Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Sunday, 5 October 2014

கடிதம்

             நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அழகான உணர்வுதான் கடிதம். இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதவதே இல்லை கடிதம் எழுதுவது ஒரு அற்புதமான கலை. நகைச்சுவையாக எழுதும் போது சிரிப்பதும், உருக்கமான வரிகள் வரும்போது அழுவதும், கோபமான வார்த்தைகள் வரும்போது கோபப்படுவதும், கவலைப்படும் நேரங்களில் ஆறுதலை தருவதும் இவை அத்தனையும் ஒரு வெள்ளை காகிதத்தில் இருக்கும் எழுத்துக்கள் செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு கடிதத்தை படிக்கும்போதே நம் நண்பனோ/நண்பியோ நம் அருகில் இருப்பது போல தோன்றும் அதில் இருகின்ற சந்தோஷம் எதிர்பார்ப்பு ஏக்கம் இப்போது இருக்கும் ஈமெயில்,பேஸ் புக், எஸ்.எம்எஸ் எதிலும் கிடைப்பதில்லை. 

            இதில் இன்னொரு அழகான விஷயம் என்றால் இன்று கடிதம் வரப்போகிறது என்றால் போஸ்ட்மேன் வருவதற்கு முன்பே நம் மனதிற்கு தெரிந்துவிடும் இன்று ஏதோ வரப்போகிறது என்று இதுதான் ஒரு இனம்புரியாத பாசம் என்பது. கல்கியின் "அலைஓசை" நாவல் படித்தவர்களுக்கு தெரியும் அதில் இரண்டு தோழிகள் தங்கள் அன்பினை பரிமாறிக் கொள்வதை மிக அழகாக சொல்லியிருப்பார் கல்கி. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடிதம் மனதை பக்குவபட வைக்கிறது நேருவின் கடிதம் தான் இந்திராகாந்தியை வழி நடத்தியது தன் தந்தை அருகில் இல்லாத குறையை கடிதம்தான் போக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல ஆனால் சிலருக்கு கடிதம் எழுதுவதும் பிடிக்காது அதை வாசிக்கவும் பிடிக்காது 


           உறவுக்குள் கடிதம் எழுதிக்கொள்வது குறைவு ஆனால் இந்த நட்பை வளர்த்தது 
என்னவோ கடிதம் தான் இதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பேனா நட்பு முகம் தெரியாத போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பை பொழிவது ஆஹா அது ஒரு தனி சுகம் தான் (அது ஒரு சிலருக்கு வசனமாக கூட தெரியும் அதில் உள்ள அன்பு தெரியாது ஏனென்றால் நாம் எப்படியோ அப்படிதான் அவர்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்வதால்) 

          வானொலி நட்புக்கள் வாசகர்கள் தங்கள் அன்பினை நட்பினை பகிர்ந்து கொள்ளும்போது அது ஒரு தனி சந்தோஷம் தான் நிறைய இடங்களில் நட்புக்கள் உறவாகிப் போனதும் உண்டு உறவு பாலமாக இருந்த கடிதம் இப்போது இல்லாது போனது வருத்தமான ஒன்று தான் 


ஸ்ரீசந்திரா

Sunday, 27 April 2014

கடிதம்



அன்புள்ள... தோழி!
எப்படி இருக்கிறாய்?
நலம்தானே! ஆனால்
நான் நலமோடு இல்லை
நீ நலமோடு இருப்பாய்
என்று நினைக்கின்றேன்..!
காதலில் கருத்து வேறுபாடு
வருவதுண்டு நட்பில் வருமா?

வந்துவிட்டதே நீ வருத்தப்படுவாய்
என தெரிந்திருந்தால் நான் அந்த
கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்..!
என் மீது என்ன தவறென்று
இதுவரை நான் அறியேன்
கேட்க கூடாத கேள்வியா
கேட்டுவிட்டேன் இல்லையே
உன் கோபம் எனக்கு புரியவில்லை..!
ஒருவேளை என்னோடு பேச
உனக்கு விருப்பம் இல்லையா?
அதனால்தான் சின்ன விஷயத்தை
பெரிசுபடுத்தி விட்டாயா?
என் மனதை இப்படி யாரும்
கஷ்டப்படுத்தியது இல்லை
மனசு வலிக்கிறது..!

வேலை செய்ய முடியவில்லை
படிக்க முடியவில்லை
யாரோடும் பேச பிடிக்கவில்லை
எல்லோரிடம் எரிந்து விழுகிறேன்
தனிமையை விரும்புகிறேன்
தனியா அழுகிறேன்..!
உனக்கு எந்த கஷ்டமும்
இருக்காது ஏனெனில்
நான் உனக்கு பத்தோடு பதினொன்னு
இது தெரியாமல் நெருங்கி தொலைத்துவிட்டேன்
இப்ப நெருப்பில் வேகுகின்றேன்..!

நீ தந்த சந்தோஷத்தோடும்
நீ தந்த வலியோடும் என்றும்
உன் நினைவோடு நான்..!