள் தெரியுமா அந்த மாதிரி. என் நண்பியின் வீட்டிற்குள் சென்றேன் அவர் வாயெல்லாம் பல்லாக வந்து என்னை "குட்டிமா...." என கைகளைப் பிடித்து வரவேற்றார். என்னை குட்டிமா என்றுதான் அன்போடு அழைப்பார். அங்கே இருந்த கட்டிலில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அவரின் பிள்ளைகள் சித்தி... எப்படி இருக்கின்றீர்கள் என்று ஓடி வந்து விசாரித்தார்கள்.. அப்போது எனது அருகில் ஒரு அம்மா வாட்ட சாட்டமாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு தெனாவெட்டு, திமிர் என்பார்களே அந்த மாதிரி. எனது நண்பி அவரை கைட்டி "இவங்க தான் பாக்யத்தம்மாள் ... நீ இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு இருப்பே இவங்க நம்ம ஊர்தான் இப்ப திருச்சியில் வேலை செய்யுறாங்க இரண்டு பையன் ஒரு மகள் "என்று அறிமுகம் செய்தார். அந்தம்மா என்னைப் பார்த்து சாதாரணமா ஒரு புன்னைகை செய்தார் ஏனோ அவரின் புன்னகையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அப்படியே என்னைப் பற்றி யும் சொன்னார் என் நண்பி "நீங்களும் ரேடியோவில் இவபேரை கேட்டு இருப்பிங்க இவளும் கவர்மென்ட் ஆபிஸ்லதான் வொர்க் பண்றா.. ஆனால் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேங்கிறா.. நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கம்மா " என்று சிரித்தப்படி என்னைப்பார்த்தார்.
Friday, 19 May 2017
உனதன்பில் நான் தொலைந்தேன்
நட்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் யாரும் மன நிம்மதியோடு இருக்க முடியாது. வீட்டில் பிரச்சினை, அலுவலகத்தில் பிரச்சினை, செல்லும் இடங்களில் பிரச்சினை என்றால் நாம் ஆறுதல் தேடி செல்கின்ற ஒரு இடம் நட்பு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையோடு வசிப்பவரும் சரி. கணவன், குழந்தைகள் என்று வசிப்பவர்களும் சரி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் நாடி செல்வது நட்பிடம் மட்டுமே...
Tuesday, 28 February 2017
விருந்து ம ரு ந்து
இந்த உலகத்திலே மனசு நிறைவதும் வயிறு நிறைவதும் சாப்பாட்டில் மட்டும் தாங்க முடியும். அந்த சாப்பாடு ருசியா இருந்தால் நமக்கு தேவாமிர்தம் அதுவே ருசியில்லாமல் இருந்தால் ஆழகால விஷம் தாங்க.... சில பேர் பசிக்காக சாப்பிடுவாங்க இருக்காங்க நானெல்லாம் ருசிக்காக சாப்பிடுற ஆளுங்க. நான் நல்லா சமைப்பேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நான் சமைச்சதே நல்லா இல்லன்னா சாப்பிட மாட்டேன்...
Friday, 10 February 2017
தமிழ்நாட்டில் எது குற்றம்?
ஜெயலலிதாவை 75 நாட்கள் யாரையும் பார்க்கவிடாது வைத்திருந்தது குற்றமில்லை...
Friday, 27 January 2017
கோக்கும் பெப்சியும் வேண்டா ம்
வணக்கம் நட்புக்களே....
நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.
நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.
Sunday, 22 January 2017
எது மிருகவதை...?
அன்று இந்த காளை இல்லை என்றால் விவசாயம் இல்லை. மாட்டை ஏர்பூட்டி உழுதால் தான் நாற்று நட்டு, கதிர் அறுத்து நாமெல்லாம் உட்கார்ந்து சோறு திங்க முடியும்... அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று, நெல்லை சாக்கில் கட்டி அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தானே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்பட்டது அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று...
Saturday, 21 January 2017
பெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்
ஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.
Friday, 23 December 2016
மனதோடு மனம்
சென்னைக்கு வந்த பிறகு என் மனதை கலங்க செய்த ஒரு விஷயம். எப்போதுமே நம் மனசுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இதை செய் இதை செய்யாதே என்று சொல்லும். அதே தான் நட்பு விஷயத்திலும் நாம் எல்லோரிடத்திலும் அத்தனை இலகுவாக பழகிட முடியாது காரணம் நம்பிக்கையின்மை ஏனெனில் யார் எப்படி என்று நமக்கு தெரியாது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று யாருக்கும் தெரியாது. அந்த ஜாக்கிரதை உணர்வால் சிலரை நாம் தவிர்த்து இருப்போம் நம்மை அறியாமலே அவர்கள் மனதை நாம் காயம் செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நினைத்து பார்க்கும் போது நாம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Friday, 16 September 2016
போராட்டத்தின் பயன் என்ன?
பந்த் என்ற பெயரில் கடைகளை முடுவது, பஸ்கள் ஓடாமல் நிறுத்தவது இதில் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அரசுக்கும் மக்களுக்கும் நஷ்டம் தான் கிடைக்கும். இதையே இரண்டு நாளைக்கு மின்சாரத்தை நிறுத்தி போராட்டம் செய்யுங்கள் ஏதாவது பலன் கிடைக்கும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படுவதோடு மக்கள் அதனால் ஏற்படு கஷ்டங்களை உணர்வார்கள்.
Tuesday, 30 August 2016
தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமங்கள் தூய்மை பெறுமா..?
தூய்மை இந்தியா... தூயமை இந்தியா... என்று அய்யா மோடி அவர்கள் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் என்ன பயன் யார் பயன் பெற்றார்கள் என்று அய்யா மோடி அவர்களுக்குத் தெரியாது. எத்தனையோ கிராமங்களில் வெளிப்புறங்களில்தான் இன்னும் மலம்கழிக்கிறார்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு அவர்கள் மலம் கழிப்பதை நிறுத்தி விடுவார்களா என்ன? ஏனெனில் அவர்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது இந்த சூழ்நிலையில் அவர்கள் எங்கே செல்வார்கள்...?
Friday, 29 July 2016
இரக்க குணம் யாருக்கு?
நான் வசிக்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி பிளாட் பாரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகே தான் அந்த பாட்டியின் இருப்பிடம். புங்கை மர நிழலில் கால் நீட்டிய படி அமர்ந்து இருக்கும். ஒரு பையில் சில துணிகள் அருகில் ஒரு தட்டு ஒரு டம்ளர் இதுதான் அந்த பாட்டியின் அசையும் அசையா சொத்துக்கள். நான் அந்த வழியாக செல்லும்போது அந்த பாட்டியை பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம். இன்று லேசாக மழை அந்த பாட்டி எங்கே தூங்கியிருக்கும் என்று சிந்தனையோடு சென்றேன்.
Subscribe to:
Posts (Atom)




