Thursday, 13 August 2026

பழங்காலத்தில் நாம் செய்த சமையல்

பழங்காலத்தில் நாம் செய்த சமையல் முறைகள் தான் இப்ப ட்ரெண்டிங்கில் இருக்கு அதாவது ,50,60,70,80 ,90s காலங்களில் நம் முன்னோர்கள் நாம் செய்த சமையல் அதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் இப்பதான் ட்ரெணட் ஆகுது. அதுல, கரண்டி ஆம்லெட்:  இது நான் சிறுவயதில் அதாவது 90 s ல விறகு அடுப்பு எரிஞ்சுகிட்டு இருக்கும் அதுல சோறோ குழம்போ வெந்துகிட்டு இருக்கும் அந்த நேரத்தில் பார்த்திங்கன்னா தேவையில்லாத பாத்திரங்கள் அதிகமா இருக்காது ஒரு எண்ணெய் சட்டி ஒரு குழம்பு சட்டி அப்படித்தான் இருக்கும் இப்ப கதையே வேற ஏழெட்டு எண்ணெய் சட்டி இப்ப வைச்சிருக்கோம் அப்ப இல்ல அந்த சமயத்துல விறகு அடுப்பு எரியும் போது அதுக்குள்ள கரண்டில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி அதுல முட்டைய கலக்கி அதுல ஊத்தி அவரசத்துக்கு போட்டு சாப்பிடுவோம் அப்படி கரண்டிய கரியாக்கி அது வீணாயுடுச்சுன்னு திட்டு வாங்கியிருக்கோம். அது அப்ப இருந்தே இருக்கு ஆனால் அது இப்ப புதுசா கண்டுபிடிச்ச மாதிரி டரெண்ட் ஆகிட்டு இருக்கு இது புதுசு இல்ல பழசுதான்னு இங்கே பதிவு பண்றேன். அடுத்து, தட்டு இட்லி இந்த இட்லி பார்த்திங்கன்னா அந்த காலத்துல எங்க அம்மாவோட அம்மா சமைக்கிற காலத்தில் இட்லி பானையெல்லாம் கிடையாதாம். அப்ப மண் சட்டியோ மண் பானையோ அதுல வாய்ப்பட்டில் வெள்ளைத்துணிய கட்டி அதுல இட்லி மாவை ஊத்தி ஒவ்வொன்னா எடுப்பாங்களாம். அதுதான் இப்ப தட்டு இட்லின்னு இப்ப பேமஸ் ஆகிட்டு புதுசா ட்ரெண்ட் ஆகுறது சந்தோஷம்தான் ஆனால் அது பழசுதான். அதே மாதிரிதான் இந்த கொட்டாங்கச்சி இட்லியும் அந்த காலத்தில் கொட்டாங்கச்சி பின்புறம் நல்லா சீவிட்டு ஆப்பையும் கிண்ணமாகவும் பயன்படுத்தினார்கள். இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் கொட்டாங்கச்சியில்தான் டீயே குடித்திருக்கிறார்கள் அப்ப அதுவும் புதுசு அல்ல பழசுதான்  மூங்கில் பிரியாணி : அந்த காலத்தில் காட்டு வாசிகள் சுரை குடுவை, இந்த மாதிரி மூங்கில்கள் வைத்துதான் பாத்திரங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆப்பிரிக்கா காடுகளில் வசிக்கும் இப்பவும் இந்த சுரை குடுக்கைை பயன்படுத்துகிறார்கள் தண்ணீர் அடைத்து வைப்பது, தேன் சேகரிப்பதுன்னு இந்த மாதிரி மரத்தால் ஆன மூங்கில்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கு..  அதையே ட்ரெண்ட் ஆக்கி விற்பனை ஜோரா நடந்துகிட்டு இருக்கு . இப்ப ட்ரெண்ட் ஆவதில் தவறில்லை ஆனால் பெரிய ஹோட்டல்களில் கொட்டாங்கச்சி இட்லி, மூங்கில் பிரியாணி, கரண்டி ஆம்லேட், தட்டு இட்லின்னு விலை அதிகம் வைத்து விற்பதுதான் தவறு. இயற்கை உணவு நல்லதுதான் விலைவாசிதான் அதிகமாக இருக்கிறது. பழசு திரும்ப வந்தாலும் அதில் பெரிசா காசு பார்க்கிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதைவிட கொடுமையான விஷயம் என்னான்னா எந்த பாத்திரத்தில் செய்றோமோ அந்த பாத்திரத்தின் பெயர் அந்த கறிக்கு முன்னாடி வந்துவிடுகிறது. மண்சட்டி மீன் குழம்பு, கல் தோசை, தவா பிரியாணி, பானை பிரியாணி, ஹா..ஹா... இப்படி ஒரு வியாபாரம்.. ஒன்னும் சொல்றதுகில்ல.. நான் ஏதாவது விட்டிருந்தால் நீங்க சொல்லிட்டு போங்க மக்களே...

Tuesday, 4 August 2026

திருப்பதி போனால் திருப்பமாமே

திருப்பதிக்கு யாரும் அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியாதுன்னு பொதுவா எல்லோரும் சொல்வாங்க. சரி நாம போவோமேன்னு ஒரு பிளான் போட்டேன் திருப்பதி போனால் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் காலஹஸ்தி அப்ப திருப்பதி போகலாம்னு கூப்பிட்டா ப்ரண்ஸ் வருவாங்க காலஹஸ்தி என்றால் யோசிப்பார்கள் அதனால் திருப்பதி போகலாம்னு ப்ரண்ஸ் கிட்ட சொன்னேன் அவங்களும் ஓகே சொல்லியாச்சு நாங்களும் கிளம்பிட்டோம். இரயிலில் பயணம் அதுவும் ஆந்திரா போறோம் அடுத்த மாநிலத்துக்கு போறோம் இதுவரை தமிழ்நாட்டை தாண்டியது இல்லை அதுல ஒரு சந்தோஷம். இரயிலில் ஒருவழியா இடம் பிடிச்சு உட்கார்ந்தாச்சு மகளிருக்குன்னு ஒதுக்கப்பட்ட கோச் நாங்க உட்காருவதற்கு வசதியா இருந்துச்சு.
திருப்பதி போய் இறங்கியாச்சு கீழேயே தங்கும் விடுதி இருந்துச்சு ஐடி புரூப் காமிச்சு ரூம் எடுத்தாச்சு அப்போ அங்கே என்ன சொன்னாங்கன்னா கேமரா,போன் மேல கொண்டு போகாதிங்க உள்ளே அலோவ்டு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க நாங்களும் ரூம்லேயே வைச்சுட்டு போய்ட்டோம் திருப்பதி போய் ஒரு போட்டோ கூட எடுக்கல ஆனால் இப்ப பாருங்க ரீல்ஸ் வரைக்கும் அங்கே எடுத்துப் போடுறாங்க அது எப்படின்னு தெரியல.. நாங்க போனது 2013 ல் அப்ப அப்படித்தான் ரூல்ஸ்.. மலையில் நல்ல தார்சாலை தான் பஸ் வேன் எல்லாமே போகுது மலை ஏறுவதற்கு நிறைய வசதிகள் இருந்துச்சு ஆனால் என்னால் ஏனோ மேல ஏறுவது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சதுரகிரிக்கு போகுது எனக்கு அந்தளவுக்கு கஷ்டம் தெரியல கரடுமுரடான பாதை அதில் ஈசியா ஏழு மலை கடந்த எனக்கு இந்த திருப்பதி ஏழு மலையில் ஏற முடியல காரணம் தெரியல ஒரு வேளை நாம சிவ பக்தை என்று பெருமாளுக்கு தெரிஞ்சிடுச்சோ என்னவோ.. எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை மனசுக்குள்ள கஷ்டமா இருந்துச்சு காரணம் தான் புரியல பொதுவா கோவில்களுக்கு போனால் மனசு லேசாகும் ஆனால் திருப்பதி போன போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு காரணம் புரியல சந்தோஷமே இல்லாம போறேன் என் கூட வந்தவர்கள் நல்லா ஜாலியா கோவிந்தா.. கோவிந்தா... ன்னு கோஷம் போட்டுக்கோண்டே முன்னேறி செல்கிறார்கள் என் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட கோவிந்தான்னு வரல.. அங்கே ஒவ்வொரு அறையாக அடைத்து அடைத்து போட்டு திறந்துவிடுவார்கள் நம்முடைய பாவங்கள் போகும் என்பது ஐதீகம் நாங்களும் அவ்வாறே சென்றோம் ஆனால் அளவு கடந்த கூட்டம் 300 ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றோம் ஒருவழியா சாமிய பார்க்கிற நேரம் வந்துச்சு ஆரத்தி காட்டப்போற சமயத்தில் ஒரு போலீஸ் என்னை இழுத்து அந்த பக்கம் விட்டாங்க பாருங்க என்னால ஆரத்தி சரியா பார்க்க முடியல. ஆனால் என் கூட வந்தவங்க ஆரத்தி நல்லா பார்த்தாங்க ஆனால் எனக்கு.மலை ஏறவும் கஷ்டமா இருந்துச்சு அதே மாதிரி தரிசனமும் கிடைக்காமல் போச்சு.. அப்புறம் அடிச்சு புடிச்சு லட்டு வாங்கிட்டு சில படங்கள் வாங்கிட்டு கீழே இறங்கிட்டோம். ரூமிற்கு போகும் போது என் ப்ரண்ட்க்கு ஒரு போன் வந்துச்சு காலேஜ்ல இருந்து நாளைக்கு உடனே காலேஜ் வரணும் என்று.. நானோ காலஹஸ்தி போகனும்னு நினைச்சிட்டு இருக்கேன் அந்த நேரத்தில் இப்படி ஒரு போன் அந்தபுள்ள உடனே கிளம்பி ஆகனும்னு அழுவுது அப்புறம் அவசரமா கிளம்பிட்டோ காலஹஸ்தி போகல.. பஸ் பிடிக்க பஸ் ஸ்டாண்ட் வந்தா அங்கே ஏதோ கலவரம் வந்து பஸ் போகாதுன்னு சொல்லிட்டாங்க கடைசியா ஒரு பஸ் எடுத்துச்சு அந்த பஸ்ல ஏறி வேற ஒரு ஊர் போய் அதன் பிறகு அங்கிருந்து பஸ் பிடிச்சு ஊருக்கு வந்தோம்.. திருப்பதி போய் வந்தால் திருப்பம் என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு மொட்டையாச்சு பொருளாதார சிக்கல் கையில் காசு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன் அதன் பிறகு நான் வாங்கி வந்த பெருமாள் படங்களை என் பூஜை அறையில் இருந்து அகற்றினேன் அடுத்ததா இனி எந்த பெருமாள் கோவிலுக்கும் போகவே கூடாதென்று முடிவெடுத்தேன் ஆனால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தேன் திருப்பதி போனால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க அதை மட்டும் கடைப்பிடிக்கிறேன்.. இது என்னுடைய திருப்பதி அனுபவம் என்ன மாதிரி திருப்பதி போய் வந்து மொட்டையானவங்க யாராவது இருக்குறீங்களா? அதாவது எனக்கு சரியில்லை என் கூட வந்தவங்களுக்கு நல்லாதான் முன்னேற்றம் இருந்துச்சு.. நம்ம ராசிக்கு திருப்பதி ஒத்துவரல அவ்வளவுதான்.

Saturday, 1 August 2026

தேங்காய் உருண்டை மிட்டாய்

90s கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிறிய உருண்டையில் இருந்து பெரிய உருண்டை வரை கடைகளில் விற்பனை செய்வார்கள்.. தேங்காய் பர்ப்பி தட்டையாக இருக்கும் அது அச்சில் வடிவமைக்கப்பட்டது. சாதாரண தேங்காய் மிட்டாய் இல்லங்க சத்தானதும் கூட அந்த டைம்ல நாம சாப்பிட்டது எல்லாமே சத்தானதுதான்.. வறுத்த நிலக்கடலை, பட்டாணி, எள்ளுருண்டை, கடலைமிட்டாய் இந்த மாதிரி புரோட்டின் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் சிநாக்ஸ் பட்டியலில் இருந்தது இப்போது அப்படி இல்லையே... 




எனக்கு இந்த தேங்காய் மிட்டாய் எப்பவும் ஸ்பெஷல்தான் சின்னதில் இருந்து பெரிசு வரை வாங்கி டப்பாவில் அடைத்து வைத்துவிடுவேன் அதை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுவது வழக்கம் ஏன் பிடிக்குது எதுக்கு பிடிக்குதுன்னு காரணம் கேட்டால் தெரியாது ஆனால் பிடிக்கும். இப்ப தேங்காய் மி்ட்டாய் எத்தனை பேர் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்க ரொம்ப குறைவான குழந்தைகள்தான் சாப்பிடுவார்கள்.. 


இந்த மாதிரி சத்தான தின்பண்டங்கள் இப்போது யாரும் சாப்பிடுவதில்லை. நூடுல்ஸ், சாக்லெட், பிஸ்கட், பர்க்கர் என மாறிவிட்டார்கள்...இப்ப இருக்கிற குழந்தைகள் யாராவது அவிச்ச சோளம் சாப்பிடுறாங்களா பாருங்க அந்த சோளத்தில் எத்தனை சத்துக்கள் இருக்கிறது அதை கூட குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. பெற்றோர்கள் தயவுசெய்து சத்தான தின்பண்டங்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள்...அதுதான் ஆரோக்கியம்.