என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (36)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (16)
- மருத்துவம் (25)
Thursday, 13 August 2026
பழங்காலத்தில் நாம் செய்த சமையல்
Tuesday, 4 August 2026
திருப்பதி போனால் திருப்பமாமே
Saturday, 1 August 2026
தேங்காய் உருண்டை மிட்டாய்
90s கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிறிய உருண்டையில் இருந்து பெரிய உருண்டை வரை கடைகளில் விற்பனை செய்வார்கள்.. தேங்காய் பர்ப்பி தட்டையாக இருக்கும் அது அச்சில் வடிவமைக்கப்பட்டது. சாதாரண தேங்காய் மிட்டாய் இல்லங்க சத்தானதும் கூட அந்த டைம்ல நாம சாப்பிட்டது எல்லாமே சத்தானதுதான்.. வறுத்த நிலக்கடலை, பட்டாணி, எள்ளுருண்டை, கடலைமிட்டாய் இந்த மாதிரி புரோட்டின் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் சிநாக்ஸ் பட்டியலில் இருந்தது இப்போது அப்படி இல்லையே...
எனக்கு இந்த தேங்காய் மிட்டாய் எப்பவும் ஸ்பெஷல்தான் சின்னதில் இருந்து பெரிசு வரை வாங்கி டப்பாவில் அடைத்து வைத்துவிடுவேன் அதை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுவது வழக்கம் ஏன் பிடிக்குது எதுக்கு பிடிக்குதுன்னு காரணம் கேட்டால் தெரியாது ஆனால் பிடிக்கும். இப்ப தேங்காய் மி்ட்டாய் எத்தனை பேர் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்க ரொம்ப குறைவான குழந்தைகள்தான் சாப்பிடுவார்கள்..
இந்த மாதிரி சத்தான தின்பண்டங்கள் இப்போது யாரும் சாப்பிடுவதில்லை. நூடுல்ஸ், சாக்லெட், பிஸ்கட், பர்க்கர் என மாறிவிட்டார்கள்...இப்ப இருக்கிற குழந்தைகள் யாராவது அவிச்ச சோளம் சாப்பிடுறாங்களா பாருங்க அந்த சோளத்தில் எத்தனை சத்துக்கள் இருக்கிறது அதை கூட குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. பெற்றோர்கள் தயவுசெய்து சத்தான தின்பண்டங்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள்...அதுதான் ஆரோக்கியம்.
Friday, 31 July 2026
பராசக்தி மாரியம்மன் கோவில்
Thursday, 30 July 2026
தஞ்சை பெரிய கோவில்
சம்பா நண்டு எப்படி இருக்கும்
எத்தனை பேருக்கு இந்த நண்டு பிடிக்கும்..? இதன் சுவையை அடிச்சுக்கவே முடியாது அப்படி இருக்கும் எழுத்துக்களால் வடிக்கவே முடியாதே அந்தளவுக்கு இருக்கும்.. இதன் கால்கள்தான் ஹைலைட் இரண்டு கால்களும் நம் கை பெரிதில் இருக்கும் கால்களுக்கு தான் காசு.. வீட்டில் நண்டு சமைத்தால் இந்த கால் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதவர்கள் ஏராளம் 90s கிட்ஸ்க்கு இந்த அனுபவம் நிறைய இருக்கும்.. சிக்கனில் இப்பதான் லாலிப் பப்புன்னு கண்டு பிடிச்சு சாப்பிடாறாங்க ஆனால் நாங்க அப்பவே நண்டு காலில் லாலி பப்புன்னு சாப்பிட்டவங்க.
.இந்த நண்டின் நெறி கூடுதலான சதைப்பற்றோடு இருக்கும்.. சாப்பிடும் போது ஒருவிதமான இனிப்போடு இருப்பது போல் இருக்கும் அதை சாப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா தெரியும்.. அதாவது கடல் நண்டை விட இதுவும் கடல் நண்டு மாதிரிதான் இது கடற்கரையில் வளரக்கூடியது... கடித்தால் கையே துண்டாகும் அந்தளவுக்கு பயங்கரம் ஆனால் அதன் சுவையோ அதைவிட பயங்கரமா இருக்கும்...
அந்த காலை கடித்து சாப்பிடுவது ரொம்ப கஷ்டம் அறுவா கொண்டு உடைத்து சாப்பிடுவோம் அந்தளவுக்கு கெட்டி ஒரு பத்து வருசத்திற்கு முன் ஒரு நண்டு 50, ,100 க்கு வாங்கினோம் இப்ப ஒரு நண்டு 1000 க்கும் மேல விலை போகுது.. இப்ப இந்த நண்டு கிடைப்பது அரிது எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.... அதனால் நமக்கு கிடைப்பதில்லை அதோடு விலை நம்மை கிட்ட நெருங்க விடுவதில்லை... முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை அருகே உள்ள சுந்தரம் நசுவிணி ஆற்றிலும், ராஜாமடம் நசுவிணி ஆற்றிலும் இந்த நண்டுகள் மணலில் பதுங்கி கிடக்குமாம்... ஈசியா பிடித்து வருவார்களாம் எங்க மாமா அடிக்கடி சொல்வார்..
ஒரு நேரத்தில் ஈசியா கிடைத்த உணவுகள் இப்ப அதிக விலைக்கு விற்பதால் வாங்கி சமைப்பதற்கு முடிவதில்லை... யாரெல்லாம் இந்த நண்டு சாப்பிட்டு இருக்குறீங்க யாருக்கெல்லாம் பிடிக்கும்..? யாரெல்லாம் விலையின் காரணமாக சாப்பிடாமல் இருக்குறீங்க என்பதையும் சொல்லுங்க... கடல் உயிரனங்களில் அதிக சத்து உடையது நண்டு, இறால், திருக்கை, மத்தி, சூரை இவைகள் தான்...



