Sunday, 5 October 2014

கடிதம்

             நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அழகான உணர்வுதான் கடிதம். இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதவதே இல்லை கடிதம் எழுதுவது ஒரு அற்புதமான கலை. நகைச்சுவையாக எழுதும் போது சிரிப்பதும், உருக்கமான வரிகள் வரும்போது அழுவதும், கோபமான வார்த்தைகள் வரும்போது கோபப்படுவதும், கவலைப்படும் நேரங்களில் ஆறுதலை தருவதும் இவை அத்தனையும் ஒரு வெள்ளை காகிதத்தில் இருக்கும் எழுத்துக்கள் செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு கடிதத்தை படிக்கும்போதே நம் நண்பனோ/நண்பியோ நம் அருகில் இருப்பது போல தோன்றும் அதில் இருகின்ற சந்தோஷம் எதிர்பார்ப்பு ஏக்கம் இப்போது இருக்கும் ஈமெயில்,பேஸ் புக், எஸ்.எம்எஸ் எதிலும் கிடைப்பதில்லை. 

            இதில் இன்னொரு அழகான விஷயம் என்றால் இன்று கடிதம் வரப்போகிறது என்றால் போஸ்ட்மேன் வருவதற்கு முன்பே நம் மனதிற்கு தெரிந்துவிடும் இன்று ஏதோ வரப்போகிறது என்று இதுதான் ஒரு இனம்புரியாத பாசம் என்பது. கல்கியின் "அலைஓசை" நாவல் படித்தவர்களுக்கு தெரியும் அதில் இரண்டு தோழிகள் தங்கள் அன்பினை பரிமாறிக் கொள்வதை மிக அழகாக சொல்லியிருப்பார் கல்கி. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடிதம் மனதை பக்குவபட வைக்கிறது நேருவின் கடிதம் தான் இந்திராகாந்தியை வழி நடத்தியது தன் தந்தை அருகில் இல்லாத குறையை கடிதம்தான் போக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல ஆனால் சிலருக்கு கடிதம் எழுதுவதும் பிடிக்காது அதை வாசிக்கவும் பிடிக்காது 


           உறவுக்குள் கடிதம் எழுதிக்கொள்வது குறைவு ஆனால் இந்த நட்பை வளர்த்தது 
என்னவோ கடிதம் தான் இதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பேனா நட்பு முகம் தெரியாத போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பை பொழிவது ஆஹா அது ஒரு தனி சுகம் தான் (அது ஒரு சிலருக்கு வசனமாக கூட தெரியும் அதில் உள்ள அன்பு தெரியாது ஏனென்றால் நாம் எப்படியோ அப்படிதான் அவர்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்வதால்) 

          வானொலி நட்புக்கள் வாசகர்கள் தங்கள் அன்பினை நட்பினை பகிர்ந்து கொள்ளும்போது அது ஒரு தனி சந்தோஷம் தான் நிறைய இடங்களில் நட்புக்கள் உறவாகிப் போனதும் உண்டு உறவு பாலமாக இருந்த கடிதம் இப்போது இல்லாது போனது வருத்தமான ஒன்று தான் 


ஸ்ரீசந்திரா

2 comments:

  1. உண்மைதான். இப்போது கடிதம் எழுதுவதெல்லாம் பழங்கதையாகி விட்டது. நல்ல பதிவு

    ReplyDelete