Wednesday 14 October 2015

முருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்

            சாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்தே தனித்தனியாக சொல்லப்படுகிறது. இப்போ நாம செய்யப்போறது முருங்கை கீரை சாம்பார்.

            இதை சிலர் பருப்பு மட்டும் சேர்த்து வைப்பார்கள் நான் இப்போது பருப்போடு தேங்காய் சேர்த்து வைக்கப் போகிறேன். பருப்பு இல்லாமலே தேங்காய் அரைத்து ஊற்றியும் வைக்கலாம். இதை சிலர் கீரைச்சாறு என்று கூட சொல்வார்கள் இதன் சுவையும் அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள்:-

துவரப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
முருங்கை கீரை - 1 கப்
கத்தரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு


செய்முறை:-

பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கூடவே மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வேக வைக்கவும். தேங்காயோடு சீரகத்தை சேர்த்து அரைத்துக்கொள்ளவும், இப்போது பருப்பு வெந்ததும், கத்தரிக்காய், கீரை, உப்பு, மிளகாய்த்தூள், புளி, அரைத்த தேங்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி வைத்துவிட்டு. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி மூடவும். இப்போது சுவையான முருங்கை கீரை சாம்பார் ரெடி.

இது, புரோட்டின் நிறைந்த உணவு மட்டுமல்ல இரும்பு சத்தும் நிறைந்தது.  

4 comments:

  1. இட்லிக்கு பொருத்தமான சாம்பார் .செய்து
    பார்க்கிறேன் .

    ReplyDelete
  2. இட்லிக்கா... ஹலோ இது சாதத்திற்கு தான் சரியா வரும்..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அப்போ இட்லிக்கு சரிவராதா? போச்சி அப்போ இட்லி கேன்சல்

      Delete
  3. முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணம்

    ReplyDelete