தானத்திலே
சிறந்த தானம் அன்னதானம் அது மட்டும்தான் போதும் என்று சொல்லக்க கூடியது
மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த
தானம் என்கிறோம். தீபாவளி பண்டிகை வருகிறது அனாதை இல்லங்கள், முதியோர்
இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் அது சிறு தொகையாக
இருந்தாலும் அது அவர்களுக்கு பெரிய உதவி. நாம் இன்று 100 ரூபாய்
சம்பாதித்தால் அதில் ஒரு ரூபாய் தர்மம் செய்யுங்கள் மனதிற்கு நிறைவாக
இருக்கும் 1000 ரூபாய் சம்பாதிப்பவர் தாராளமாக பத்து ரூபாய்
தர்மம் செய்யலாம்.
அடுத்தவர்களுக்கு கொடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் அந்நிலையை கடவுள் நமக்கு வழங்கி இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள். வெறும் பரிதாபம் எந்த பயனும் அளிக்காது அவரவர் தகுதி தகுந்தார்போல் உதவிகளை செய்யதாலே போதுமானது. அதாவதி பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதன்படி நாம் செய்கின்ற உதவி சரியான நபருக்கு சென்றடைய வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். யாருக்கேனும் கொடுத்து பாருங்கள் உண்மையிலே உங்கள் மனதிற்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
வாழ்க்கையில் நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம் தேவையில்லாத எத்தனையோ செலவுகளை செய்கிறோம் அது ஒரு பயனுள்ள செலவாக இருக்கட்டுமே. நம்மால் ஒரு ஆசிரமம் கட்ட முடியுமா தெரியாது, ஒரு முதியோர் இல்லம் நடத்த முடியுமா தெரியாது ஆனால் அதை பெரிய மனதோடு நடத்துகிறவர்களுக்கு சிறு உதவியாக இருப்போமே இராமருக்கு உதவிய அணில் போல, என்ன சகோதர, சகோதரிகளே யாரேல்லாம் இப்பவே கொடுக்கப்போறிங்க?
அட கிளம்பியாச்சா... ஈகை குணம் உடையவர் இதை படித்த பின்னர் சும்மா இருப்பார்களா அந்த ஈசனின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்..!

No comments:
Post a Comment