Wednesday, 29 July 2026

மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் துவரங்குறிச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இராம சமுத்திரம் என்று அழைக்கப்படும் துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த இடத்தில் செந்தாமரை குளக்கரையில் அமைந்திருக்கிறார் எம்பெருமான் ஈசன். இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி போன்ற பூஜைகள் தவறாமல் நடந்து வருகிறது. சங்கரர் இந்த குளத்தில் தாமரை மலர்களை பறித்து சிவனுக்கு பூஜை செய்ததாக வரலாறு சொல்கிறது. 
இந்த கோவில் பழுதடைந்த கிடந்த நிலையில் 2025 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. ஒரு வருட பூர்த்தியும் நிறைவு பெற்றது இந்த கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. துவரங்குறிச்சி செக்கடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி இடது புறமாக கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. 
இந்த கோவிலுக்கு அனைவரும் வருக இறை ஆசி பெருக.. 

வீ. சந்திரா , துவரங்குறிச்சி

No comments:

Post a Comment