Sunday, 5 October 2014

என் சிந்தனை சிதறல்கள்


            எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை விலங்குகளில் காளை அழகு, ஆண் மான் அழகு பறவைகளில் ஆண் மயில் அழகு, சேவல்அழகு ஆனால் மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்களை அழகு என்கிறார்கள்? இது ஒருபுறம் இருக்கட்டும் பெண்களை பூமி என்கிறார்கள் சாமி என்கிறார்கள் நதி என்கிறார்கள் கடல் என்கிறார்கள் நிலா என்கிறார்கள் தென்றல், தீ, பூ என்கிறார்கள் இப்படி எல்லா பெருமைகளையும் பெண்களுக்கு கொடுத்து பெண்மையை அசிங்கப்படுத்துகிறார்களே எப்படி?
       
            பள்ளி, கல்லூரி, பஸ், ஆட்டோ, கோவில்,பூங்கா, காடு, கரை, கம்மா, வாய்க்கால், சந்து பொந்து இன்டு இடுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் வன்முறைகள் நடக்கிறதே எப்படி? அப்ப பெண்கள் சாமியாக தெரியவில்லையா பூமியாக தெரியவில்லையா இவையெல்லாம் அப்ப எங்கே போயின? பெண்களை அழகு என்பது இதற்கு தானோ? பல பெருமைகளை கொடுத்து பொய்யா புகழ்ந்ததும் இதற்கு தானோ?

           அன்று அரசர்கள் காலத்தில் தாசி குலம் ஒன்று இருந்து வந்தது நாளடைவில் அதை ஒழித்துவிட்டார்கள் ஆனால் அதுவே சற்று மாறி விபச்சார விடுதியாக மாற்றி விட்டார்கள் இதை ஒழிக்க யாரும் இல்லாது போனது தான் ஆச்சரியமாக இருக்கிறது. சாமியான பெண்களை பூமியான பெண்களை விபச்சார அழகியாக அல்லவா வைத்து அழகு பார்க்கின்றோம்.

           மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் நாம் ஆன்மிகத்தைப் பற்றி ஆராய்கிறோம் வேதாந்தம் சித்தாந்தம் பற்றி விவாதிக்கிறோம் கருத்துரைக்கின்றோம் கலந்துரையாடுகிறோம் அதே நேரத்தில் விபச்சார அழகிகள் பக்கத்தில் போய் லைக்கும் செய்கிறோம். நாம் நமக்கும் உண்மையா இல்லை நம்மை சார்ந்தவர்களுக்கும் உண்மையா இல்லை ஆக நாம் பொய்யான உலகத்தில் இருக்கிறோம் பொய்யா பழகுறோம் பொய்யா வாழ்கிறோம் என்பது தான் உண்மை.

ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment