உண்மையில் மனம் மகிழ்ந்து இந்த பதிவை இடுகிறேன்... வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களைப் பார்த்து முதலில் நாம் வெட்கப்பட வேண்டும் ஏன் தெரியுமா? முன்னாடி நாம சொல்வோம் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் போய் வசிக்கிறான் வெளிநாட்டில் போய் வசிக்கிறான்னு ஆனால் இன்றைக்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் சாதி்த்ததை தமிழ்நாட்டில் இருக்கும் நாம்மால் ஒன்றையும் அசைக்க கூட முடியல இதான் உண்மை. மலேசியா, சிங்கப்பூர் கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா இங்கெல்லாம் தமிழன் போய் வசித்தான் அங்கெல்லாம் இன்று தமிழ் தலை நிமிர்ந்து வாழ்கிறது. இங்கிருந்து போன ஒவ்வொரு தமிழனும் பச்சை தமிழன் அதனால் போன இடத்தில் தன் இனத்திற்காக தன் மொழிக்காக போராடி வெளிநாட்டிலே இன்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து அமர்ந்திருக்கிறான். ஆனால் நாம் தமிழ்நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்து, இங்கேயே படித்து ஒரு பயனும் இல்லையே...
யார் மேடை போட்டு பேசினாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓடி நிற்கிறோம் அவன் கொடுக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடிப்புடிச்சு நிற்கிறோம் ஏன்..? நம் நாட்டில் சுயமா சிந்திச்சு முடிவெடுக்க முடியலையே ஏன்? தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாமல்தானே... தமிழனின் ஒற்றுமையை சீர்குலைக்க எவனோ எங்கிருந்தோ ஏவுகிறான் அது புரியாமல் தமிழர்கள் தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து மேடையில் பேசுகிறார்கள். அதன் பின்னே ஒரு கூட்டம் ஏன் எதுக்குன்னு தெரியாமல் போகிறார்கள். என்னக் கொடுத்தாலும் வாங்கி தின்னும் கூட்டம் என்று புரிந்து கொண்ட நரிகள் சதி செய்து வலையை விரிக்கிறது. இந்த வலையில் இருந்து தமிழன் மீள்வானா? கடவுளுக்கே வெளிச்சம்.
எல்லா மத கடவுளும் ஒற்றுமையா பூமிக்கு வந்தாலும் நம்மாளு கடவுளையே பிரிச்சு விட்டுருவாய்ங்க போல. அந்த வகையில் உண்மையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு நன்றியை பாராட்டையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். தமிழ்நாட்டில் முடியாத ஒரு விஷயத்தை பிழைப்பு தேடி சென்ற இடத்தில் தன்னை நிலை நிறுத்தி கொள்வது பெரிய விஷயம். தமிழன் செல்கின்ற இடம் பாருங்கள் எப்போதும் பசுமையாகவே இருக்கிறது. எங்கெல்லாம் பசுமை இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழன் இருக்கிறான் என்பதில் ஐயமில்லை... இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன் போன்ற நாடுகளில் மண்ணும் மரமும் ஈரத்தோடு இருக்கிறது. இங்கேயே வளர்ந்த தமிழனால் ஏனோ மண்ணையும் , மரத்தையும் காக்க முடியாமல் எந்த கொள்கையும் இல்லாமல் எதன் பின்னையோ ஏதும் அறியாமல் கண்மூடி தனமாக சென்று கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. நம்மைவிட வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே வீரன்கள், தமிழ்ப்பற்றாளர்கள், தமிழ் மொழியை நேசிக்கின்றவர்கள் என்று உறுதியாக சொல்லலாம். நம்மால் முடியாத விஷயத்தை இங்கிருந்து சென்ற தமிழர்களின் சாதனை பாராட்டுக்குரியதே... மனமிருந்தால் இது உண்மை என்று உங்கள் மனதிற்கு தோன்றினால் நீங்களும் பாராட்டலாம் தவறில்லை.
மனதில் பட்டது மறைக்காமல் உங்களோடு ஒரு பகிர்வு....

No comments:
Post a Comment