Sunday 31 August 2014

இலக்கியமும் அறவுணர்வும்

                 இலக்கை இயம்புவது இலக்கியம் குறிக்கோளைச் சுவைப்பட கூறுவது இலக்கியம் என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் இந்நான்கும் கொண்டது இலக்கியம் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்கிறது நன்னூல்.

                 பிறன்மனை நோக்காத பேராண்மையை இராமயணம் வலியுறுத்துகிறது இந்த இப்பிறவிக்கு இருமாந்தரைச் சிந்தையாலும் தொடேன் என்கின்றான் இராமன். பிறன்மனை நோக்கினான்
இராவணன் பெண்ணாசையால் பேரழிவை சந்திந்தான் மண்ணாசையால் மாபெரும் அழிவை சந்தித்தான் துரியோதணன் இதனை தெளிவாக விளக்குகிறது நூல்கள்.

பழந்தமிர் நாகரித்தையும் பண்பாட்டையும் பறை சாற்றுவதாக இலக்கியங்கள்
கூறுகிறது.

                                    "முந்தை இருந்து நட்போர் கொடுப்பின்
                                    நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"

என்கிறது நற்றினை

                                     "நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
                                     அல்லது செய்தல் ஓம்புமின்"

என்கிறது புறனாறு.

      
                    அறநூல்களுள் திருக்குறள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்கிறது. "பெறுமின் பெரியார் வாய்ச் சொல்" என்கிறது நாலடியார்.

                   "ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம்" என்கிறது முதுமொழிகாஞ்சி அறம் "செய விரும்பு" "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று ஔவையின் அமுத மொழிகள் கூறுகிறது. "நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு
இல்லை" என்கிறது வெற்றி வேட்கை.

                 சாதிவெறியும், சமயவெறியும் தலைவிரித்தாடுகின்ற இன்றைய காலக்கட்டத்தில் சமுதாயத்தை நன்னெறிப்படுத்த இக்கால இலக்கியங்கள் தொடர்ந்து வழிகாட்டுகின்றன. காலங்கடந்து நிற்கும் இலக்கியங்கள் நாளும் படிப்போம் அதையே கடைப்பிடிப்போம்.

                               புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
                              போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.

No comments:

Post a Comment