இந்த ஆபாச உடை எப்படி வந்தது? யாரால் வந்தது? சேலையும், தாவணியும் அணிந்த
பெண்கள் இன்று மாடர்ன் துணி அணிவது ஏன்? பெண்களுக்கு நவநாகரிக உடை மீது
மோகம் எப்படி வந்தது? சினிமாதானே இன்று அந்த சினிமாத்துறை சார்ந்தவர்களே
ஜீன்ஸ் உடை அணிவதால்தான் பெண்கள் பாலியல் வன்முறையால்
பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள் பிறகு ஏன் பெண்களுக்கு அரைகுறை
ஆடை உடுத்தி நடிகைகளை ஆட வைக்கிறார்கள்?
அட பாவிகளா..? அந்த காலத்தில் பத்து கஜம் புடவையை பாஞ்சாலி சுற்றிக்கொண்டு இருந்த போதே துயிலுறிந்தார்கள் அப்போதே இது தொடங்கி விட்டது. அது சரி, இதுவரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஜீன்ஸ் உடை தான் அணிந்திருந்தார்களா? "ஆட தெரியாதவன் மேடை கோணல்" என்று சொல்வதுபோல் குற்றங்களை செய்துவிட்டு அதற்கு காரணம் பெண்களே என்று ஏன் கூசாமல் பொய் சொல்கிறார்கள்? தன் தாயோ... தன் தமக்கையோ... ஜீன்ஸ் அணிந்திருந்தால் அவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபவார்களா..? கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு. காமம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு உண்டு ஆனால் எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணை கற்பழிக்க முயன்றதில்லை. அப்போ அந்த பெண்ணுக்குத் தெரிகிறது இது தவறு அது பாவம் என்று ஆனால் அது இந்த ஆண்களுக்கு தெரியாமல் போனது ஏன்...? "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்கிறார்கள் ஆண்கள் எதுவும் செய்யாமலே பெண்கள் தானாக ஆக்கி அழிக்கின்றார்களா? இதில் ஆண்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா? ஆபாசம் என்பது உடையில் இல்லை பார்க்கின்ற பார்வையில் இருக்கிறது. ஆண்களின் சிந்தையில் இருக்கிறது முதலில் அதை அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள் குற்றங்கள் தானாக குறையும். தன் அங்கம் தெரியும்படி பெண்கள் உடை உடுத்துவதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் அதனால் ஆபாசம் தூண்டப்படுகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், வீதியில் மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணை இந்த ஆண்கள் விட்டு வைப்பது இல்லை. இவ்வளவு ஏன் ஒரு பிச்சைக்காரக் வயதான கிழவியை கூட இந்த ஆண்கள் விட்டு வைப்பது இல்லை அப்படியிருக்க இந்த உடைதான் காரணம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? நீங்களே உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். ஒரு பேருந்தில் ஆபாசம் இல்லாது சேலை உடுத்தி அழகாக நிற்கும் ஒரு பெண்ணிடம்தான் ஒரு ஆண் உரசிக்கொண்டு நிற்கிறான் . முழுமையாக உடம்பை மறைக்கு உடை சுடிதார் அதை உடுத்திக்கொண்டு இருக்கும் பெண்ணிடம்தான் இருக்கைக்கு இடையில் கையை விட்டு இடையை சீண்டுகிறார்கள் அவர்களிடம் எந்த ஆபாசத்தை கண்டார்கள் இந்த காமூகர்கள். அரைகுறை ஆடை உடுத்தி செல்லும் பெண்களைதான் இந்த ஆண்கள் கிண்டல், கேலி செய்கிறார்களா? இல்லையே, நல்ல உடை உடுத்தி செல்லும் பெண்களைதானே சீண்டுகிறார்கள் இது அனைத்து ஆண்களுக்கு தெரியும் ஆனால் பெண்களே இதற்கு காரணம் என்று குற்றத்தை சுமத்தி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள். இந்திய அரசு பாலியல் வன்முறையில் ஈடுபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் அப்போதுதான் இந்த செயலை செய்ய தயங்குவார்கள் அதைவிடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த தேவையில்லை. பாலியல் வன்முறைக்கு மரண தண்டை என்று முதலில் அறிவியுங்கள் பிறகு குற்றங்கள் தானாக குறையும். இதை ஏன் இந்திய அரசு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது என்றுதான் புரியவில்லை. இந்திய அரசு இந்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

உண்மையை உரக்கச் சொல்லி இருக்கீங்க!
ReplyDeleteநன்றி.
கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி
Deleteஎந்த ஒரு ஆடையும் ஆபாசம் இல்ல. ஆனால் தூண்டுதல் என்பது தான் பிரச்சினையே. எப்போதும் பலாத்காரம் எளியவர் மேல் தான் நடத்தப்படுகிறது. தூண்டுபவர் வலியவர். எனவே உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட பின்பு அது எளியவர் மேல் பாய்கிறது. இதற்கு உடை மட்டுமல்ல. தூண்டபடும் எல்லாமே காரணம். மேலும் மனித மனதை தண்டனைகளால் மாற்ற முடியாது.
ReplyDeleteஆபாசத்திற்கு
ReplyDeleteஆடை ஒரு காரணமில்லை ஆனால் அதை ஒரு காரணமாக காட்டி கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டாது போல பேசுவதுதான் வருத்தமான விஷயம். மரண தண்டனை
வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது அதை நம் இந்தியாவிலும் வழங்கலாம்.
பாலியல் வன்முறைக்கு மரண தண்டனையை இந்திய அரசு சட்டமாக அமுல்படுத்த வேண்டும் .
ReplyDeleteஅப்போதுதான் தவறுகளை குறைக்க முடியும்
அருமை
செந்தில்குமார் மனித உணர்வுக்கு மதிப்பளித்து கருத்துரைத்தமைக்கு எனது நன்றிகள்
Delete@செந்தில்குமார்,
ReplyDeleteஇப்படிச் சொன்னவுடன் மனித உரிமை ஆட்கள் குறுக்கே பாய்ஞ்சுருவாங்களே:(
@ ஶ்ரீசந்த்ரா,
மரணதண்டனை விதிச்சதும் அதை உடனே நிறைவேற்றாமல் , பல வருடங்களா சிறையில் வச்சே... தினீ போட்டுல்லே வளர்க்கறாங்களே!
எங்க நாட்டில் (நியூஸி) மரணதண்டனை கிடையாது. இப்ப லேசாப்பெருகிவரும் குற்றங்களைப் பார்த்து, மரணதண்டனை இருந்தாத் தேவலாமுன்னு மக்கள் நினைக்கிறோம்.
துளசி
Deleteஅவர்களே மனித உரிமை உடனே பாய்ந்துதான் வரும். அது குற்றவாளிகளை காப்பாற்ற
மட்டும் தான் வருகிறது ஆனால் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டு கொலையுண்ட
பெண்ணுக்கு என்ன தீர்வு கொடுக்கும் இந்த மனித உரிமை கழகம் அப்ப இது மனித
உரிமை மீறல் இல்லையா? மனித உரிமைகழகத்தின் அடிப்படை நோக்கம் என்பது ஒரு
நிரபராதி சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதே ஆனால் குற்றம்
சுமத்தப்பட்ட ஒருவனை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறது என்றால் அது எந்த
வகையில் நியாயம்? நாம் தண்டனை வழங்காவிடில் அவன் செய்வது குற்றமில்லை
என்பது போலல்வா ஆகிறது. அப்போ குற்றவாளியின் உயர்தான் உயிர் பாதிக்கப்பட்ட
பெண்களின் உயிர் உயிர் அல்ல அப்படிதானே. நம் இந்திய அரசின்
சட்டத்திட்டங்கள் எதை நோக்கி பயணிக்கிறது என்றே புரியவில்லை.
Cut the penis of the culprit is the best punishment. He should live to endure the consequences.
ReplyDeleteS.Ramkumar.
Ramkumar Similarly, in a country were offering this punishment. but, we need to do so. To give a proper punishment
Delete