என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (33)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Friday, 31 July 2026
பராசக்தி மாரியம்மன் கோவில்
துவரங்குறிச்சி அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் இங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை உடனே தருகின்ற அம்மன். குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் தருகிறாள். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உடனே குணமாகின்ற சக்தியை கொடுக்கிறாள். உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை உடனே பூர்த்தி செய்கின்ற ஒரு அம்மன் என்றால் அது பராசக்தி மாரியம்மன் தான். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இங்கே வந்து வேண்டி சென்றால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைத்தே தீரும் உறுதியாக நம்பலாம்.
சித்திரை மாதங்களில் 18 நாள் திருவிழா நடை பெறுகிறது. ஞாயிறு காவடி அன்று மாலை தீமிதியல் திங்கள் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும், செவ்வாய் தெப்பம், புதன் பல்லக்கு, ஒவ்வொரு நாள் மண்டகபடி அன்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் பெரும் திரளான மக்கள் கூடுகின்ற ஒரு திருவிழா என்றால் அது பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா என்று சொல்லலாம்.
இந்த கோவில் திறக்கும் நேரம்:
காலை 9 மணி மாலை 5 மணிக்கு மேல்..
இந்த கோவிலுக்கு செல்லும் வழித்தடம்:
பட்டுக்கோட்டையில் இருந்து 7 கிமீ மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. சாலை ஓரத்திலேயே கோவில் அமைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment