என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (33)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Thursday, 30 July 2026
தஞ்சை பெரிய கோவில்
சமீபத்தில் தஞ்சை பெரியகோவில் போயிருந்தேன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்றிருந்தேன்.. எனக்கு தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வைப்ரேசன் உண்டு. பிரதோஷ நாளில் செல்வேன் அதை சார்ந்த அனுபவம் வார்த்தைகளால் சொல்ல முடியாது மறக்கவும் முடியாது அந்தளவுக்கு சில அனுபவங்கள் உண்டு.
நான் போன நேரம் நடை சாத்தப்பட்டிருந்தது கோவிலை சுற்றி கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கு அது இந்த கோவிலின் தனி சிறப்பு சில கோவிலில் நடை சாத்திவிட்டால் கூட்டம் இருக்காது ஆனால் இங்கே அப்படியில்லை நடை சாத்தப்பட்டாலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் மன்னர் அரண்மனை போன்று.. சுற்றி சுற்றி வளைத்து வளைத்து போட்டு எடுத்தார்கள். எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓரிடத்தில் அமர்ந்து சிவபுராணம் படித்தேன் என் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து வழிந்தது. உடல்நிலைக்குறவு காரணமா அல்லது இவ்வளவு தூரம் வந்து இறைவனை காண முடியவில்லையே என்ற வருத்தமா தெரியவில்லை.. அதன் பிறகு கோவிலைச் சுற்றி வந்தேன் கருவூரார் சன்னதியில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன் அதன் பிறகு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்..
மாமன்னன் இராஜராஜன் கட்டிய கோவில் இன்று கம்பீரமாக காட்சியப்பது அந்த மன்னனே வான் உயர கம்பீரமாக நிற்பது போன்றே தோன்றுகிறது. தான் இறந்த பின்னும் அவன் புகழ் பரவி வருவதற்கு இதுவே சாட்சி.. மெய்சிலிர்க்கிறது அவரது ஆட்சியும் மெய்கீர்த்தியும்.. தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே....
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment