என்ன
மனிதர்கள் இவர்கள்? வலைப்பூக்களாக இருக்கட்டும் அல்லது பேஸ்புக்காக
இருக்கட்டும் ஒரு பதிவுகளை போடுவதற்கு அத்தனை கஷ்டமாக இருக்கிறது ஒவ்வோரு
தகவலையும் திரட்டி அல்லது படித்து அதிலிருந்து தேவையான விஷயங்களை எடுத்து
அது பலருக்கு சேர வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டோ
அப்லோடு செய்வது என்பது அவரவர் சொந்தமாக பதிவிடும்போது அதன் கஷ்டம்
தெரியும் ஆனால் சிலர் நோகாமல் நாம் போடும் பதிவுகளை அப்படியே எடுத்து
அவர்கள் வலைப்பூவில் சேர்த்து தன் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் அதை காணும்
போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அடுத்தவர் பதிவுகளை ஷேர் செய்து
கொள்ளலாம் தவறில்லை ஆனால் அடுத்தவர் பதிவுகளை தான் எழுதியது போல்
போட்டுக்கொள்வதுதான் வருத்தமாக இருக்கிறது. சில இடங்களுக்கு போகும்போது
அங்குள்ளவைகளை படம் பிடித்து சில உண்மைகளை கேட்டறிந்து அதன் பிறகுதான்
பதிவுகளை போடுகிறோம். ஆனால் சிலர் உள்ளம் கூசாமல் அடுத்தவர் பதிவுகளை
எடுத்து போடுவது "கோவிலுக்கு வெளியே கிடக்கும் அடுத்தவர்களின் செருப்புக்களை திருடி
போட்டுக்கொள்வதற்கு சமம்." வலைப்பூக்கள் என்பது அவரவர் சொந்த
பதிவுகளை எழுதுவதற்கு தானே தவிர அடுத்தவர் பதிவுகளை தான் எழுதியதுபோல்
போட்டுக்கொள்வதற்கு அல்ல ஒவ்வொரு பதிவுகளையும் போடுவதற்கு எத்தனை நேரம்
பிடிக்கிறது தெரியுமா நீங்கள் கஷ்டமே இல்லாமல் ஈசியாக எடுத்து
போட்டுக் கொள்கிறீர்கள்.நெட்கார்டு
போட்டு என்ன போடலாம் என்ன போடலாம்னு யோசிச்சு, தகவலை சேகரிச்சு லேப்டாப்பை
எடுத்துட்டு உட்கார்ந்தா, தினமும் இதான் உனக்கு வேலையான்னு அம்மா
திட்டுவாங்க, அதெல்லாம் ஓரங்கட்டிட்டு நினைச்சதை கை வலிக்க டைப் பண்ணி
போட்டுட்டு அது வா சகர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோண்ணு மண்டைய
பிச்சுகிட்டு நாங்க இருந்தால், நீங்க நோகமாக கை வலிக்காம எடுத்து உங்க
வலைப்பூவில் உங்க பெயரை போட்டுகிறீங்க அப்ப எங்களைப் பார்த்தா உங்களுக்கு
எப்படி தெரியுது? ஒரே பதிவு இரண்டு இடத்தில் இருந்தால் யார் எழுதியது என்று
எப்படித் தெரியும் அது தவறில்லையா? அடுத்தவர் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் மனதை
கவர்ந்திருந்தால் அதை எழுதியவர் பெயரோடு உங்கள் வலைப்பூவில்
சேர்த்துக்கொள்ளுங்கள் தவறில்லை அது அவரின் எழுத்து கிடைத்த மரியாதை அதை
விடுத்து தான் எழுதியதுபோல் போட்டுக்கொள்வது என்ன நியாயம் தயவுசெய்து
இனிமேல் இப்படி செய்யாதீர்கள் அது உங்களுக்குதான் அசிங்கம். சிவராம் என்பவர் எனது கட்டுரைகளை எடுத்து இருக்கிறார் 1. கற்றலின் பெருமை 2. எனது மாவட்டத்தின் பெருமைகள் இன்னும் யாரோடதெல்லாம் இருக்கிறது என்று பார்த்துகொள்ளுங்கள் அவரது இணைப்பு sivamindmoulders.blogspot.in / http:sivamindmoulders.blogspot.in
ஆம் சகேதாரி இவர்களை
ReplyDeleteகவிதைத் திருடன்
கட்டுரைத் திருடன்
பிறர் ஆக்கம் திருடுபவன்
என்று பெயர் கூறி.எழுதுவோம்.
எனக்குக் கருத்திடுவோருக்கு இதை நான் சொல்லுவேன்.
முகநூலிலும் போட்டுள்ளேன்.
சிவராம் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
வேதா. இலங்காதிலகம்.
இவர்களை
Deleteஇப்படியே விடக்கூடாது சகோதரி இது போன்றவர்களின் வலைப்பூக்களை
முடக்குவதற்கு வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் இவர்களை சும்மா
விடக்கூடாது